வளமான வாழ்க்கையை அள்ளித் தரக்கூடிய அதி அற்புதம் வாய்ந்த பரிகாரங்கள்! இந்த சூட்சுமங்களை தெரிந்து கொண்டால் குடிசையில் இருப்பவரும் பல கோடிக்கு சொந்தக்காரர் ஆகலாமே!

pariharam

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு செல்வம் எனப்படும் பணம் இன்றியமையாத தேவையாக இருக்கிறது.. வேலை, தொழில் வியாபாரங்கள் மூலம் நாம் ஈட்ட விரும்புகின்ற செல்வதற்கு அளவு ஏதும் நாம் நிர்ணயிப்பது கிடையாது. எவ்வளவு பணம் வரவு வந்தாலும் அது நமக்கு பல வகைகளில் நிச்சயம் பயன்படும். நமது வீட்டில் செல்வம் என்றென்றும் வற்றாமல் இருப்பதற்கு சில எளிமையான அதிகம் செலவில்லாத ஆன்மீக பரிகாரங்களை செய்து பார்த்தால் பெரிதாக நஷ்டம் ஏதும் நமக்கு ஏற்பட போவதில்லை. அத்தகைய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

money

நமது முன்னோர்கள் பணம் ஈட்டுவதற்காக பல விதமான ஆன்மீக பரிகாரங்களை மக்கள் செய்து பலன் பெற வேண்டும் என்கிற உயரிய நோக்கில் கூறியுள்ளனர். இத்தகைய பரிகாரங்கள் எண்ணிலடங்காதவையாக இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒரே சமயத்தில் எந்த ஒரு நபரும் செய்ய முடியாது. மேலும் சில வகை பரிகாரங்கள் ஒரு சிலருக்கு உடனடியாக பலன் தரும், சிலருக்கு பலன் கிடைக்க அதிக காலமாகும். ஒரு சிலருக்கு பலன் தராமலே போகலாம். அப்படி பலன் கிடைக்காமல் போன நபர்கள், அதற்கடுத்து இருக்கும் பரிகாரங்களை நம்பிக்கையோடு செய்ய வேண்டும். இறையருள் மற்றும் திடமான நம்பிக்கையுடன் நீங்கள் செய்கின்ற எந்த ஒரு பரிகாரமும் உங்களுக்கு நிச்சயம் பலன் கொடுக்கும்.

உங்கள் வீட்டில் படுக்கை அறை அல்லது வரவேற்பறையில் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சுவற்றில் தங்க நாணயங்களின் படம் அல்லது ரூபாய் நோட்டுகளின் படம், வால்பேப்பர் போன்றவை இருக்குமாறு செய்வதால் உங்களுக்கு பல புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்பட வழிவகுக்கும். வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டின் தோட்டத்தில் இருக்கின்ற எறும்புகளுக்கு வெல்லம், சர்க்கரை போன்ற இனிப்பு பொருட்களை உணவாக கொடுப்பதால் செல்வத்திற்கு காரகத்துவ கிரகமான சுக்கிர பகவானின் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கச் செய்து அதிகமான பண வரவு உண்டாகச் செய்யும்.

rahu

மின்சாரம், மின்னணு சாதனங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவ கிரகமாக ராகுபகவான் இருக்கிறார். வீடுகளில் நேர்மறையான சக்திகள் நிறைந்திருக்க மின்சார வெளிச்சம் அவசியமாகிறது. வெளிச்சம் இல்லாமல் வீடுகளின் ஏதேனும் ஒரு பகுதி இருள் அடையும் போது ராகு பகவானின் ஆதிக்கம் அதிகரித்து துரதிர்ஷ்டம் ஏற்படச் செய்யும். எனவே உங்கள் வீடுகளில் மின் சாதனப் பொருட்களில் பழுது ஏற்படாமல் பார்த்துக்கொள்வதோடு, மின் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்வதன் மூலம் வீட்டில் ராகு கிரகத்தின் ஆதிக்கம் அதிகரிக்காமல் தடுப்பதன் மூலம் செல்வச் செழிப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இல்லற வாழ்வில் இருக்கும் ஆண்களுக்கு அழகே கடுமையாக உழைத்து பொருள் ஈட்டுவது ஆகும். தற்காலங்களில் பெரும்பாலான ஆண்கள் வயது வித்தியாசமின்றி மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் சூட்சம சரீரத்தில் எதிர்மறையான ஆற்றல்கள் அதிகம் சேர்ந்து துரதிர்ஷ்டம், நோய், வறுமை போன்றவற்றை அந்த நபரின் வாழ்க்கையில் ஏற்படும். ஆண்கள் தங்களுக்கு எப்போதும் லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் கிடைத்து அதிகளவு வருமானம், பொருளாதார லாபம் கிடைக்க வேண்டும் என விரும்பினால் மது அருந்துவது மற்றும் இன்ன பிற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

copper coins

சிலருக்கு தாங்கள் செய்கின்ற தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத விதமான நஷ்டங்கள், வருமான குறைவு ஏற்படும். இப்படி திடீர் பொருளாதார நஷ்டங்கள், லாப இழப்பு போன்றவை தங்களுக்கு ஏற்படக்கூடாது என விரும்புபவர்கள், தாங்கள் பணம் வைக்கின்ற பணப்பெட்டி, பைகளில் 3 செம்பு உலோகத்தாலான நாணயங்களை போட்டு வைக்கவேண்டும். தெய்வீக ஆற்றலை ஈர்க்கும் தன்மை வாய்ந்த இத்தகைய செம்பு நாணயங்கள் ஏதாவது ஒரு திருக்கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டதாக இருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

rice

பெரும்பாலான கோயில்களில் ஏழை, எளிய மக்கள் பசியாற உண்பதற்கு அன்னதானம் எனப்படும் உணவு வழங்கல் செய்யப்படுகின்றன. தங்களுக்கு வாழ்வில் பொருளாதார கஷ்டங்கள் ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள் வளர்பிறை வெள்ளிக்கிழமை தினங்களில் அன்னதானம் நடைபெறும் கோவில்களுக்கு அரிசி, பால் போன்ற பொருட்களை தானமாக கொடுப்பதால் வாழ்வில் பணக் கஷ்டங்கள், கடன் வாங்கும் சூழ்நிலை போன்றவை ஏற்படாமல் காக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக திகழ்கிறது.