இன்று வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி! இன்றைக்கு நீங்கள் செய்யும் இந்த பூஜை, உங்கள் கையில் இருக்கும் 1 ரூபாயை, கோடி ரூபாயாக மாற்றி காட்டும்.

sornabairavar

இந்த வைகாசி மாதம் வரக் கூடிய அஷ்டமி திதியானது குறிப்பாக சனிக்கிழமை அன்று வந்திருக்கின்றது. பொதுவாகவே, சிவபெருமானுக்கு உகந்த நாளான இந்த சனிக்கிழமையில், அதுவும் அஷ்டமி திதியில், பைரவரை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பானது. குறிப்பாக வளர்பிறை அஷ்டமியானது, சொர்ண பைரவருக்கு மிகவும் விசேஷம். இந்த சொர்ண பைரவரை முறைப்படி, எப்படி வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

kalabairavar

இன்று மாலை 5.30 மணிக்குள், இந்த பூஜையை நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும், உங்கள் பூஜை அறையில் செய்யலாம். அல்லது நீங்கள் தொழில் செய்யும் அலுவலகம் ஏதாவது இருந்தால், அந்த இடத்திலும் செய்யலாம். உங்கள் வீட்டில் சொர்ண ஆகர்ஷண பைரவர் படம் இருந்தால், அந்த சாமி படத்தின் முன்பு இந்த பூஜையைச் செய்வது நல்லது. சிலரது வீட்டில் பைரவரை வைத்து வழிபட மாட்டார்கள். மகாலட்சுமியின் படத்திற்கு முன்பாகவும் இந்த வழிபாட்டை செய்யலாம் தவறு ஒன்றும் இல்லை.

உங்களிடம் இருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களை 11 என்ற கணக்கில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையாக இருந்தாலும், உங்கள் அலுவலகத்தில் இருக்கும் பூஜை அறையாக இருந்தாலும், அந்த இடத்தில் குல தெய்வத்தையும், சொர்ண ஆகர்ஷண பைரவரையும், மகாலட்சுமியையும் மனதார நினைத்து ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

kaala bairavar

அதன் பின்பு, ஒரு தாம்புளத் தட்டில் பச்சரிசியைப் பரப்பி, அதன் மேல் 11 ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து, 11 முறை ‘ஓம் ஸ்வர்ண பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். உங்களுக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் அரளிப்பூ கிடைத்தால், அந்த அரளிப்பூவை ஒவ்வொன்றாக, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும், அந்த தாம்புல தட்டில் மேல் இருக்கும், ஒரு ரூபாய் நாணயங்களின் மீது ஒவ்வொரு பூக்களை போட்டு மந்திரத்தை உச்சரிக்கும்.

- Advertisement -

உங்களுக்கு இருக்க கூடிய பொருளாதார பிரச்சினையாக இருந்தாலும், கடன் பிரச்சனையாக இருந்தாலும், ஆரோக்கிய பிரச்சனையாக இருந்தாலும் எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், அது விரைவாக தீர வேண்டும் என்று பைரவரை வேண்டிக் கொள்வது மிகவும் சிறப்பு. உங்களது பூஜையானது நிறைவடைந்த பின், தாம்பூலத் தட்டில் இருக்கும் 11 ஒரு ரூபாய் நாணயங்களையும் எடுத்து, ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்களது பீரோவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

vishnu-lakshmi

அந்த அரிசியை சமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தவறில்லை. இப்போது உங்களிடம் இருக்கும் 11 ஒரு ரூபாய் நாணயங்களிலும் சொர்ண பைரவரின் ஆசிர்வாதம் நிறைந்திருக்கும். நீங்கள் புதியதாக தொழில் தொடங்குவதாக இருந்தாலும், அல்லது ஏதாவது சொத்துக்கள் வாங்குவதாக இருந்தாலும், புதிய முதலீடு செய்வதாக இருந்தாலும், தங்க நகை வாங்குவதாக இருந்தாலும், எந்த நல்ல காரியத்திற்காக வேண்டும் என்றாலும் அந்த பணத்தோடு, இந்த ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்து செலவு செய்தால், நீங்கள் ஆரம்பிக்கும் அந்த நல்ல விஷயமானது வெற்றியின் உச்சியில் போய் முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நீங்கள் தொடங்கும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும், அது பன்மடங்கு இலாபத்தை உங்களுக்கு தேடித்தரும்.

அதாவது, நீங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு நாணயமும் ஒரு கோடி ரூபாய்க்கு சமம் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு தீராத உடல் சம்பந்தப்பட்ட ண பிரச்சினை இருக்கின்றது. ஏதாவது சோதனை செய்ய மருத்துவமனைக்கு செல்கிறீர்கள் என்றாலும், பரவாயில்லை. மருந்து வாங்குவதற்காக செலவிடும் தொகையில் இந்த ஒரு ரூபாய் நாணத்தையும் சேர்த்து செலவிடுங்கள். உங்கள் மனதார, உங்களுக்கு இருக்கும் நோய் தீர வேண்டும் என்று நினைத்து! நிச்சயம் விரைவாக நோய் குணமாகிவிடும். நம்பிக்கையோடு இந்த பூஜையை செய்து பலன் பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
5 ரூபாய் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் மேலும் செல்வம் சேரும், வியாபாரம், தொழில் ஏற்றமாக இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ashtami bairavar valipadu Tamil. bairavar. bairavar manthiram. Bairavar manthiram tamil