புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதம். இப்பொழுது நவராத்திரி நடைபெறுகிறது. இது அம்பாளை வழிபாடு செய்வதற்குரிய நாட்கள். இந்த நாட்களில் வரக்கூடிய சதுர்த்தி விநாயகப் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இவை மூன்றும் சேர்ந்து வரக்கூடிய அற்புதமான நாள் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நாளில் நாம் விநாயகர் பெருமானை எந்த முறையில் வழிபட்டால் செல்வநிலை உயரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வளர்பிறை சதுர்த்தி வழிபாடு
மாதத்தில் இரண்டு முறை சதுர்த்தி திதி என்பது வரும். இதில் வளர்பிறை சதுர்த்தி என்பது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய நன்மைகளை வளரச் செய்யும் என்றும் தேய்பிறை சதுர்த்தி என்பது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை தேய்த்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. அந்த முறையில் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி சமயத்தில் இந்த வளர்பிறை சதுர்த்தி என்பது வருவதால் அனைவரின் அருளையும் நம்மால் பரிபூரணமாக தர முடியும்.
இந்த வழிபாட்டை காலை 6:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 6 மணியிலிருந்து 8:00 மணிக்குள் செய்யலாம். வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகரின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு அருகம்புல், பச்சை கற்பூரம், ஏலக்காய் இவை மூன்றும் வேண்டும். இதோடு வெள்ளை அல்லது சிவப்பு நிறத்திலான ஒரு சதுரமான துணி ஒன்று வேண்டும்.
இப்பொழுது பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு இந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு அங்கே அமர்ந்து வெள்ளை துணியில் இந்த 5 அருகம்புல், ஒரு துண்டு பச்சை கற்பூரம், மூன்று ஏலக்காய் இவற்றை வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மூட்டையை நம்முடைய இரண்டு கைகளுக்குள் வைத்துக் கொண்டு விநாயகப் பெருமாள், குலதெய்வம், பெருமாள், அம்பிகை இவர்கள் அனைவரையும் மனதார நினைத்துக் கொண்டு செல்வ வளம் அதிகரிக்க வேண்டும், பணவரவு ஏற்பட வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு விநாயகப் பெருமானின் மூலமந்திரமான “ஓம் கம் கணபதயே நமஹ” என்னும் மந்திரத்தை குறைந்தபட்சம் 27 முறையும் அதிகபட்சம் 108 முறையும் கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு மறுபடியும் அனைவரிடமும் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த மூட்டை அப்படியே எடுத்துக் கொண்டு போய் வீட்டு நிலை வாசலை வெளிப்புறத்தில் கட்டி விட வேண்டும். இந்த மூட்டைக்கு தினமும் காலையிலும் மாலையிலும் ஊதுபத்தி சாம்பிராணி தூபம் காட்டுவது என்பது மிகவும் சிறப்பு. ஒரு மாதம் வரை இந்த மூட்டை அப்படியே இருக்கட்டும். ஒரு மாதம் கழித்து இதை எடுத்து கால் படாத இடத்திலோ ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும்.
பெண்கள் மாதவிலக்கான நேரமாக இருக்கும் பட்சத்தில் அவர்களால் பூஜை அறையில் அமர்ந்து செய்ய முடியாது, அதேபோல் அன்றைய தினத்தில் வேறு ஏதாவது தீட்டு காரியங்களுக்கு சென்றிருந்தாலோ பூஜை அறைக்குள் போக முடியாத ஒரு சூழ்நிலையில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வீட்டு வரவேற்பு அறையிலேயே அமர்ந்து கொண்டு இந்த மூட்டையை தயார் செய்து கையில் வைத்துக்கொண்டு விநாயகப் பெருமானின் மந்திரத்திற்கு பதிலாக விநாயகப் பெருமானின் ஏஞ்சல் எண்ணை கூற வேண்டும். குறைந்தது பத்து நிமிடம் ஆவது இந்த எண்ணை கூற வேண்டும். 4 6 4 2 9 இதை தனித்தனியாக தொடர்ச்சியாக கூறிவிட்டு பிறகு இந்த மூட்டையை நிலை வாசலில் கட்டிவிடலாம்.
இதையும் படிக்கலாமே:https://dheivegam.com/october-month-maitreya-muhurtham/
இந்த விநாயகர் வழிபாட்டையும் பரிகாரத்தையும் முழு நம்பிக்கையோடு வளர்பிறை சதுர்த்தி திதியில் செய்பவர்களுக்கு செல்வ வளம் அதிகரிக்கும் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி தாராளமான பண வரவு ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.