- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட விநாயகர் வழிபாடு

வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட விநாயகர் வழிபாடு

- Advertisement -

முழு முதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகர் பெருமான். பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் இருந்தாலும் அனைவரும் புன்னகைக்கும் வகையில் இருந்தாலும் பல அற்புதமான ஆற்றல் மிகுந்தவராக விநாயகர் பெருமான் திகழ்கிறார். விநாயகர் பெருமானிடம் இருந்து வரங்களை வாங்குவது என்பது மிகவும் கடினம். ஆனால் ஒருமுறை வாங்கி விட்டால் அது நம்முடைய ஜென்மம் முழுவதும் நம்முடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த விநாயகப் பெருமானை எப்படி வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட விநாயகர் வழிபாடு

வேதங்களுக்கு முதல்வனாக திகழக்கூடியவர் விநாயகர் பெருமான். யார் ஒருவர் எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு தான் செய்வார்கள். இது தேவர்களுக்கும் பொருத்தமான ஒன்றுதான். எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் விசேஷமாக இருந்தாலும் விநாயகப் பெருமானை அந்த இடத்தில் ஆவாஹனம் செய்வதற்கு மஞ்சள் மட்டும் இருந்தாலே போதும். மஞ்சள் விநாயகரை பிடித்து வைத்து நாம் தொடங்கக்கூடிய எந்த ஒரு காரியமும் மங்களகரமாக முடியும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை மாதத்தில் ஒரு நாள் மட்டும் இந்த முறையில் வழிபட்டால் நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதைப்பற்றி தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் அடுத்த கட்ட முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று முயற்சி செய்வோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான முன்னேற்றம் என்பது இருக்கும். இந்த முன்னேற்றத்தை பெறுவதற்கு நம்முடைய முயற்சிகள் மிகவும் முக்கியம். அப்படி முயற்சிகள் செய்தும் ஒரு சிலரால் அவர்களுடைய முன்னேற்றத்தை அடைய முடியாமல் தடைகள் உண்டாகும். அப்படிப்பட்ட தடைகளை நீக்குவதற்கு காரிய வெற்றி தருவதற்கு விநாயகப் பெருமானை ஒரே ஒரு நாள் மட்டும் வழிபட்டால் போதும்.

ஒவ்வொரு மாதத்திலும் 27 நட்சத்திரங்கள் வரும். அந்த 27 நட்சத்திரங்களில் ஒன்றாக திகழ்வதுதான் அஸ்வினி நட்சத்திரம். இந்த அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளன்று ராகு காலம், எமகண்டம் இவற்றை தவிர்த்து விட்டு கௌரி நல்ல நேரத்திலோ அல்லது சாதாரண நல்ல நேரத்திலோ அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரே ஒரு பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றால் போதும். அதுதான் அருகம்புல்.

- Advertisement -

அருகம்புல்லை கட்டாக வாங்கி யாருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமோ அவர்கள் தங்கள் கைப்பட மாலையாக கட்டி அதை விநாயகப் பெருமானுக்கு கொடுக்க வேண்டும். இப்படி மாலையாக நாம் கட்டும் பொழுது எதை நோக்கி நாம் முயற்சி செய்கிறோமோ எந்த முன்னேற்றம் நம் வாழ்வில் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை மனதார நினைத்துக் கொண்டு கட்ட வேண்டும். விநாயகர் ஆலயத்திற்கு சென்று இந்த அருகம்புல்லை கொடுத்துவிட்டு தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

எதிர்பார்த்த முன்னேற்றம் நடைபெற்ற பிறகு விநாயகப் பெருமானுக்கு தங்களால் இயன்ற அபிஷேகங்களை செய்து நெய்வேத்தியமாக விநாயகப் பெருமானுக்கு பிடித்த ஏதாவது ஒரு பொருளை வைத்து அதை அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி செவ்வாய்க்கிழமை வழிபாடு

விநாயகப் பெருமானின் முழு மனதோடு இந்த வழிபாட்டு முறையை மாதா மாதம் தொடர்ச்சியாக பின்பற்றுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் என்பது ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்