சுகபோக வாழ்வு தரக்கூடியவர்கள் மகாலட்சுமி தாயார் மற்றும் சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர அருளும், மகாலட்சுமி அருளும் ஒரு சேர கிடைக்கும் காலம் வளர்பிறை வெள்ளிக்கிழமை ஆகும். வளர்பிறை வெள்ளிக்கிழமையில் ஏற்ற வேண்டிய தீபம் என்ன? இந்த தீபம் ஏற்றுவதால் உண்டாகக்கூடிய நற்பலன்கள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த அற்புதமான தகவல்களை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானுடைய அருள் கிடைப்பதற்கு வளர்பிறை வெள்ளிக்கிழமை தவறாது இந்த தீபம் ஏற்றி வர வேண்டும். வளர்பிறை வெள்ளிக்கிழமை வரும் நாட்களில் பொதுவாக நீங்கள் பூஜை அறையில் பூஜை செய்வது போல எல்லாவற்றையும் செய்யுங்கள். அதனுடன் சேர்த்து இந்த தீபத்தையும் தவறாமல் ஏற்றி வாருங்கள். இந்த தீபம் ரொம்பவும் விசேஷமானது மற்றும் மகத்துவமான பலன்களையும் கொண்டுள்ளது.
இந்த தீபத்தை பஞ்சகவ்ய தீபம் என்பார்கள். பசுவிலிருந்து கிடைக்கக்கூடிய ஐந்து பொருட்களிலிருந்து உருவாகக்கூடிய இந்த தீபத்தை வீட்டில் ஏற்றி வைக்கும் பொழுது கண் திருஷ்டிகள், துஷ்ட சக்திகள் அனைத்தும் வெளியேறிவிடும். மகாலட்சுமியும், நல்ல தேவதைகளும் வந்து வீட்டில் தங்குவார்கள் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. பசுவிலிருந்து கிடைக்கக்கூடிய பால், தயிர், நெய், சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றிலிருந்து விளக்கு தயார் செய்து வைப்பார்கள்.
இந்த விளக்கினை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது முழுமையாக எரிந்து சாம்பிராணி போல புகை தரக்கூடிய வித்தியாசமான புனிதமான விளக்காகும். பஞ்சகவ்ய விளக்கு ஏற்றும் பொழுது அடியில் கீழே ஒரு அகல் விளக்கு வைத்துக் கொள்ள வேண்டும். மண் அகல் விளக்கு வைத்து அதன் மீது பஞ்சகவ்ய விளக்கு வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த விளக்கில் நெய் தவிர வேறு எதையும் சேர்க்காதீர்கள்.
சுத்தமான பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி அது எரிந்து முடிந்ததும் பஞ்சகவியத்தால் உருவான இந்த தீபமும் சேர்ந்து எரிந்து சாம்பல் ஆகிவிடும். பசுவில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த ஐந்து பொருட்களும் புனிதம் மிக்கவையாக நம் இந்து சாஸ்திரம் சொல்கிறது. இந்த புனிதமிக்க பொருட்கள் தீபம் ஏற்றி எரியும் ஜோதியுடன் சேர்த்து ஐக்கியமாகி, புகையை உண்டாக்கும். இந்த புகையை வீடு முழுக்க பரவ செய்தால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். இதனால் செல்வங்கள், சொத்துக்கள் அனைத்தும் அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே:
கடன் தீர தேங்காய் தீபம்
தொழில் ரீதியாக இருக்கும் நஷ்டங்கள், வியாபார முடக்கங்கள், முன்னேற்றம் இல்லாமல் இருப்பது, வேலையில் திருப்தி இல்லாமல் இருப்பது போன்ற எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் இந்த புகை அந்த அளவிற்கு ரொம்பவும் நல்ல விஷயங்களை நமக்கு செய்யக்கூடியது. இந்த புகையை வீடு முழுக்க பரவ செய்யுங்கள். சாம்பலாகியதும் அந்த சாம்பலை, விபூதியாக தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டு வரவேண்டும். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு வளர்பிறை வெள்ளிக் கிழமைகளிலும் நீங்கள் செய்து வர, உங்களுடைய மனதில் இருக்கும் தீராத ஆசைகள், வேண்டுதல்கள் அனைத்தும் லட்சுமி தேவியின் அருளால் நிறைவேறும். சுகபோக வாழ்க்கைக்கு காரகத்துவம் பெற்றுள்ளவர் சுக்கிர பகவான். சுக்கிரனுடைய அருள் கிடைக்கக்கூடிய வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இதை செய்வதால், கிரக தோஷங்கள் நீங்கி, தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகி, குடும்பத்தில் சொத்து சேர்க்கை உண்டாகும்.