இந்த நிலத்தை மட்டும் வாங்கவே கூடாது, புதிதாக நிலம், வாங்குபவர்கள் இந்த இடங்களை தெரியாமல் கூட வாங்க கூடாது. உங்களுக்கு தொடர்ந்து கஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

சொந்தமாக ஒரு நிலம், வாழ ஒரு சின்ன குடிசையாவது வேண்டும் என்று நினைக்காதவர்கள் யாரும் இல்லை. அப்படி ஒரு நிலம் வீடு வாங்குவதும் சாதாரண விஷயமும் கிடையாது. அதற்கு நம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டால் கூட, சிலருக்கு மட்டும் அந்த பாக்கியம் கிடைக்கும். அப்படி வாங்க கூடிய நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானசில ஆன்மிக தகவலை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நான் ஒரு வீடோ நிலமோ வாங்குவது என்பது நம் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்வதற்கு தானே அன்றி வாங்கிய பிறகு தினம் தினம் அதில் கஷ்டப்படுவதற்காக அல்ல. சிலர் நன்றாக சம்பாதித்து சேமித்து அல்லது கடன் வாங்கியோ, இப்படி எதோ ஒரு வகையில் முயற்சி செய்து சொந்தமாக இடத்தை வாங்கி இருப்பார்கள், வாங்கும் வரை அவர்கள் தொழில் நன்றாக போய்க் கொண்டிருக்கும், கையிலும் பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும், அந்த இடம் கைக்கு கையில் வந்ததும் பணவரவு தடைப்படும் ,கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

- Advertisement -

இன்னும் சில ஒரு வாடகை வீட்டில் இருக்கும் வரை சேமித்து தான் சொந்தமாக வீடு வாங்கி இருப்பார்கள். ஆனால் அந்த சொந்த வீட்டிற்கு போன பிறகு ஒரு நாளும் நிம்மதியாக இருக்க மாட்டார்கள். அதற்கு காரணம் என்னவென்று புரியாமல் யோசிப்பார்களே அன்றி, தாம் வாங்கிய நிலமோ, வீடோ காரணமாக இருக்கும் என்று யாரும் யோசிக்க மாட்டோம்.

இப்படி புதிதாக நாம் ஒரு இடமோ நிலமோ வாங்கி இருந்தால் அதின் பிறகு நமக்கு பிரச்சனைகள் தொடர்ந்தால் கண்டிப்பாக அந்த இடம் மண் தோஷம் ஆகியிருக்கும். நாம் வாங்கி இருக்கும் இடம், வீடு இதற்கு முன் அங்கு என்ன இருந்தது, யார் இருந்தார்கள் எந்த சூழ்நிலையில் அந்த இடம் உங்கள் கைக்கு வருகிறது என்பதை எல்லாம்  தெளிவாக விசாரித்து வாங்க வேண்டும்.

- Advertisement -

நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
நீங்கள் வாங்கி இருக்கும் இடத்தில் இதற்கு முன் யாராவது இறந்து புதைத்து இருந்தால் (முன்பெல்லாம் இறந்தவர்களை தங்கள் சொந்த நிலங்களில் புதைக்கும் பழக்கம் உண்டு) அப்போது அந்த மண் தோஷம் ஆகியிருக்கும். அது மட்டும் இல்லாமல் அந்த இடத்தில வேறு அசம்பாவிதங்கள், போன்றவை நடந்து இருக்கிறதா என்று விசாரித்து வாங்க வேண்டும். ஒரு சில இடங்களில் சூழ்நிலை காரணமாக விற்க மனம் இல்லாமல் அந்த இடத்தை விற்று இருப்பார்கள், ஆனால் காலத்திற்கும் அந்த இடத்தை கொடுத்து விட்டோமே என்று வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்படியான இடமும் உங்களை நிம்மதியாக வாழ விடாது. அப்படியானால் யாருமே சந்தோஷமாக நிலத்தை விற்க மாட்டர்கள் பிறகு எப்படி நிலம் வாங்குவது என்று யோசிக்கலாம், அதற்கு அர்த்தம் அப்படி இல்லை நிலம் வாங்கும் போது நியாயமான முறையில் வாங்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் ஒரு சிலர் பிறரின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மிகக் குறைந்த விலைக்கு அந்த இடத்தை வாங்குவார்கள், அப்போதும் அவர்கள் மனதிருப்தியோடு அந்த இடத்தை கொடுத்திருக்க மாட்டார்கள். இந்த இடத்திலும் வேறு ஒருவர் மாறும் போது கண்டிப்பாக அதில் வாழ்பவர் நிம்மதியாக வாழ முடியாது.

இதையும் படிக்கலாமே: : கடுகு அளவு கூட சந்தோஷம் இல்லாத வீட்டில், கடலளவு மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும் கடுகு. இதை மட்டும் செய்தால் குடும்ப கஷ்டங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் தீரும்.

கஷ்டப்பட்டு பாடுபட்ட சேர்த்து பணத்தில் வாங்கும் ஒரு இடம் அல்லது நமக்கு நிம்மதியும், சந்தோஷத்தையும் தர வேண்டுமே அன்றி, அதற்கு மாறாக இப்படி துன்பத்தையும், நஷ்டத்தையும் தரக்கூடாது. நீங்கள் புதிதாக ஒரு இடமோ அல்லது வீடு வாங்குவதாக இது போன்ற தகவல்களை நன்றாக விசாரித்து அதன் பிறகு வாங்கி நல்ல முறையில் சந்தோஷமாக வாழுங்கள்.

- Advertisement -