வடை போட்டு இப்படி ஒருமுறை சிம்பிளா 10 நிமிஷத்தில் சாம்பார் செஞ்சு பாருங்க திரும்பத் திரும்ப கேட்பாங்க!

vadai-sambar
- Advertisement -

வீட்டில் வடை சுட்டு வைத்திருந்தால் இது போல சிம்பிளா பத்து நிமிஷத்திலேயே சூப்பரான சாம்பார் வச்சி அசத்திடலாம்! விதவிதமான சாம்பார் வகைகளில் இந்த எளிமையான சாம்பார் ரொம்பவே சுவையாக இருக்கும். ஊறிய வடையுடன் கூடிய இந்த சாம்பாரை சுவைக்கும் பொழுதே அப்படி ஒரு ருசி இருக்கும். நீங்களும் இது போல வடையை பிச்சி போட்டு சிம்பிளா சாம்பார் எப்படி செய்யலாம்? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

வடை போட்ட சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – நூறு கிராம், வடை – 4, பூண்டு பல் – 4, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வர மிளகாய் – 7, கருவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய தக்காளி – ஒன்று, உப்பு – தேவையான அளவு, புளி – சிறு எலுமிச்சை அளவு.

- Advertisement -

வடை போட்ட சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் 100 கிராம் அளவிற்கு துவரம் பருப்பை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு 10 நிமிடம் ஊறிய பிறகு அதை குக்கரில் சேர்த்து பூண்டு பற்கள், கொஞ்சம் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். புளியை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணனலியை வையுங்கள். அதில் தாளிக்க தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் சீரகம், உளுந்து சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை, காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீங்கி கிள்ளி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கி வரும் பொழுது, பொடி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி மசிய வதங்கிய உடன் நீங்கள் குக்கரில் வேகவைத்த பருப்பை சேர்த்து விட வேண்டும். பருப்பை சேர்த்ததும் கரைத்து வைத்த புளி தண்ணீரை கொஞ்சம் போல் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.

குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் சுட்டு வைத்துள்ள வடைகளை துண்டுகளாக உதிர்த்து அதனுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் நன்கு கொதித்த பிறகு நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கினால் சுடச்சுட சூப்பரான வடை சாம்பார் தயார்! இதற்கு தொட்டுக்க கூட எதுவுமே தேவையில்லை! அந்த வடையையே தொட்டு சாப்பிடலாம், அவ்வளவு டேஸ்ட்டியாக இருக்கக்கூடிய இந்த சிம்பிலான வடை சாம்பாரை நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -