வரும் திங்கள் (24/5/21) அன்று வைகாசி சோமவார பிரதோஷம் வீட்டில் இந்த சாதம் படைத்து விளக்கேற்றுங்கள்! குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

sivan-curd-rice

பிரதோஷம் என்றாலே சிவனுக்கு உரியது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். வருடம் முழுவதும் ஒரு பிரதோஷம் விடாமல் தவறாமல் சிவன் கோவிலுக்கு செல்பவர்களுக்கு மோட்சம் நிச்சயம் என்கிறது சிவபுராணம். பிரதோஷத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரதோஷங்களில் மிகவும் விசேஷமான பிரதோஷம் ஆக பார்க்கப்படுவது சோம வார பிரதோஷம் மற்றும் சனி மஹா பிரதோஷம் ஆகும்.

sunai lingam

சோம வார பிரதோஷம் என்பது திங்கள் கிழமைகளில் வரும் பிரதோஷம் ஆகும். சனி மஹா பிரதோஷம் என்பது சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மகா பிரதோஷம் என்று விசேஷமாக கூறப்படுகிறது. இந்த பிரதோஷங்கள் மற்ற தோஷங்களை விட சற்று மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவ்வகையில் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் பிரதோஷங்களில் முறையாக சிவ பெருமானை வழிபடுவதன் மூலம் ஒரு வருடம் பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

அவ்வகையில் வரும் திங்கள்கிழமை(24/5/2021) அன்று வைகாசி பிரதோஷம் வருகிறது. சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் பிரதோஷங்களில் சிவ வழிபாடு செய்வதும், சிவ நாமங்களை உச்சரிப்பதும் அதீதமான பலன்களை கொடுக்கும். வைகாசி மாதத்தில் வரும் இந்த சோமவார பிரதோஷத்தில் சிவ வழிபாடு செய்பவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

sivan-temple

எட்டு பிரதோஷங்கள் இந்த மாதங்களில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வருடம் முழுவதும் வரும் 24 பிரதோஷத்தில் கலந்து கொள்வதற்கு இணையாகும் என்கிறது சாஸ்திரம். எனவே வைகாசி மாதம் வரும் இந்தப் பிரதோஷத்தில் நாம் வீடுகளிலேயே எளிமையாக சிவபெருமானை துதித்து, விரதமிருந்து வழிபடலாம். இதனால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் பெருகும்.

சிவபெருமான் படம் வைத்திருப்பவர்கள் அல்லது லிங்கம், விக்ரஹம் போன்றவை வைத்திருந்தால் சோமவார விரதத்தை எளிதாக கடைபிடிக்கலாம். காலை முதல் பிரதோஷம் முடியும் வரை விரதம் இருந்து வழிபட வேண்டும். உணவு ஏதும் உண்ணாமல் உபவாசம் இருப்பவர்கள் அன்றைய நாளில் நல்ல ஒரு மனோதிடம் பெறுவார்கள். உபவாசம் இருக்க முடியாதவர்கள் பாலும், பழமும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிக்கலாம். அன்றைய நாள் முழுவதும் சிவநாமங்களை உச்சரிப்பதும், சிவ ஸ்தோத்திரங்களை படிப்பதும், கேட்பதும் ஆக இருக்க வேண்டும். மந்திரங்களை சொல்ல முடியாதவர்கள் ஒலி வடிவமாக வீட்டில் ஒலிக்க விடலாம். சிவ நாமங்களை காதாலும், வாயாலும், மனதாலும் உச்சரிப்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு நினைத்தது அப்படியே நடக்கும்.

curd-rice

இவருக்கு வீட்டில் நைவேத்தியம் வைக்க தயிர் சாதத்தை தயார் செய்து கொள்ளுங்கள். சுடச்சுட தயிர் சாதத்தில் திராட்சை, மாதுளை, கேரட், இஞ்சி, பச்சை மிளகாய், கடுகு, கறிவேப்பிலை எல்லாம் தாளித்து போட்டு வாழை இலையில் பிரசாதம் படைத்து சிவபெருமானுக்கு நெய்விளக்கு ஏற்றி தூப, தீப ஆராதனை செய்ய வேண்டும். அப்படி செய்யும் பொழுது சகல சவுபாக்கியங்களும் நமக்கு கிடைக்கப் பெறும். மாலையில் பிரதோஷம் முடிந்த பிறகு வீட்டில் இருக்கும் அனைவரும் பிரசாதத்தை பகிர்ந்து கொடுத்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். அன்றைய நாளில் முடிந்தால் தான தருமங்கள் செய்யலாம். அப்படி செய்ய முடியாத பட்சத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு உணவு படைத்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளலாம். வைகாசி மாத இந்த பிரதோஷத்தை தவறாமல் கடைபிடித்து அனைவரும் பலன் பெறலாமே!