ஹைதராபாத் ஸ்டைல் வண்டி கடை சட்னி டேஸ்ட்டியாக 5 நிமிடத்தில் எப்படி தயாரிக்கலாம்?

peanut-verkadalai-chutney
- Advertisement -

வண்டிக்கடை சட்னி என்றாலே ரொம்பவே ருசியாக இருக்கும். அவர்கள் என்னதான் செய்வார்கள் என்று தெரியாது, தண்ணீராக சட்னி இருக்கும், இருப்பினும் அவ்வளவு டேஸ்டாக இருப்பது எப்படி? என்று நாம் அடிக்கடி குழம்பி போய் இருப்போம். அந்த வகையில் ஹைதராபாத்தில் வண்டி கடை ஃபேமஸான இந்த சட்னி எப்படி தயாரிக்கிறார்கள்? ரொம்பவே அருமையான ருசியை கொடுக்கக்கூடிய இந்த வண்டி கடை சட்னி எப்படி நாமும் வீட்டில் ஐந்து நிமிடத்தில் தயாரிக்கப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்.

ஹைதராபாத் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – ஐந்து, பூண்டு பல் – நான்கு, கொத்தமல்லி தழை – அரை கைப்பிடி, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, வறுத்த வேர்க்கடலை – அரைக்கப், உடைத்த கடலை – அரைக்கப், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று.

- Advertisement -

ஹைதராபாத் சட்னி செய்முறை விளக்கம்:
ஹைதராபாத் சட்னி செய்ய முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அரை கப் அளவிற்கு வேர்க்கடலையை வெறும் வாணலியில் போட்டு இரண்டு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு மட்டும் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய் சேர்த்து சுருங்க வதக்கி விடவும்.

மிளகாய் வெள்ளை நிறத்திற்கு மாறும். அதனுடன் தோல் உரித்த பூண்டு பற்களை சேர்த்து வதக்கி விடுங்கள். பின்னர் அரை கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி தழையை அரை பாகம் காம்புடன் நன்கு சுத்தம் செய்து சேர்த்து, ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியையும் போட்டு லேசாக வதக்கி விடுங்கள். பூண்டு, கொத்தமல்லி சுருண்டதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அதனுடன் அரை கப் அளவிற்கு உடைத்த கடலை சேர்த்து நீங்கள் வாணலியில் ஆற வைத்துள்ள பொருட்களையும் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த இந்த சூப்பரான சட்னியுடன் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் குழந்தைகள் எப்போதும் சோர்வாக இருக்கிறார்களா? இந்த சத்து நிறைந்த புரோட்டின் தோசை செய்து தாருங்கள், சோர்வு என்ற வார்த்தைக்கே இடம் இல்லை .

இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து தாளித்து ஒரு கொத்து கருவேப்பிலையை போட்டு ஒரு வர மிளகாயை காம்பு நீக்கி கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி இறக்கினால் சூப்பரான டேஸ்டில் வண்டி கடை சட்னி ரெசிபி ரெடி! இதே மாதிரி நீங்களும் இட்லி, தோசைக்கு செஞ்சு பாருங்க அசத்தலாக இருக்கும்.

- Advertisement -