நாளை வைகாசி வளர்பிறை சஷ்டியில் இவற்றை செய்து மிகுதியான பலன் பெறுங்கள்

murugan

சஷ்டி என்றால் ஆறு என்பதை குறிப்பதாகும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிக்கு பிறகு ஆறாவது திதியாக வருவது சஷ்டி திதியாகும். பொதுவாக கார்த்திகை மாதத்தில் வருகிற கந்த சஷ்டி விரதத்தையே பலரும் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் வருடம் முழுவதும் அனைத்து மாதங்களிலும் வருகின்ற சஷ்டி தினங்களும் முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய சிறப்பான தினங்களாகும். அப்படியான ஒரு சிறந்த தினமாக வைகாசி வளர்பிறை சஷ்டி தினம் வருகிறது. இந்த வைகாசி வளர்பிறை சஷ்டி தினத்தில் முருகப் பெருமானின் அருளை பெற நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

kantha sasti kavasam lyrics

வைகாசி மாத வளர்பிறை சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.

அன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

Lord Murugan

இந்தப் வைகாசி வளர்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு பணியிடங்களில் தொழில் வியாபாரங்களில் இருந்து வரை நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும் சொத்து சம்பந்தமான வழக்குகளில் தீர்வு அல்லது நீதிமன்றங்களில் சாதகமான தீர்ப்பு போன்றவை ஏற்படும் திருஷ்டி தோஷங்கள் அனைத்தும் நீங்கும் நீண்ட நாட்களாக வேலை தேடி அடைந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் திருமணம் ஆகாமல் காலதாமதமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் ஏழ்மை நிலை அறவே நீங்கும்

இதையும் படிக்கலாமே:
புதன் கிரக தோஷம் நீங்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaikasi valarpirai sashti in Tamil. It is also called as Sasti viratham in Tamil or Vaikasi matham in Tamil or Murugan virathangal in Tamil or Vaikasi sasti in Tamil.