நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் வளர்பிறை அஷ்டமி! கடன் சுமைகள் குறைய, லட்சுமி கடாட்சம் பெருக, உங்கள் கைகளால் இந்த 1 வார்த்தையை எழுத மறக்காதீங்க!

cash-mahalakshmi
- Advertisement -

பொதுவாக தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்தால், கடன் சுமை குறையும் என்று சொல்லுவார்கள். வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் பட்சத்தில் நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் போது, நமக்கு கடன் வாங்காத சூழ்நிலை உண்டாகும். கடன் இருந்தாலும், வரக்கூடிய வருமானத்தில் கடன் சுமையைக் குறைத்துக் கொள்ள முடியும். லட்சுமி கடாட்சம் பெருக கடன் கரைய எப்படி இந்த வழிபாட்டினை வீட்டில் இருந்தபடியே செய்யலாம் என்பதை பற்றிதான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

one rupee

இந்த பரிகாரத்திற்கு மஞ்சள் நிறத் துணி, 8 (1 ரூபாய் நாணயங்கள்), குங்குமம், இந்த 3 பொருட்கள் மட்டுமே போதுமானது. நாளை வெள்ளிக்கிழமை என்பதால் நிச்சயமாக நம் வீட்டு பூஜை அறையும், நம் வீடும் சுத்தபத்தமாக தான் இருக்கும். காலையில் இந்த பரிகார வழிபாட்டினை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை 9 மணிக்கு முன்பாக பூஜையை நிறைவு செய்திருக்க வேண்டும்.

- Advertisement -

காலை செய்ய முடியாதவர்கள், மாலை 5.30 மணியிலிருந்து 8.00 மணிக்குள் இந்த பூஜையை செய்து முடித்து விடுங்கள். பூஜையறையில் தீபம் ஒன்றை ஏற்றி வைத்து, அடுத்தபடியாக தயாராக இருக்கும் மஞ்சள் துணியில், குங்குமத்தை உங்களுடைய ஆள்காட்டி மோதிர விரலால் தொட்டு, ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை எழுத வேண்டும்.

ashtalakshmi

அடுத்தபடியாக அஷ்டலட்சுமிகளின் பெயரை ஒவ்வொன்றாக உச்சரித்து தயாராக இருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களை மஞ்சள் நிறத் துணியில் ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தைகளுக்கு மேல் வைத்துவிட வேண்டும். இப்போது அஷ்டலட்சுமிகளும் உங்களுடைய வீட்டு பூஜை அறையில் வந்து அமர்ந்து விட்டார்கள். உங்களுடைய வேண்டுதல்களை அவர்களிடம் வைக்க வேண்டும். (அந்த ஒரு ரூபாய் நாணயத்தை ஸ்ரீம் என்ற வார்த்தையை சுற்றி வட்ட வடிவமாகவும் அடுக்கி வைத்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

பணம் சம்பந்தப்பட்ட, மனம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் பூஜை அறையில் 5 நிமிடங்கள் அமர்ந்து, கண்களை மூடி, மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு அந்த மஞ்சள் நிற துணியை அப்படியே சிறிய மூட்டையாக கட்டி மாகாலட்சுமியின் பாதங்களில் வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை முழுவதும் அந்த முடிச்சு அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கட்டும். இறுதியாக தீப தூப ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

praying-god1

சனிக்கிழமை அடுத்த நாள் முடிச்சை அவிழ்த்து அந்த 8 நாணயங்களையும் அப்படியே உங்களுடைய பீரோவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். துணியை துவைத்து வேறு ஏதாவது பூஜை பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறாக அஷ்டலக்ஷ்மிளை நினைத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் நாளை வளர்பிறை அஷ்டமி பூஜையை நம்பிக்கையுடன் செய்யும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுடைய பண பிரச்சினைகளுக்கு, கடன் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -