வரவேற்பு அறையில் இந்த 3 பொருட்களை வைத்தால் வராத சந்தோஷமும் வீட்டிற்குள் விரும்பி வரும்.

home-mahalakshmi
- Advertisement -

ஒரு வீடு என்று இருந்தால் அதில் வசிப்பவர்களின் மனது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வீட்டில் கடமைக்காக வாழ வேண்டுமே என்று வாழக்கூடாது. சந்தோஷமும், சிரிப்பு சத்தமும் ஒரு வீட்டில் நிலையாக இருந்தால்தான் அது வீடு. இல்லை என்றால் அது செங்கலால் கட்டி வைத்த ஒரு சொத்து. அவ்வளவு தான். மகிழ்ச்சிக்கு சொந்தமான இடத்தில்தான் மகாலட்சுமியும் வாசம் செய்வாள். மகிழ்ச்சியே இல்லாத செங்கலால் கட்டப்பட்ட ஒரு வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய விரும்ப மாட்டாள். ஆக மகிழ்ச்சியை ஒரு வீட்டில் நிரந்தரமாக கொண்டு வர என்ன செய்ய வேண்டும்.

வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டுப் பேசிக்கொள்ள வேண்டும். ஒரே வீட்டில் சிலர் வாழ்வார்கள். ஆனால் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளாமல், துக்கத்தை பகிர்ந்து கொள்ளாமல் ஆளுக்கு ஒரு மூலையில் வசிப்பார்கள். இப்படி இருக்கவே கூடாது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடக் கூடிய வழக்கம் ஒரு குடும்பத்தில் இருந்தால் அது அந்த குடும்பத்திற்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுக்கும். மன அழுத்தத்தை குறைக்கும்.

- Advertisement -

பிரச்சனை சண்டை சச்சரவு என்று வந்தாலும் சரி, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். தகாத வார்த்தைகளை வீட்டில் உச்சரிக்க கூடாது. பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். மேல் சொன்ன சின்ன சின்ன இந்த விஷயங்களை பின்பற்றினாலே குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதையும் மீறி குடும்பத்தில் பிரச்சனைகள் வந்தால் என்ன செய்வது. ஆன்மீக ரீதியாக ஏதாவது பரிகாரம் உண்டா என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன பரிகாரம் இதோ.

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை 2 ஸ்பூன், மங்கலகரத்தை கொடுக்கும் மஞ்சள் கிழங்கு – 2, பார்த்தவுடன் மகிழ்ச்சியை கொடுக்கும் பூக்கள் அவ்வளவுதான். இந்த மூன்றையும் தனித்தனியாக ஒரே தட்டில் அடுக்கி வைத்தாலும் சரி. தனித்தனி கிண்ணத்தில் போட்டு ஒரே தட்டில் வைத்தாலும் சரி. வீட்டின் வரவேற்பு அறையில் ஒரு நாற்காலியின் மேல் அழகிற்காக இதை வைத்தாலும் தவறு கிடையாது. வீட்டிற்குள் வருபவர்களுடைய கண்களில் இந்த மூன்று பொருட்களும் ஒன்றாக பட வேண்டும் அவ்வளவுதான்.

- Advertisement -

குழந்தைகள் அந்த சர்க்கரையை எடுத்து சாப்பிட்டாலும் தவறு கிடையாது. சர்க்கரைக்கு பதில் கல்கண்டு கூட வைக்கலாம். வீட்டிற்கு வருபவர்கள் அந்த கற்கண்டை சாப்பிடலாம். தவறு கிடையாது. உங்கள் வீட்டிற்குள் நுழையக்கூடிய யாரோ ஒருவர் உங்களுக்கு நல்லது நினைத்து வந்தாலும் சரி, கெடுதல் நினைத்து வந்தாலும் சரி, அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்களே வெளியில் இருந்து ஏதோ ஒரு கோபத்தோடு வீட்டிற்குள் வந்தாலும் சரி, வரவேற்பறையில் இருக்கும் இந்த பொருட்களை பார்த்தவுடன் மனது அமைதியாகிவிடும்.

உங்களை திட்டுவதற்காக வந்தவர்கள் கூட வாழ்த்தி விட்டு செல்வார்கள் என்றால் பாருங்கள். அந்த அளவிற்கு ஒரு நல்ல வைப்ரேஷனை கொடுக்கக்கூடிய பொருட்கள் தான் இவை. மஞ்சளை வண்டு வரும் வரை மாற்ற வேண்டாம். அப்படியே வைத்துக் கொள்ளலாம். வாரம் ஒரு முறை பழைங சர்க்கரையை எறும்புக்கு போட்டுவிட்டு, புதியதாக வைத்துக் கொள்ளுங்கள். பூக்களை வாடிய பின்பு மாற்றி வைத்துக் கொண்டால் போதும். இது பார்ப்பதற்கு சிறிய பரிமாறமாக இருந்தாலும், இந்த பரிகாரம் செய்யும் வேலைகள் ரொம்ப ரொம்ப பெரியது. நீங்கள் வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டில் ஒரு வாரம் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். பின்பு உங்களுக்கே பிடித்து விடும்.

- Advertisement -