வாகனத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க பரிகாரம்

car
- Advertisement -

உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த வேகமான உலகத்தில் நம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய இருச்சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கட்டாய தேவையாகிவிட்டது. இன்றைய காலத்தில் அனைவருமே வாகனங்களை சொந்தமாக வைத்திருந்தாலும், சிலருக்கு வாகனங்கள் அடிக்கடி பழுதுபடுதல், விபத்துகளில் சிக்குதல், திருடு போகுதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே ஒருவருக்கு வாகன யோகம் சிறப்பாக அமைய செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக வாழ்வளிக்கும் கிரகமாகிய சுக்கிரன், இரும்பு பொருட்களுக்கு அதிபதியாக இருக்கும் சனி ஆகியோர் பலம் பெற்றிருக்க வேண்டும். அது போலவே வாகனம் வாங்குகிற காலத்தில் ஜாதகருக்கு நடக்கின்ற கிரக திசை நன்மையான பலனை தரும் வகையில் இருக்க வேண்டும். ஏனெனில் பாதகமான கிரக திசை நடக்கின்ற போது புதிய வாகனங்கள் வாங்குவதால் பின்வரும் காலங்களில் விபத்து கண்டதை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

- Advertisement -

பாதகமான திசை ஜாதகருக்கு நடைபெறும் காலத்தில் வாகனம் வாங்கியே தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் ஜாதகங்களை ஆராய்ந்து அதில் நல்ல கிரக திசை நடைபெறும் நபர்களின் பெயரில் வாகனங்களை பதிவு செய்து வாங்குவதால் விபத்து கண்ட தோஷங்கள் நீங்கும்.

car

அதே போன்று வாகனத்தை வாங்கும் போது உங்களின் ஜென்ம ராசி, நட்சத்திரத்திற்கு ஏற்ற தினங்களில் சுப முகூர்த்த நேரங்கள் அல்லது சுக்கிர ஹோரையிலோ வாகனங்களை வாங்குவதால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் கண்ட தோஷங்கள் நீங்குவதோடு, வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகும் யோகத்தையும் கொடுக்கும்.

- Advertisement -

motor cycle bike

மாதத்தில் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் புதிய வாகனங்களை வாங்கலாம். மாதங்களில் வைகாசி, ஐப்பசி மாதங்களில் வளர்பிறை சுப முகூர்த்த தினங்களில் புதிய வாகனங்கள் வாங்கலாம். பொதுவாக சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களில் புதிய வாகனங்களை வாங்குவது உங்களுக்கு நன்மைகளை தரும்.

இதையும் படிக்கலாமே:
செவ்வாய் திசை காலத்தில் இதை செய்தால் என்ன பலன்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaganam vanga jothidam in Tamil. It is also called as Vahana yogam in Tamil or Sukran palan in Tamil or Vaganam vanga nalla naal in Tamil or Puthiya vaganam vanga in Tamil.

- Advertisement -