நாளை வைகாசி அமாவாசை – இவற்றை செய்து மிகுதியான பலன்களை பெறுங்கள்

vaikasi-amavasai

சந்திரன் விண்ணில் இருக்கின்ற 27 நட்சத்திரங்களை கடந்து, பௌர்ணமி, அமாவாசை என்கிற இரு திதிகளை சேர்த்து ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. இதில் சந்திரன் முழுவதுமாக மறைந்து விடும் தினமான அமாவாசை தினம், பல ஆன்மீக செயல்களை செய்வதற்கு ஏற்ற தினமாக இருக்கிறது. அப்படியான ஒரு மிகச் சிறப்பான தினமாக வைகாசி அமாவாசை தினம் வருகிறது. இந்த வைகாசி அமாவாசை தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

tharpanam

வைகாசி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் வைகாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும்.

Hindu Marriage

வைகாசி மாதம் இறை வழிபாடு, விரதங்கள் மேற்கொள்ளும் ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த வைகாசி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் நிம்மதியற்ற நிலை நீங்கும். சுபிட்சங்கள் பெருகும். திருமணத்தடை, புத்திர பாக்கியமின்மை போன்ற குறைபாடுகள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி நல்ல லாபங்கள் ஏற்படும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் நிலை உண்டாகும். கடன், வறுமை நிலை போன்றவை ஏற்படாமல் காக்கும்.

இதையும் படிக்கலாமே:
அதிக தனலாபங்கள் கிடைக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaikasi amavasai in Tamil. It is also called as Amavasai valipadu in Tamil or Vaikasi matham in Tamil or Amavasai sirappu in Tamil or Vaikasi matha sirappugal in Tamil.