Astrology : ஜாதகத்தில் செவ்வாய் திசை நடக்கும் காலத்தில் இவற்றை கட்டாயம் செய்யுங்கள்

sevvai-bagawan
- Advertisement -

வீரம் மிக்க தமிழ் கடவுள் யாரென்றால் நம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது முருகப்பெருமான் ஆவார். பழங்காலங்களில் தமிழர்கள் முருகப்பெருமானை போர்க்கடவுளாகவே வழிபட்டனர். நவகிரகங்களில் செவ்வாய் பகவான் அம்சத்தை கொண்டவராக முருகன் இருக்கிறார். இந்த செவ்வாய் தான் ஒரு மனிதனுக்கு தைரியம், போர்திறன், பூமி மனை போன்றவை ஏற்பட காரணமாகிறார். அப்படியான செவ்வாய் பகவான் ஒரு மனிதனின் ஜாதகத்தில் ஏற்படுத்தும் செவ்வாய் திசை பற்றியும், அதற்கான பரிகாரங்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

sevvai

ஒரு மனிதனின் ஜாதகத்தில் செவ்வாய் கிரக திசை 7 வருட காலங்கள் நீடிக்கிறது. ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் அமையபெற்றவர்களுக்கு செவ்வாய் திசை காலத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் மற்ற கிரகங்களுடன் பகை மற்றும் நீச்ச கதி அடைந்திருந்தாலும், சுப கிரகங்களின் பார்வை பெறாமல் இருந்தாலும் செவ்வாய் திசை காலத்தில் அந்தத் ஜாதகர் உடல் ரீதியான பல துன்பங்கள் அனுபவிக்கும் நிலை உண்டாகும். எதிரிகள், ஆயுதங்கள் போன்றவற்றால் காயப்படுவது, மனதில் தைரிய குறைவு, பூமி சார்ந்த சொத்து விடயங்களில் சிக்கல்கள் போன்றவை ஏற்படும்.

- Advertisement -

மேலே சொல்லப்பட்ட பிரச்சனைகள் செவ்வாய் திசை காலத்தில் ஏற்படாமல் இருக்க ஜாதகப் படி செவ்வாய் திசை நடைபெறுகின்ற நபர்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோயில்களுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட வேண்டும். வருடமொருமுறை நாகப்பட்டினம் மாவட்டத்திலிருக்கும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம், பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

kantha sasti kavasam lyrics

செவ்வாய்க்கிழமைகளில் முருகன் மற்றும் செவ்வாய் பகவானுக்கு விரதமிருந்து வழிபட வேண்டும். ஆறு மாதம் அல்லது வருடத்திற்கொருமுறை ரத்த தானம் செய்வது மிகவும் சிறந்த பரிகாரமாகும். செவ்வாய் திசையின் கெடுதலான பலன்கள் ஏற்படாமல் இருக்க விரும்புபவர்கள் 3 முக ருத்ராட்சத்தை தங்கள் வலது கரம் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
சனி திசை பாதிப்பு பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sevvai dasa pariharam in Tamil. It is also called as Sevvai bhagavan in Tamil or Sevvai graham in Tamil or Sevvai graham valipadu in Tamil or Sevvai graham jothidam in Tamil.

- Advertisement -