நம் வீட்டில் தெய்வ சக்தி இல்லை என்பதை எப்படி கண்டுபிடிப்பது? அந்த தெய்வமே விரும்பி வந்து நம் வீட்டில் அமர, இந்த 2 பொருள் வீட்டில் இருந்தால் போதுமே!

amman

முயற்சி செய்தும் முன்னேற்றம் இல்லை. திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லை. திறமை, வாய்ப்பு இந்த இரண்டு கிடைத்தால் கூட நாம் விரும்பிய இடத்தை நம்மால் அடைய முடியவில்லை. எதற்காக இந்த கஷ்டங்கள்? நமக்கு அந்த தெய்வத்தின் ஆசீர்வாதம் இருக்கின்றதா? இல்லையா? நம்முடைய வீட்டில் கெட்ட சக்தி குடி கொண்டு உள்ளதா? எதனால் தொடர் பிரச்சனைகள் பாதிப்புகள் இருந்து கொண்டே வருகிறது? சந்தர்ப்பம் கிடைத்ததும், நினைத்ததை சாதிக்க முடியாத சூழ்நிலை ஏன் வருகிறது? எதற்காக இத்தனை சோதனைகள்?

house with cars

இறைவன் மீது அதிக பக்தி இருப்பதால், அந்த இறைவன் நம்மை சோதித்து பார்க்கிறாரா? அல்லது நம்முடைய தலைவிதியே இது தானா! இப்படி எத்தனை பேர் எப்படி எப்படியெல்லாமோ புலம்பிக் கொண்டு தான் இருக்கின்றோம். நம்முடைய வீட்டில் தெய்வம் குடிகொண்டிருந்தால், நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனையில் பாதி தீர்ந்து விடும். வீட்டில் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றலை தூண்டுவதற்கும், நம் வீட்டில் இருக்கக்கூடிய எல்லா வகையான பிரச்சனைக்கும் தீர்வைத் தரும் ஒரே பொருள் இது தான்.

சில பேருக்கு இந்த பொருள் தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். அந்த காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருந்த அபூர்வமான விஷயங்களில் இதுவும் ஒன்று. அதாவது இது ஒரு காய் வகையை சேர்ந்தது. ‘வலம் புரிக்காய், இடம்புரி காய்’ என்று சொல்வார்கள். இடது பக்கம் சுருள் கொண்ட காயை இடம்புரி காய் என்ற பெயர் கொண்டு அழைப்பார்கள். வளது பக்கம் சுருள் கொண்ட காயை வலம்புரிக்காய் என்று சொல்லுவார்கள்.

valamburikai

பொதுவாகவே ‘ஓம்’ அப்படி என்று சொல்லப்படும் ஒலிக்கு அதீத சக்தி உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இந்த ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் சக்தியை உள்வாங்க கூடிய ஆற்றல் இந்த இரண்டு காய்களுக்கு உள்ளது. இந்த இரண்டு காய்களை வாங்கி மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு, நன்றாக உலர வைத்து விட்டு அதன் பின்பு மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். நிழலிலேயே உலர்த்த வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக வீட்டிலிருக்கும் குடும்பத் தலைவன், குடும்பத் தலைவி யார் வேண்டுமென்றாலும், அந்தக் காயை உங்கள் உள்ளங்கையில் எடுத்து வைத்துக் கொண்டு, இரு கைகளையும் சுவாமி கும்பிடுவது போல வைத்துக் கொண்டு, இறைவனை நினைத்து சிவபெருமானை நினைத்து, ‘ஓம்’ எனும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

oom

மந்திரத்தை உச்சரிக்க கணக்கு கிடையாது. உங்களுக்கு நேரம் இருந்தால் 5 நிமிடம் உச்சரிக்கலாம்.  10 நிமிடங்கள் வரை கூட உச்சரிக்கலாம். நீங்கள் எவ்வளவு முறை ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்து, அந்த காய்க்கு சித்தி ஏற்றுகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் உங்களுடைய வீட்டில் தெய்வ சக்தி குடிகொள்ளும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதாவது நீங்கள் ஒலிக்கும் மந்திரத்தை அந்த இரண்டு காய்களும் உள்வாங்கிக் கொண்டு, உங்களுடைய வீட்டில் அந்த மந்திரத்தை மீண்டும் ஒலிக்க செய்து கொண்டே இருக்கும். ஓம் எனும் மந்திரம் ஒலித்துக்கொண்டிருக்கும் இடத்தில் தெய்வ சக்தி வந்து குடிகொள்ளும் என்பதுதான் இதற்கு அர்த்தம். கெட்ட சக்திகள் அந்த வீட்டில் தங்காத என்பதும் அர்த்தம்.

oom

அதன் பின்பு உங்களது கையில் இருக்கும் காயை, ஒரு சுத்தமான டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். (இந்த காயை போட்டு வைக்கக் கூடிய அந்த டப்பா இரும்பு பிளாஸ்டிக் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.) இந்த இரண்டு காய்களை போட்டு வைத்திருக்கும் டப்பா வாசனை நிறைந்ததாக இருக்க வேண்டும். இரண்டு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை நறுக்கி அந்த டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய வீட்டு பீரோவில் வைத்து கொள்ளலாம். அல்லது பூஜை அறையிலும் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம் அது உங்களுடைய இஷ்டம்தான்.

pachai-amman

தினம் தோறும் வீட்டில் பூஜை செய்யும் போது தூப ஆராதனை இந்த டப்பா விற்கும் காட்டப்பட வேண்டும். கட்டாயம் இந்த காய் உள்ளே இருக்கும் டப்பா, காற்று வசதியுடன் இருக்க வேண்டும். அதாவது மொத்தமாக போட்டு மூடி விடக்கூடாது. டப்பாவின் மேல் பக்கத்தில் சிறு துளைகள் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு துணியை கட்டி மூடி வைத்துக் கொள்வது சிறப்பானது.

shivan

முடிந்தவர்கள் தினம்தோறும் இந்த இரண்டு காய்களை உங்களது கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம். முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வெள்ளிக்கிழமைகளில் உச்சரிக்கலாம். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் இருக்கிறதோ அப்போது ‘ஓம்’ மந்திரத்தை உச்சரித்து அந்த காய்க்கு உருவேற்றி, உங்கள் வீட்டில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த காயை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது அந்தக் காய் பூசசு அரிக்கும் நிலைக்கு மாறி விட்டாலோ, உடனே மாற்றிவிட வேண்டும் அவ்வளவு தான். இது நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே செய்து பலன் அடைய வதற்காக சொல்லப்பட்டுள்ள குறிப்பு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த சின்ன சின்ன விஷயங்களை தினம்தோறும் கடைப்பிடித்து வந்தாலே போதும். வாழ்க்கையில் பல பெரிய பெரிய முன்னேற்றங்கள் நம்மை தேடி வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.