- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவராத பணம் திரும்ப கிடைக்க

வராத பணம் திரும்ப கிடைக்க

- Advertisement -

இப்போதெல்லாம் கடன் வாங்கியவர்களை விட கடன் கொடுத்தவர்கள் தான் அதிகம் சிரமப்படுகிறார்கள். கொடுத்த பணத்தை எல்லோரும் சரியாக திருப்பிக் கொடுத்து விடுவது கிடையாது. நம்மிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, நம்மைப் பற்றியே தவறாக பேசுபவர்களும் உண்டு. இப்படி மற்றவர்களிடம் கொடுத்து பணத்தை ஏமாந்தவர்கள், வீட்டில் 48 நாட்கள் தொடர்ந்து இந்த தண்ணீரை தெளித்து வந்தால், வராத பணம் திரும்ப வரும் என்பது ஐதீகம். கொடுத்த பணம் திரும்ப கிடைக்க என்ன செய்யணும்? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் தெரிந்து கொள்வோம்.

ஒருவரிடம் நாம் கடனாக நம்பி பணத்தை கொடுத்தால், அதை பணமாக மட்டும் அவர்கள் பார்க்கக் கூடாது. நம் உழைப்பையும் அவர்கள் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உழைப்பிற்குரிய மரியாதை கொடுத்து சரியான நேரத்தில் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும். பணத்தை கொடுக்க முடியாவிட்டாலும், ஏமாற்றாமல் சரியான காரணத்தை கூறி அவகாசம் கேட்கலாம்.

- Advertisement -

பணத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு, பணம் கொடுத்தவர்களையும் தவறாக பேசுபவர்களுக்கு துரதிர்ஷ்டம் ஏற்படும். கடன் என்பது ஒரு மிகப்பெரிய பாவம். அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் தவறு தான், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றுவதும் தவறு தான். இந்த இரண்டு பாவங்களுக்கும் அவ்வளவு சீக்கிரம் இறைவனிடத்தில் மன்னிப்பு கிடைப்பதில்லை என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

முதலில் ஒரு செம்பு அல்லது பித்தளை கலசம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். மண் கலசம் எடுத்தாலும் சரி தான். நாட்டு மருந்து கடையில் சுத்தமான பன்னீர் ஒரு பாட்டில் வாங்கி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பன்னீருடன் 5 ஏலக்காய்களை லேசாக இடித்து சேருங்கள். மூன்று கிராம்பு துண்டுகளை போடுங்கள். பச்சைக் கற்பூரத்தை மிளகு அளவிற்கு எடுத்து நுணுக்கி சேருங்கள். இப்பொழுது மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான கலசத் தண்ணீர் தயார்! இந்த கலசத்தில் மாவிலை கொத்து ஒன்றை கழுவி சுத்தம் செய்து வையுங்கள்.

- Advertisement -

மாவிலைக்கு நேர்மறை ஆற்றல்களை கொடுக்கக்கூடிய தன்மை உண்டு. மகாலட்சுமிக்கு ரொம்பவும் பிடித்த இந்த தீர்த்தத்தை தயார் செய்யும் பொழுது அன்றைய நாள் பௌர்ணமி அல்லது வளர்பிறை வெள்ளிக்கிழமையாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தேய்பிறையில் இதை தயாரித்து வைக்க கூடாது. நிறைந்த பௌர்ணமி அல்லது வளர்பிறை நாட்களில் தயார் செய்து கொள்ள வேண்டும். ஒருமுறை தயார் செய்தால் போதும், 48 நாட்களுக்கு அதையே பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே:
குலோப் ஜாமுன் உடையாமல் செய்யும் முறை

தினமும் காலையில் எழுந்தவுடன் நீங்கள் கோலம் போட போகும் பொழுது சாதாரண தண்ணீர் தெளித்து கோலம் போடுவீர்கள் அல்லவா? அது போல தண்ணீர் தெளித்த பின்பு கடைசியாக நீங்கள் கையில் இருக்கும் இந்த கலச தண்ணீரை மூன்று முறை கொடுத்த பணம் திரும்ப வர வேண்டும் என்று மனதார மகாலட்சுமியை நினைத்துக் கொண்டு தெளிக்க வேண்டும். தெளிக்கும் பொழுது “ஓம் மகாலட்சுமி தாயே போற்றி” என்னும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். கலச தண்ணீரை தெளித்த பின்பு நீங்கள் வழக்கம் போல உங்களுடைய கோலத்தை போட்டுக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து 48 நாட்களுக்கு இந்த தண்ணீரை மாவிலையால் தெளித்து, பின்பு கோலம் போட்டு வந்தால் வராத பணம் உங்களை தேடி தானாகவே வந்து சேரும் என்பது நம்பிக்கை.

சற்று முன்