உங்களுக்கு பொருள் விரயங்கள் நீங்க, வளமை பெருக இம்மந்திரம் துதியுங்கள்

lakshmi

அனைவருக்குமே தங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு செல்வங்கள் பெருக வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஒருவர் வீட்டில் லட்சுமி வாசம் ஏற்பட முதல் விதியாக இருப்பது குடும்பத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை விடாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் சச்சரவுகள் நிறைந்து, நிம்மதியற்ற நிலை இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படாது. செல்வ வளங்கள் சேர்க்கையும் உண்டாகாது. இக்குறைகள் அனைத்தையும் தீர்க்கும் தெய்வமாக வைஷ்ணவி தேவி இருக்கிறார். அந்த தேவிக்குரிய காயத்திரி மந்திரம் இதோ.

mahalakshmi

வைஷ்ணவி தேவி காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்

விஷ்ணுவின் பத்தினியான வைஷ்ணவி தேவிக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முதல் 108 எட்டு முறை வரை துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டு பூஜையறையில் லட்சுமி தேவியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சமர்ப்பித்து, இனிப்பை நைவேத்தியம் வைத்து, மந்திரத்தை 108 முறை வடக்குத் திசையைப் பார்த்தவாறு துதித்து வந்தால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை மாறி மகிழ்ச்சி, மன அமைதி உண்டாகும். வீட்டில் செல்வச் சேர்க்கை ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படுவது நீங்கும்.

lakshmi

ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது யோக நித்திரையில் இருந்தவாறு உலகத்தை இயக்குகிறார் நாராயணன் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணு. அந்த மகாவிஷ்ணுவின் பத்தினியான லட்சுமி தேவி தான் வைஷ்ணவி என அழைக்கப்படுகிறார். அனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமாக வைஷ்ணவி தேவி இருக்கிறார். அந்த தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ வளங்கள் கிடைக்கப்பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
நினைத்தது நடக்க சொத்துகள் அதிகம் சேர

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaishnavi gayatri mantra in Tamil. It is also called as Gayatri mantras in Tamil or Lakshmi mantras in Tamil or Selva valam peruga in Tamil or Selva valam peruga in Tamil.