- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவரலட்சுமி விரதத்தன்று சொல்ல வேண்டிய மந்திரம்

வரலட்சுமி விரதத்தன்று சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

இன்று வரலட்சுமி விரதம். நிறைய பேர் வீடுகளில் கலசம் நிறுத்தி வழிபாடு செய்யக்கூடிய வழக்கம் இருக்கும். நிறைய பேர் லட்சுமி தாயாரின் புகைப்படத்தை வைத்து இன்றைய வழிபாட்டை மேற்கொள்வார்கள். எந்த முறைப்படி நீங்கள் வழிபாட்டை செய்தாலும், தூய்மையான பக்தியோடு அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்யாமல், வழிபடும் முறை தான், முழுமையான பலனை கொடுக்கும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் நீங்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டாலும் சரி, வரலட்சுமி விரத வழிபாட்டை மேற்கொள்ளவில்லை என்றாலும் சரி, இன்றைய தினம் மகாலட்சுமி அருள் ஆசி உங்கள் குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்றால் எந்த மந்திரத்தை உச்சரிப்பது, ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வரலக்ஷ்மி விரதம் மந்திரம்

இன்று மகாலட்சுமியின் அருள் ஆசிய முழுமையாக பெற நீங்கள் எளிமையாக சொல்ல வேண்டிய ஒருவரி மந்திரம் ‘ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே நமஹ’ மந்திரம் இவ்வளவுதான். இந்த பதிவை படித்து முடித்துவிட்டு உட்கார்ந்த இடத்திலிருந்து கண்களை மூடி இரண்டு நிமிடம் இந்த மந்திரத்தை சொன்னாலும் போதும்.

உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்று மாலை பூஜையில் விளக்கு ஏற்றி மகாலட்சுமியை பூக்களாலோ, அல்லது துளசி இலைகளாலோ, அல்லது தாமரை இதழ்களாலோ அல்லது அட்சதையாலோ அர்ச்சனை செய்ய முடியும் என்றால் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி அர்ச்சனை செய்து நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இரண்டு வாழைப்பழம் நெய்வேத்தியம் வைத்தாலும் போதும் நீங்கள் வரலட்சுமி விரதம் இருந்த முழு பலனையும் அடைய முடியும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த எளிமையான வரலட்சுமி விரதம் வழிபாடு சமர்ப்பணம். இப்படித்தான் இந்த முறையில் தான் வழிபாடு இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

இதையும் படிக்கலாமே: நகை கடனை அடைக்க பரிகாரம்

ஆனால் அந்த வழிபாட்டை நம்மால் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கும் போதும் இறைவனை மறக்காமல் சுலபமான முறைகளில் வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுதும் நமக்கு உண்டான பலன் நிறைவாக கிடைக்கும். வழிபாடுகளில் வைக்க கூடிய பொருட்களில் நமக்கு பலன் கிடைக்காது. வழிபாடுகளில் வைக்கக்கூடிய நம்பிக்கையில் தான் பலன் உண்டு என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்