நடு இரவில் வானில் தோன்றிய சிவ பெருமான் உருவம் – வீடியோ

Lord sivan

“சர்வம் சிவ மயம்” என்பது சிவ பெருமானை முதன்மைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ நெறி மதக் கொள்கையை பின்பற்றுவோர்களின் திடமான நம்பிக்கையாகும். நாம் வாழும் இப்பிரபஞ்சத்தின் சிறு கோளான பூமியில் “நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாயம்” என்ற “பஞ்சபூதங்களின்” அமைப்பு அந்த “ஆதி சித்தனாகிய” சிவபெருமானின் அம்சமே என்ற மெய்யான உண்மையை கண்டறிந்த நம் தமிழ் சித்தர்கள், அந்த பஞ்சபூதங்களின் அமைப்பிலேயே சிவபெருமானை வழிபடுவதற்காக மிக சிறப்பான கோவில்களை நம் நாடு முழுவதும் நிர்மாணித்தனர். தன்னை முழுமையான உண்மை என்று ஏற்றுக்கொண்ட பக்தர்களுக்கு, தனது இருப்பை பலவகையில் அவர்களுக்கு காண்பித்துள்ளார் சிவன். அப்படியான ஒரு காணொளி தான் இது.

இக்காணொளி நம் நாட்டின் எங்கோ ஒரு பகுதியில் பதிவுசெய்யப்பட்டது. ஏதோ ஒரு ஊரில், இரவு நேரத்தில்,இடி மின்னல்களுடன் மழை பொழியும் சூழ்நிலை உருவாகிவருவதைப் இக்காணொளியில் நாம் பார்க்கிறோம். தற்செயலாக சிலர் தங்கள் கேமராவில் இந்நிகழ்வை காணொளியாக பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது அம்மழை மேகங்களில் உண்டாகும் இடி மின்னல்ளில் திடீரென்று ஒரு மிகப்பெரிய மின்னல் தோன்றி மறைந்தது அவர்கள் எடுத்த அந்த காணொளியில் பதிவாகியது. முதலில் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட அவர்கள், அக்காணொளியை மீண்டும், மீண்டும் மெதுவாக ஓட விட்டு பார்த்த போது, அதில் ஒரு அதிசயக் காட்சி பதிவாகியிருந்ததை கண்டனர்.

அதாவது அந்த மழை மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிய போது, ஒரு மிகவும் ஒளி மிகுந்த மின்னல் உருவாகியது. அந்த வெளிச்சத்தில் ஒரு மனிதன் அமர்ந்து தியானம் செய்வது போன்ற ஒரு காட்சி தோன்றி மறைந்தது. அந்த காட்சியை உன்னிப்பாக கவனித்த போது அது “சிவ பெருமான்” தியான நிலையில் அமர்ந்திருப்பது போல் இருந்தது. அக்காட்சி ஒரு நொடிப்பொழுதே தோன்றி மறைந்தாலும், அதைக் கண்டவர்களுக்கு அது ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது.

நம்மை மீறிய சக்தி ஒன்று இப்பிரபஞ்சத்தில் இருப்பது உண்மை. அதை ஒவ்வொருவரும், தங்களுக்கு பிடித்த உருவத்தில் வழிபடுவதில் தவறில்லை. ஆனால் மற்றவர்களின் இறை நம்பிக்கையை தவறு எனக் கூறி தங்களின் எத்தகைய கொள்கையையும் பிறரிடம் கட்டாயமாக திணிப்பது, அந்த இறைவனே விரும்பாத ஒன்று.