உங்கள் வீட்டின்‌ வடகிழக்கு மூலையில் தப்பித்தவறி கூட இந்த ஒரு பொருளை வைக்காதீர்கள். வீட்டில் வறுமையும் கஷ்டமும் வாட்டி வதைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

vasthu
- Advertisement -

ஒரு வீட்டிற்கு தலைவாசல் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு அந்த வீட்டினுடைய வாஸ்துவும் மிக மிக முக்கியமான ஒரு அங்கம்தான். ஒரு வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டில் இருப்பவர்களுடைய முன்னேற்றம் கட்டாயம் தடைபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஒரு வீட்டினுடைய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கக் கூடிய பகுதி வடகிழக்கு பகுதி என்றும் சொல்லலாம். இந்த வடகிழக்கு பகுதியில் நம்முடைய வீட்டில் ஒரு சில பொருட்களை வைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அது எந்தெந்த பொருட்கள் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

vasthu for study room

ஒரு வீட்டினுடைய வடகிழக்கு பகுதியில் இருக்க வேண்டிய பொருள் என்றால் அது நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் ஆக இருக்க வேண்டும். இருக்கக்கூடாத பொருள் என்றால் குப்பைக் கூடையும், துடைப்பமும், தேவையற்ற பொருட்களும் வடகிழக்கு மூலையில் பாரமாக இருக்கக் கூடாது. குறிப்பாக ஒரு வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய வடகிழக்கு மூலையில் குப்பை கூடையை வைக்கவே கூடாது.

- Advertisement -

ஒரு வீட்டினுடைய சமையலறையில் வடகிழக்கு மூலையில் குப்பைத் தொட்டியை வைப்பதன் மூலம் அந்த வீட்டில் தேவையற்ற பிரச்சனைகள் வரத்தொடங்கும். அதாவது நாம் ஒன்று நினைக்க, நாம் நினைப்பதற்கு எதிர்மாறாக சில விஷயங்கள் தொடர்ந்து நடைபெறும். மன குழப்பம் ஏற்படும். பெண்களின் மன நிலைமை சீராக இருக்காது. வீண் விரயம் உண்டாகும். பணவரவு தடைபடும்.

plant-in-kitchen

முடிந்தவரை சமையலறையில் குப்பை கூடையை வைப்பதை தவிர்த்துக்கொள்வது நல்லது. அப்படியே சமையல் கழிவுகளைப் போடவேண்டும், குப்பைக்கூடை சமையல் அறையில் இருக்க வேண்டும் என்றால் அந்த குப்பை கூடை, குறிப்பாக  சிவப்பு நிறத்தில் இருப்பது நமக்கு பல நன்மைகளைத் தரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சரி, அப்போது இந்த குப்பை கூடையை எந்த இடத்தில் தான் வைப்பது? வீட்டினுடைய தென்மேற்கு மூலையில் குப்பை கூடையை வைக்கலாம். சமையல் அறையிலும் தென்மேற்கு மூலையில் குப்பை கூடையை வைத்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. சமையல் அறையில் தென்மேற்கு மூலையில் தானியங்களை சேமித்து வைப்பது வீட்டிற்கு சுபிட்சத்தை தேடித்தரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

dustbin

நம் வீட்டு பூஜை அறைக்கு இணையான ஒரு இடம்தான் இந்த சமையல் அறை. பூஜை அறையை எப்படி பயபக்தியோடு சுத்தமாக பராமரித்து வருகிறோமோ, அதேபோல்தான் சமையல் அறையையும் பராமரித்து வரவேண்டும். முடிந்தவரை சமையலறையில் வாஸ்து ரீதியான எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வாஸ்து ரீதியான பிரச்சனைகள் இருக்கின்றது என்று உணர்ந்தால், அதை முடிந்தவரை உடனே சரி செய்து கொள்வது நம் வீட்டிற்கு நல்லது. உங்களுடைய வீட்டில் வடகிழக்குப் பகுதியில் குப்பை கூடையை வைத்து இருந்தால் அதில் மாற்றத்தைக் கொண்டு வந்துதான் பாருங்களேன். நிச்சயமாக உங்கள் வாழ்க்கைக்கு விடிவுகாலம் பிறக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -