இந்தப் பொருளை அதிக பணம் செலவழித்து வாங்கிக் கொண்டே இருந்தால், பண வரவு வந்து கொண்டே இருக்கும்.

money1-1

நம் வீட்டில் பண வரவிற்காக நாம் இன்றளவும் எத்தனையோ முயற்சிகளை எடுத்துக் கொண்டுதான் வருகின்றோம். யார் எதை சொன்னாலும் சரி ‘பணம் நமக்கு அதிகமாக சேரும்’ என்று கூறினால் மட்டும் போதும் அந்த பரிகாரத்தை நாம் முன்பின் யோசிக்காமல் செய்துவிடுவோம். இது எல்லோருக்கும் இருக்கும் பழக்கம்தான். நமக்கு கெடுதல் நடக்காமல் இருக்கும் எந்த ஒரு பரிகாரமானாலும் அதை நாம் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஏனென்றால் நம் முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எந்த ஒரு பரிகாரத்தையும், எந்த ஒரு செயலையும் நமக்கு கூறிவிட்டு செல்லவில்லை என்பதை நாம் உணர்ந்து இருக்கின்றோம். நமது நாட்டில் மட்டும் இப்படிப்பட்ட பரிகாரங்களும், சகுனங்களும் இருக்கிறதா என்றால்! இல்லை. அவரவர் நாட்டுக்கென்று, அவரவர்க்குத் தகுந்தவாறு ஒரு சாஸ்திரத்தை பின்பற்றிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அவற்றுள் சில நம்பமுடியாத பழக்கவழக்கத்தை பற்றி முதலில் நாம் இன்று தெரிந்துகொண்டு, அதன்பின்பு எந்த பொருளை நம் வீட்டில் அதிகமாக வாங்கி பயன்படுத்தினால், நம் வீட்டில் செல்வம் சேரும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

money bag

ஜப்பான் ஒரு சிறிய நாடாக இருந்தாலும் உழைப்பிற்கு பேர்போன நாடு அது. அந்த நாட்டில் உள்ளவர்கள் பாம்புக்கறி மாமிசத்தை அதிகமாக உண்ணும் பழக்கம் உடையவர்கள். ஆனால் அவர்களுக்கு பாம்பின் தோல் என்றால் மிகவும் புனிதமானதாகும். அந்தப் பாம்பின் தோலை சிறிய துண்டாக வெட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டால், அதிகமாக பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதுவே வெள்ளை பாம்பின் தோலாக இருந்தால் இன்னும் விசேஷம் என்று கூறுகிறார்கள். எவ்வளவு விலையாக இருந்தாலும் அந்த வெள்ளை பாம்பின் தோலினை வாங்கி தன் பர்சில் வைத்துக் கொள்வார்களாம்.

இதேபோன்று பிரேசில் நாட்டில் ஒரு பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வீட்டிலோ, ஹோட்டலிலோ, டீ காபி போடுவது என்றால், அந்த கப்பில் முதலில் சர்க்கரையை தான் போடுவார்கள். பின்புதான் டிக்காஷனோ அல்லது காப்பித்தூளையோ போட வேண்டும் என்பது அவர்களது பழக்கம். சர்க்கரைக்கு மாறாக டிக்காஷனையோ, காபி பவுடரையோ முதலில் போட்டு விட்டால், அவர்களிடம் இருக்கும் பணமானது விரயமாகி விடும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆச்சரியமாக உள்ளது அல்லவா? ஜப்பானியர்களை பார்த்து நீங்களும், பணம் சேர வேண்டும் என்று பாம்பு தோலை எடுத்து உங்கள் பணப் பெட்டிக்குள் வைத்துக் கொள்ளாதீர்கள். அதெல்லாம் நமக்கு முறையானது அல்ல.

நம் முன்னோர்கள் நம் சாஸ்திரப்படி கூறப்படும் பழக்கவழக்கத்தை நாம் பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை. பழக்கவழக்கம் என்பது நமக்கு மட்டுமல்ல. உலகத்தில் உள்ள அனைவருக்கும் அவரவரேக்கென்று, அவர்கள் முன்னோர்கள் சொன்ன பழக்கவழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த எடுத்துக்காட்டுகள்.

- Advertisement -

அடுத்ததாக நாம் எந்த ஒரு பொருளை காசு செலவழித்து வாங்கினால், அதிகமாக பணம் சேரும் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றார்கள் என்பதை தெரிந்து கொள்வோம். அந்தப் பொருள் நாம் அன்றாடம் நம் வீட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான். ‘நெய்’. அதிலும் சுத்தமான பசுநெய்க்கு இருக்கின்ற மகத்துவம் வேறு எதற்கும் இல்லை.

ghee

அப்படிப்பட்ட சுத்தமான பசு நெய்யை நம் வீட்டில் வாங்கிக்கொண்டெ இருந்தால் பணப்புழக்கம் நம் வீட்டில் அதிகரிக்கும் என்று கூறுகிறது சாஸ்திரம். எப்படி? நெய்யை அதிகமாக உண்ணக்கூடாது. அளவோடு உண்ணுவது ஆரோக்கியம் தரும். ஆனால் நம் வீடுகளில் தீபம் ஏற்றுவதற்கு நெய்யை அதிகமாக வாங்கலாம். கோவில்களில் தீபம் ஏற்றுவதற்கு நெய் வாங்கி தானமாக கொடுக்கலாம். யாகங்கள், ஹோமங்கள் நடத்தப்படும் இடங்களுக்கு நெய் தானமாக வழங்கலாம். உங்களால் முடிந்தால் குழந்தைகள் ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நெய்யை தானமாக வழங்கலாம். இப்படி நீங்கள் எந்த அளவிற்கு நெய் வாங்க உங்களது பணத்தினை செலவு செய்கிறீர்களோ, அதைவிட பல மடங்கு உங்களது வருமானம் பெருகும். சுத்தமான பசு நெய் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து தான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் தண்ணீரை இந்த இடத்தில் மட்டும் வைக்காதீர்கள். விபரீத விளைவுகள் நேரிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam peruga pariharam Tamil. Panam peruga tips Tamil. Panam peruga valigal Tamil. Panam peruga vali Tamil.