- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவளர்பிறை சதுர்த்தி விரதம் பலன்கள்

வளர்பிறை சதுர்த்தி விரதம் பலன்கள்

- Advertisement -

பொதுவாகவே சதுர்த்தியில் விரதம் இருப்பவர்களுக்கு சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம். அதிலும் வளர்பிறை சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு, ஒரு வருடம் விரதம் இருந்த பலன் அப்படியே கிடைக்கும் என்பது நம்பிக்கை. முழு முதல் கடவுள் ஆன விநாயகரை வளர்பிறை சதுர்த்தி திதியில் எப்படி முறையாக வழிபாடு செய்ய வேண்டும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களைத் தான் இந்த பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.

முழுமுதற் கடவுள் விநாயகரை மனதில் நினைத்தாலே விக்னங்கள், சங்கடங்கள் அனைத்தும் தீரும். ஒரு மாதத்தில் ஒரு திதி இரண்டு முறை வருகிறது. ஒன்று வளர்பிறையிலும், மற்றொன்று தேய்பிறையிலும் வரும். வளர்பிறை சதுர்த்தி திதி வரும் வேளையில் விநாயகரை முழுமையாக மனதார நினைத்து உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து இங்கனம் வழிபாடு செய்து வந்தால், புத்திர பாக்கியம், திருமண யோகம், கல்வியில் உயர்வு, தொழில் வளர்ச்சி, குடும்பத்தில் ஒற்றுமை, கணவன் மனைவி பிரச்சனை அனைத்தும் தீரும்.

- Advertisement -

விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றக் கூடிய வளர்பிறை சதுர்த்தி திதியில் வழிபாடு செய்யும் முறை :

நம் ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றக் கூடியவர் விநாயகப் பெருமான். ஒவ்வொரு வளர்பிறை சதுர்த்தி அன்றும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு விநாயகருக்கு மலர்களால் அலங்காரம் செய்து, வணங்கி விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். காலை முதல் விரதம் முடியும் வரை உணவு எடுத்துக் கொள்ள கூடாது. தண்ணீர் கூட அருந்தக் கூடாது.

உடல்நிலை சரியில்லாதவர்கள், விரதம் முழுமையாக கடைப்பிடிக்க இயலாதவர்கள் பாலும், பழமும் எடுத்துக் கொள்ளலாம். கோவிலுக்கு சென்று விநாயகரை 11 முறை வலம் வர வேண்டும். வலம் வந்த பின்பு எருக்கம் பூ மற்றும் அருகம்புல் ஆகியவற்றை மாலையாக தொடுத்து விநாயகருக்கு சாற்றி தரிசனம் செய்ய வேண்டும். தரிசனம் செய்து முடித்த பின்னர் மற்ற வழிபாடுகளை செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விநாயகருக்கு நைவேத்தியம் படைத்து விளக்கேற்ற வேண்டும்.

- Advertisement -

விநாயகருக்கு நாவல் பழம், அவல், பொறி, சர்க்கரை, பால், பழம், கொழுக்கட்டை, சுண்டல், கொய்யா, பேரிக்காய், மோதகம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். இதில் உங்களிடம் இருக்கும் பொருட்களை விநாயகருக்கு படைத்து விநாயகர் அகவல், விநாயகர் போற்றிகள், விநாயகர் மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றை படிக்க வேண்டும். அன்றைய நாள் முழுவதும் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், விநாயகரை மனதில் நிறுத்தி, முழுமையான இறை பக்தியுடன், இறை சிந்தனையுடன் மற்ற வேலைகளை நீங்கள் செய்ய வேண்டும். வீண் பேச்சு தவிர்ப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே:
மார்கழி சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு

மௌனம் ஒரு மனிதனை உடல் அளவிலும், மனதளவிலும் வலிமையாக்குகிறது. முடிந்தால் அன்றைய நாள் முழுவதும் பேச்சை குறைத்து, பக்தியில் மூழ்குங்கள். விநாயகருக்கு படைத்த நைவேத்திய பொருட்களை மட்டும் இரவு உணவாக எடுத்துக் கொண்டு விரதத்தை முடிப்பது சிறப்பு! இது போல ஒவ்வொரு வளர்பிறை சதுர்த்தி திதியிலும் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட்டு, கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருபவர்களுக்கு ஒரு வருடம் விரதம் இருந்த பலன் ஒரே நாளில் கிடைக்கும் என்பது நியதி. இது போல எல்லா வளர்பிறை திதிகளிலும் தவறாமல் விநாயகர் வழிபாடு விரதமிருந்து செய்து வருபவர்களுக்கு, வேண்டிய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

சற்று முன்