ஒருவருடைய வாழ்க்கையில் பணத்திற்கு மிகப்பெரிய பங்கு என்பது இருக்கிறது. அதனால்தான் அனைவருமே பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். மற்றவர்கள் மற்ற எந்த செயலிலும் ஈடுபடுகிறார்களோ இல்லையோ பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற செயலில் கண்டிப்பான முறையில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட பணத்தை பெறுவதற்கும் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கவும் எப்பேர்ப்பட்ட பண பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கும் கடைசி சோமவார நாள் அன்று வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சோமவார வழிபாடு
சிவபெருமானுக்கு உகந்த கிழமையாக கருதப்படுவது திங்கட்கிழமை. அதிலும் குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை என்பது சோமவார வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய சோமவாரம் எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட பல மடங்கு பலனை தரக்கூடியதாக திகழ்வதுதான் கடைசி சோமவார வழிபாடு. இவ்வளவு நாட்களும் விரதம் இருக்காதவர்கள் கூட இந்த கடைசி சோமவார விரதத்தை மேற்கொள்ளும் பொழுது அவர்களின் வேண்டுதல் முழுமையாக நடைபெறும் என்று கூறலாம்.
இந்த வழிபாட்டிற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து ஓம் சிவ சிவ ஓம் என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரித்து இன்றைய நாள் முழுவதும் உங்களை நினைத்து நான் விரதம் இருக்கப் போகிறேன் என்னுடைய இந்த வேண்டுதலை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஒரு வேண்டுதலை முன்வைக்க வேண்டும். காலையிலும் மதியத்திலும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து மாலை நேரத்தில் பிரதோஷ நேரமான 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும்.
கடைசி சோமவார நாள் அன்று பல சிவாலயங்களில் சங்காபிஷேகம் என்பது நடைபெறும். அப்படி நடைபெறும் பட்சத்தில் அந்த அபிஷேகத்தில் கலந்துகொண்டு சிவபெருமானை முழுமனதோடு வழிபாடு செய்து கொள்ளுங்கள். பிறகு வீட்டிற்கு வந்து திரும்பவும் ஒரு முறை குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் மஞ்சளால் சிவலிங்கம் செய்து வைக்க வேண்டும். அந்த சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளை வைக்க வேண்டும். அடுத்ததாக ஆறு நெல்லிக்கனிகளை வாங்கி அதை இரண்டாக நறுக்கி நடுவில் இருக்கக்கூடிய கொட்டையை நீக்கிவிட்டு நெய் ஊற்றி 12 நெல்லிக்கனி தீபமாக அதை ஏற்ற வேண்டும்.
பிறகு அந்த தீபத்திற்கு முன்பாக ஒரு பிரியாணி இலையில் காலையில் என்ன வேண்டுதலை நீங்கள் முன் வைத்தீர்களோ அந்த வேண்டுதலை எழுதி வைக்க வேண்டும். பச்சரிசி வெல்லம் கலந்து அதை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு ஓம் சிவ சிவ ஓம் என்னும் மந்திரத்தையும் ஓம் நமசிவாய நமநமசிவாய என்னும் மந்திரத்தையும் ஓம் நற்பவி நற்பவி என்னும் மந்திரத்தையும் 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். மறுபடியும் உங்களுடைய வேண்டுதலை முன்வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.
வழிபாட்டை நிறைவு செய்த பிறகு மஞ்சளில் பிடித்து வைத்திருக்கின்ற சிவலிங்கம் இருக்கும் அல்லவா? அந்த சிவலிங்கத்தை எடுத்து சிறிது தண்ணீரில் குலைத்து உங்களுடைய நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பணம் வைக்கும் இடத்தில் இந்த மஞ்சளை கட்டியாக எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். மீதம் இருக்கும் மஞ்சளை தண்ணீரில் நன்றாக கரைத்து வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். அடுத்ததாக நாம் நெய்வேத்தியமாக வைத்த இந்த பச்சரிசி வெல்லத்தை சிறிதளவு எடுத்து எறும்புகள் இருக்கும் இடத்தில் போட்டுவிட்டு மீதம் இருக்கக்கூடிய பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட வேண்டும். பிரியாணி இலையை தீபத்தில் காட்டி எரித்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:சிவன் கோவில் விபூதி பிரசாதம் பயன்படுத்தும் முறை
இந்த முறையில் முழு மனதுடன் சிவபெருமானை நினைத்து கடைசி சோமவார நாளான டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு அவர்கள் முன்வைத்த பணம் தொடர்பான எந்த வேண்டுதலாக இருந்தாலும் அவை நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.