- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவளர்பிறை அஷ்டமியில் பணத்தை ஈர்க்கும் சூட்சம வழிபாடு

வளர்பிறை அஷ்டமியில் பணத்தை ஈர்க்கும் சூட்சம வழிபாடு

- Advertisement -

பணத்தை ஈர்க்கக்கூடிய சூட்சமமான வித்தைகளை கற்றுக் கொள்வதற்கு ஒரு தனித்திறமை தேவைப்படுகிறது. அதுவும் இந்த கலியுகத்தில், இந்த நவீன மயமாக்கப்பட்டிருக்கும் உலகத்தில், திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே, அதிர்ஷ்ட வாய்ப்புகள், நம்மை தேடி வரும். திறமையை வளர்த்துக் கொள்ள நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட காற்று நம் பக்கம் வீச இறைவனை வழிபாடு செய்ய வேண்டும்.

கூடவே சேர்த்து இறைவழிபாட்டுடன், இதுபோல எளிமையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நம்முடைய துரதிஷ்டம் விலகி, அதிர்ஷ்ட நேரம், வேலை செய்ய துவங்கும். அதற்கு உண்டான ஒரு எளிமையான பரிகாரத்தை இப்போது நாம் தெரிந்து கொள்வோமா. இன்று வளர்பிறை அஷ்டமி திதி இருக்கிறது. திங்கட்கிழமையோடு சேர்ந்து அஷ்டமி திதி இருப்பது மிகவும் சிறப்பு. சிவபெருமானுக்கு உரிய சோமவார நாளில் வந்திருக்கும் இந்த அஷ்டமி திதியில் உங்கள் கையால் நாய்களுக்கு இனிப்பு சேர்த்த உணவை கொடுக்க வேண்டும்.

- Advertisement -

எப்படி தெரியுமா? ஏதாவது ஒரு இனிப்பு பொருள் கடையிலிருந்து வாங்கிய பலகாரமாக இருந்தாலும் சரி. அதை உங்களுடைய கையில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஸ்வர்ணாகர்ஷண பைரவரை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, பின் சொல்லக்கூடிய இந்த மந்திர வரிகளை மூன்று முறை படிக்க வேண்டும். பிறகு கையில் இருக்கும் இனிப்பு பொருளை உங்கள் வீதியில் சுற்றி தெரியும் நாய்களுக்கு உங்கள் கையால் வைக்க வேண்டும். அந்த நாய் அதை சாப்பிடுகிறதா என்பதையும் நீங்கள் கவனித்து பார்க்க வேண்டும்.

செய்த பரிகாரம் முழுமையடைய வேண்டுமென்றால், உங்கள் கையால் வைத்த இனிப்பு பொருளை அந்த நாய் சாப்பிட்டால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். நீங்கள் வைத்த பலகாரத்தை, நாய் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது. கவலைப்பட வேண்டாம். தினமும் உங்கள் கையால் ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வாங்கி அந்த நாய்களுக்கு கொடுத்து, ஸ்வர்ணா கிருஷ்ண பைரவரை வழிபாடு செய்ய துவங்குங்கள்.

- Advertisement -

நிச்சயமாக அடுத்த மாதம் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமி திதியில் உங்களுடைய வேண்டுதல் நிறைவேற்ற பைரவரின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். நாய்கள் நீங்கள் கொடுத்த உணவை நிச்சயம் சாப்பிடும். இன்று இரவு 10 மணிக்குள் இந்த பரிகாரத்தை நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் செய்யலாம். நாய்களுக்கு கொடுக்கக்கூடிய இனிப்பு பலகாரத்தை கையில் வைத்துக்கொண்டு செல்ல வேண்டிய பைரவர் மந்திரம் இதோ.

பைரவர் மந்திரம்

தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
ஸ்வர்ணாகர்ஷண பைரவ நாதா போற்றி போற்றி !

- Advertisement -

இவ்வளவு தாங்க. இந்த மந்திர பாடல் வரிகள் இன்னும் பெரியதாக இருக்கும். கூகுள் செய்து உங்களால் மொத்த பாடலையும் ஒருமுறை படிக்க முடியும் என்றாலும் படிக்கலாம். அப்படி இல்லை என்றால் youtube இல் இந்த பாடலை ஒலிக்க விட்டும் நாய்களுக்கு உணவை கொடுக்கலாம் அது உங்களுடைய சௌகரியத்தை பொருத்தது. இதை எல்லோராலும் சுலபமாக செய்ய முடியும்.

இதையும் படிக்கலாமே: 5.5.2025 இன்று பிரபஞ்ச வசிய நாள்.

இன்று இந்த பரிகாரத்தை செய்ய தவற விட்டால் கூட கவலையே படாதீங்க. நாளை துவங்கி இந்த பரிகாரத்தை தினமும் செய்து வாருங்கள். அடுத்த 30 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்