வன்னிமர பிள்ளையாருக்கு எதற்காக இவ்வளவு மகத்துவம்? காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

நம் ஜாதகத்தில் ஏதாவது தோஷங்கள் இருந்தாலும் அல்லது சனிபகவானால் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அல்லது முன் ஜென்ம பாவத்தின் மூலம் நமக்கு ஏற்படும் தாக்கத்தினை குறைக்க வேண்டும் என்றாலோ அதற்கு பரிகாரமாக வன்னிமர பிள்ளையாரை வணங்குவது நல்லது என்று ஜோசியர்கள் சொல்லி நாம் கேட்டிருப்போம். இந்த வன்னிமர பிள்ளையாருக்கு அப்படி என்னதான் மகத்துவம் இருக்கிறது என்பதை நாமும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

Vannimara-pillaiyar1

சுமார் 400 வருடங்களுக்கு முன்பாக ஒரு கிராமத்தில் மழை இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டது. நிறைய மக்கள் பசியால் இறந்து கூட போனார்கள். வரட்சி சமயத்தில் அந்த கிராமத்திற்கு வருகை தந்த ஒருவர் வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வணங்கி ஆசிர்வாதம் பெற்று அருகில் இருந்த குளத்தை தூர்வாரி சீர் படுத்தினார். அதன்பின்பு அந்த ஊரில் நல்ல மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பி செழிப்பாக மாறியது. இது நிஜமான ஒன்று.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓடைப்பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் உண்மையாகவே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் அந்த கிராமத்தில் அந்த ஊர் மக்கள் வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். இந்த ஊர் செழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த குளத்தை சீரமைத்தவர் அண்ணாமலை செட்டியார் என்பவர் தான். இவரை நினைவு கூறும் வகையில் கோயிலுக்கு அருகிலேயே இவருக்கு சிலை அமைக்கப்பட்டு பூஜைகளும் செய்யப்பட்டு வருகிறது.

vanni tree

இந்த கோவிலில் இருக்கும் விநாயகருக்கு இந்த ஊர் மக்கள் பணம் திரட்டி 1982-ம் வருடம் கோவில் அமைத்தனர். இன்றளவும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் ஏராளமாக வருகை தந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இந்த கோவிலுக்கு சென்றால் திருமணத்தடை, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம், தொழிலில் முன்னேற்றம், நவக்ரஹ தோஷம், முன் ஜென்ம பாவம், இப்படி நமக்கு எந்த பிரச்சினைகள் இருந்தாலும் அது தீரும் என்பது இந்த ஊர் மக்களின் நம்பிக்கை. இதுநாள்வரை இங்கு வந்த மக்கள் பலம் பெற்றும் சென்றுள்ளார்கள். இந்த கோவிலில் இருக்கும் பிள்ளையாருக்கு 11 வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நீங்கள் வேண்டிய பிரார்த்தனை நிச்சயம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சம்பவம் ஒருபுறமிருக்க இந்த வரலாற்று கதையை கேளுங்கள்..

vanni-tree

பல நூறு வருடங்களுக்கு முன்பு விதர்ப்ப நாட்டை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் மக்களை கொடுமைப்படுத்தினான். மன்னன் செய்யும் பாவத்திற்கு துணையாக ஒரு அமைச்சரும் இருந்தார். இந்த மன்னனும் அமைச்சரும் அடுத்த பிறவியில் ஒருவரை ஒருவர் துரத்தி கொள்ளும்படியான அவதாரத்தை எடுத்தனர். எப்படி? காகமும் ஆந்தையுமாகவும், பாம்பும் தேளாகவும், நாயும் பூனையும், மீன் முதலாகவும் இப்படி ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் பிறவியாக அவதரித்தார்கள். இவர்களுக்கு மோட்சம் ஏற்படவில்லை. அடுத்தடுத்து பிறவி எடுத்து ஒருவரை ஒருவர் சண்டை போட்டு சாகடிப்பது தொடர்ந்து வந்தது.

vanni-tree1

இந்த சம்பவம் தொடர, ஒருசமயம் மன்னனும் அமைச்சரும், வேடனும் ராட்சசனுமாக பிறந்தனர். ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு செல்ல, ராட்சசனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேடன் வன்னி மரத்தின் மேலே ஏறினான். அவன் ஏறும் சமயத்தில் வன்னி மரத்தில் உள்ள இலைகளானது, விநாயகரின் மீது விழுந்தது. வேடனை துரத்தி சென்ற ராட்சசனும் வன்னி மரத்தின் மேலே ஏறினான். அந்த சமயத்தில் வன்னி மர இலைகள் விநாயகரின் மீது விழுந்தது. ஆகவே இருவரின் மூலமாக வன்னி மரத்து விநாயகர் வன்னி மரத்து இலைகளால் அர்ச்சனை செய்யப்பட்டார். அந்த சமயம் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில், இருவரும் தனது உயிரை இழந்து சிவலோகத்தில் மோட்சத்தை பெற்றனர் என்று கூறுகிறது வரலாறு. இவ்வாறாக இவர்கள் இருவரும் செய்த பாவத்திற்கு மோட்சம் தந்த அந்த வன்னி மரத்தடி பிள்ளையார் நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவத்திற்கும் நன்மை செய்வார் அல்லவா? இதற்காகத்தான் இவருக்கு இவ்வளவு சிறப்பு.

நடந்த நிஜ சம்பவமாக இருந்தாலும் சரி, புராணக் கதையாக இருந்தாலும் சரி. வன்னி மரத்தடி பிள்ளையாருக்கு அதிக சக்தி உண்டு என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களால் முடிந்தால் வன்னி மரத்தடி பிள்ளையாரை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்களது துன்பமும் தீரும்.

இதையும் படிக்கலாமே
இந்தப் பொருளை அதிக பணம் செலவழித்து வாங்கிக் கொண்டே இருந்தால், பண வரவு வந்து கொண்டே இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vanni marathadi vinayagar temple. Vanni maram temple. vannimara vinayagar. Vanni maram Tamil. Vanni mara pillaiyar.