- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவம்ச தோஷத்தை நீக்கும் கரிநாள்

வம்ச தோஷத்தை நீக்கும் கரிநாள்

- Advertisement -

ஒருவருடைய குடும்பத்தில் எந்தவித சுப நிகழ்வுகளும் நடக்காமல் தடைகள் வந்து கொண்டே இருந்தாலும், உடல் நலத்தில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தாலும், குழந்தைகளாலோ அல்லது குழந்தைகள் பிறக்காமலோ கஷ்டப்பட்டு கொண்டு இருந்தாலும், அதே போல் வயதிற்கு வந்த குழந்தைகளுக்கு சரியான திருமண வாழ்க்கை அமையாமலோ அல்லது திருமணமே நடைபெறாமல் இருந்தாலோ அதற்கு வம்ச தோஷமும் ஒருவித காரணமாகவே அமைகிறது. அப்படிப்பட்ட வம்சதோஷத்தை நீக்குவதற்கு பெருமாளை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக எந்தவித சுப காரியமும் செய்ய தயங்கக்கூடிய கரிநாளில் வழிபாடு செய்ய வேண்டும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வம்ச தோஷத்தை நீக்கும் கரிநாள் வழிபாடு

வம்ச தோஷம் என்பது, ஒரு குடும்பத்தின் மூலம் ஒருவருக்கு வரக்கூடிய எதிர்மறை விளைவுகளைக் குறிக்கிறது. இது புத்திர பாக்கியம், திருமணம், தொழில், உடல்நலம் போன்ற பல விஷயங்களில் தடைகளை ஏற்படுத்தும். இந்த வம்ச தோஷத்தை நீக்குவதற்கு பலவிதமான பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. அந்த வகையில் பெருமாளை எந்த முறையில் நாம் வழிபட்டோம் என்றால் நம்முடைய வம்ச தோஷம் நீங்கும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

காலண்டரில் கரிநாள் என்று ஒரு நாள் வரும். அந்த நாளில் எந்தவித சுப காரியங்களையும் செய்யக்கூடாது எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கரிநாள் தான் நம்முடைய வம்ச தோஷத்தை நீக்குவதற்குரிய ஒரு அற்புதமான நாளாக திகழ்கிறது. அந்த நாளில் நாம் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.

வீட்டிலேயே கருவேப்பிலை சாதத்தை செய்து அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு கரிநாள் அன்று எடுத்துச் சென்று அந்த பெருமாளுக்கு நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அனைவரின் பெயர்களையும் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி நாம் கொண்டு வந்த கருவேப்பிலை சாதத்தை நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தரவேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு கரிநாள் தோறும் நாம் கருவேப்பிலை சாதத்தை பெருமாளுக்கு நெய்வேத்தியமாக வைத்து தானம் தருவதன் மூலம் நம்முடைய முன் ஜென்ம பாவங்கள் முற்றிலும் நீங்கும். மேலும் வம்சதோஷமும் விலகும். இதனால் நம்முடைய வாழ்க்கையில் தடைப்பட்டிருந்த அனைத்து விதமான சுப நிகழ்வுகளும் நடைபெற ஆரம்பிக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:சித்திரை அமாவாசை பரிகாரம்

நம்முடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய அற்புதமான சக்திகளை கொண்ட தெய்வமாக திகழக்கூடியவர்தான் பெருமாள். இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய முன் ஜென்ம பாவங்களும் வம்சதோஷமும் முற்றிலும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்