- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொந்த வீடு கட்ட சித்தர் பரிகாரம்

சொந்த வீடு கட்ட சித்தர் பரிகாரம்

- Advertisement -

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக செய்யாத பரிகாரங்கள் இல்லை. எத்தனையோ பரிகாரங்களை செய்து விட்டோம். இருந்தாலும் சொந்த வீட்டிற்க்கான யோகமே அமையவில்லை என்பவர்கள் சிரமப்படாமல் இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து பாருங்கள். இது ஒரு சித்தர் பரிகாரம். சித்தர் சொன்ன பரிகாரம் என்றுமே பொய்த்ததில்லை.

சித்தர்களை வழிபாடு செய்தவர்கள் என்றுமே கைவிடப்பட்டதில்லை. உங்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இந்த பரிகாரத்தை பற்றிய விரிவான தகவலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

சொந்த வீடு கட்ட சித்தர் சொன்ன பரிகாரம்

முதலில் பரிகாரத்தை பார்த்து விடுவோம். பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். அந்த விளக்கிற்கு முன்பு இரண்டு கிண்ணங்களை வைக்க வேண்டும். முதல் கிண்ணத்தில் பச்சரிசி நிரப்ப வேண்டும். அடுத்த கிண்ணத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டும். இதை தயார் செய்து வைத்து விட்டு இந்த விளக்கிற்கு முன்பாக அமர்ந்து கொண்டு ‘ஓம் ஸ்ரீ வாலை குருப்யோ நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும். வாலை சித்தரை தினமும் வழிபாடு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு நிச்சயம் வீடு கிடைக்கும்.

கொம்மடிக்கோட்டையில் வாலை சித்தர் குருசாமிக்கு சமாதி இருக்கிறது. திருச்செந்தூர் செல்லும் வழியில் இந்த இடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சித்தரின் பெயரைச் சொல்லி மனம் உருகி ஏற்றி வைத்திருக்கும் தீபத்தின் முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்தால், நிச்சயமாக உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து வாருங்கள். இன்று வீடு கிடைக்குமா, நாளை வீடு கிடைக்குமா என்ற கேள்விக்கு இடம் இருக்கக் கூடாது. பரிகாரத்திற்கு பயன்படுத்திய இந்த தண்ணீரை மட்டும் தினமும் மாற்றிக் கொள்ளுங்கள். பச்சரிசி தூசு படிந்த பிறகு அதை எடுத்து காக்கை குருவிகளுக்கு இறையாக போட்டுவிட்டு மீண்டும் புது பச்சரிசியை மாற்றினால் போதும்.

எச்சில் படாத சில்வர் கிண்ணத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்யலாம். சின்ன சின்னதா டபரா செட் இருக்கு இல்லையா அதுபோல சின்ன கிண்ணத்தை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தினாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த பரிகாரம் ஒரு பிரபல்யமான ஆன்மீக சொற்பொழிவாளர் ஒருவரால், ஒரு பேட்டியில் சொல்லப்பட்டுள்ள பரிகாரம். அந்த ஆன்மீக சொற்பொழிவாளர் தன்னுடைய அனுபவரீதியாக இந்த பரிகாரத்தை செய்து பலன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் எல்லோருக்கும் பலனடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த குறிப்பு உங்களோடு பகிரப்பட்டுள்ளது.

இந்த பரிகாரத்தை செய்தால் நாளைக்கு சொந்த வீடு கட்டிவிடலாம் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வரலாம். இரண்டு வருடம் கழித்தோ, மூன்று வருடம் கழித்தோ, அல்லது ஐந்து வருடம் கழித்தோ நிச்சயமாக சொந்த வீடு உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கையோடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். சொந்த வீடு வாங்கி விட்டீர்கள்.

இதையும் படிக்கலாமே: திருவோண நட்சத்திர மந்திரம்

நிம்மதியாக அந்த வீட்டில் வசித்து வருகிறீர்கள் எனும் பட்சத்தில் உங்களால் முடிந்தால் இந்த வாலை சித்தர் சமாதிக்கு ஒரு முறை சென்று அந்த சித்தருக்கு நன்றியை தெரிவிக்கலாம். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்