நாளை விநாயகரை இப்படி வழிபாடு செய்தால், தீராத கஷ்டங்கள் தீருவது உறுதி. நீங்கள் எதிர்பார்க்காத ஒரு நல்லது உங்களைத் தேடி வருவதும் உறுதி.

vinayagar
- Advertisement -

விக்னங்களை தீர்க்கும் விநாயகர் வழிபாட்டை செய்வதற்கு உரிய தினம் சதுர்த்தி திதி. நாளை தமிழ் மாதங்களில் வைகாசி மாதம் நிறைவடைகின்றது. நாளைய தினம் திங்கட்கிழமை அன்று சதுர்த்தி திதியும் சேர்ந்து வருகின்றது. இந்த சதுர்த்தி திதியில் விநாயகரை பின் சொல்லப்படும் முறைப்படி உங்களுடைய வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாடு செய்தால், நிச்சயமாக உங்களுடைய கஷ்டங்கள் கூடிய விரைவிலேயே தீர்த்து வைக்கப்படும். நீங்கள் எதிர்பாராத ஏதோ ஒரு நல்லது நிச்சயமாக உங்கள் வீட்டு வாசலை தேடி வரும். நாளைய தினம் வீட்டில் இருந்தபடி விநாயகர் வழிபாட்டை எப்படி செய்வது. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

vinayagar

இன்றைய தினமே உங்களுடைய வீட்டினை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சில பேர் வீடுகளில் அசைவம் சமைக்கும் வழக்கம் இருக்கும் பட்சத்தில், இன்று இரவே உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து விடுங்கள். நாளை காலை எழுந்து தலைக்கு குளித்து விட்டு பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே விநாயகருக்கு தீபமொன்று ஏற்றி வைக்கவேண்டும்.

- Advertisement -

உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்க்க வேண்டும் என்று விநாயகரிடம் மனதார வேண்டிக் கொண்டு, விரதத்தை தொடங்குங்கள். நாளைய தினம் மாலை 6 மணிக்கு பூஜை அறையில் விநாயகரின் திருவுருவப் படத்திற்கு அறுகம்புல்லை சாத்திவிட்டு, விநாயகருக்கு பிடித்த பூரண கொழுக்கட்டை நிவேதனமாக வைத்து விநாயகர் முன்பு அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும்.

pillaiyar-manai

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்

- Advertisement -

இது விநாயகரின் காயத்ரி மந்திரம். நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாளைய தினம் இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது இந்த மந்திரத்திற்கு உண்டான பலனை இரட்டிப்பாக நம்மால் பெற முடியும். மந்திரத்தை உச்சரித்த பின்பு இறுதியாக தீப ஆராதனை காட்டி விநாயகர் வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். கட்டாயமாக 3 பிள்ளையார் குட்டு, 3 தோப்புக்கரணம் போட மறக்க வேண்டாம்.

pidi-kozhukattai1

விநாயகரிடம் இறுதியாக உங்களுடைய கஷ்டங்களை சொல்லி பூஜையை நிறைவு செய்த பின்பு, விநாயகருக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்துகொள்ள வேண்டும். சாப்பிடாமல் விரதம் இருப்பது என்பது மட்டும் அவர் அவருடைய உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது.

vilakku-pray

உடல் நிலை சரியில்லாதவர்கள் மூன்று வேளையும் சாப்பிட்டு சுத்தபத்தமாக, மனநிறைவோடு சதுர்த்தி வழிபாட்டினை செய்தாலும் தவறு கிடையாது. நாளையதினம் வரக்கூடிய வைகாசி மாத கடைசி தினமான சதுர்த்தி திதியன்று விநாயகர் வழிபாட்டை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டால் நிச்சயமாக அடுத்த 30 நாட்களுக்குள் நீங்கள் எதிர்பாராத நல்லது உங்கள் வாழ்க்கையில் நடக்கும். உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் படிப்படியாக குறைவது உறுதி என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -