நாம் செலவு செய்த பணம் மறுபடியும் இரட்டிப்பாக நம் கைக்கு வந்து சேர வேண்டும் என்றால், ஒரே வழி, முதல் வழி என்ன தெரியுமா. எந்த ஒரு வேலையை நம் மனநிறையோடு சந்தோஷமாக செய்கின்றோமோ, அதன் மூலம் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். அதே போல தான் செலவு செய்யும் பணத்தையும் மன நிறைவோடு, மகிழ்ச்சியோடு செலவு செய்து பாருங்கள், அந்த பணம் அடுத்த சில நாட்களில் வருமானமாக உங்கள் கைக்கு வந்து சேரும். கையில் இருக்கும் பணத்தை செலவு செய்யும்போது மனதால் அழுது கொண்டே செலவு செய்யக்கூடாது. அது நமக்கு மேலும் மேலும் நஷ்டத்தை தான் கொண்டு வந்து சேர்க்கும் இது முதல் வழி.
அடுத்தபடியாக பணத்திற்கு மரியாதையை கட்டாயம் நீங்கள் கொடுக்க வேண்டும். பணத்தை எண்ணும்போது கட்டாயமாக எச்சில் தொட்டு என்ன கூடாது. பெட்டின் மேல் வைத்து எண்ணக் கூடாது. தரையில் அமர்ந்து கீழே ஒரு விரிப்பு விரித்து தான் பணத்தை வைத்து எண்ண வேண்டும். ‘அந்த அளவிற்கு கட்டு கட்டாகவா என்னிடம் பணம் உள்ளது. ஏதோ வரக்கூடிய காசை எண்ணி பீரோவில் கூட வைக்க முடியவில்லை’ என்று சிலர் புலம்பக் கூடிய சத்தம் கேட்கிறது. உண்மை தான். இருப்பினும் வரக்கூடிய ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் அதை சரியான முறையில் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்தால் அந்த ஆயிரம் ரூபாய் பல மடங்காக நிச்சயம் பெருகும் கவலைப்படாதீங்க.
வெறும் 5000 ரூபாய் வாடகை கொடுப்பதாக இருந்தாலும் சரி, அந்த பணத்தை எடுத்து கையில் எண்ணுவீர்கள் அல்லவா. பால்காரருக்கு கொடுக்கக்கூடிய பாக்கியைக் கூட எண்ணி தானே கொடுப்பீர்கள். மளிகை கடைக்காரர்களுக்கு பாக்கி கொடுக்க வேண்டும் என்றால் கையில் பணத்தை எண்ணி தானே கொடுப்பீர்கள். அப்போது வீட்டில் இருந்து பணத்தை எண்ணி எடுத்துக் கொண்டு போவீர்கள் அல்லவா. உங்களுடைய கையில் கொஞ்சம் புனுகு எடுத்து தடவி அதன் பின்பு அந்த பணத்தை எண்ணி அடுத்தவர்களுக்கு கொடுங்கள். (சின்ன காய்கறி வாங்கும்போது, பூ வாங்கும் போது செலவு செய்யக்கூடிய 10 ரூபாயை கூட இப்படி கையில் புனுகு தடவிக் கொண்டு அந்த பணத்தை எடுத்து செலவு செய்ய வேண்டும்.)
அதேபோல பீரோவில் பணத்தை எண்ணி வைக்கும் போதும் உங்களுடைய கையில் புனுகை தடவிக் கொண்டு பணத்தை எண்ணி பீரோவுக்குள் சேமித்து வையுங்கள். இப்படி செய்தால் பணம் பல மடங்காக பெருகும். நீங்கள் செலவு செய்த பணம் மீண்டும் உங்கள் கைக்கே திரும்ப வரும். புனுகு நாட்டு மருந்து கடைகளில் விற்கும். கொஞ்சம் தரமான புனுகாக பார்த்து வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
கூடுமானவரை மஞ்சள் நிற துணிப்பை, மஞ்சள் நிற சுருக்குப்பை, மஞ்சள் நிற பர்ஸ், இவைகளில் பணத்தை சேமித்து வைப்பது மிக மிக நல்லது. லெதர் பர்ஸ் யூஸ் பண்ணாதீங்க. மஞ்சள் நிற துணி பையில் பணத்தை சேமித்து வைப்பது நல்ல வருமானத்தை கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: இந்த ஒரு பொருளை புரட்டாசி சனிக்கிழமைகளில் தானமாக கொடுப்பதால், பணத்தட்டுப்பாடும், உணவு தட்டுப்பாடும் நமக்கு எப்போதுமே ஏற்படாது.
சம்பாதித்த பணத்தை செலவே செய்யாமல் அப்படியே பொத்தி பொத்தி பாதுகாப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது. சற்று யோசித்துப் பாருங்கள். சம்பாதித்த பணத்தை சந்தோஷமான முறையில் செலவு செய்யும்போது தான் நமக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். இறைக்கின்ற கிணறுதான் சுடக்குமே தவிர, அப்படியே பயன்படுத்தாமல் கிடக்கின்ற கிணறின் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படித்தான் பணமும். நம்பிக்கை உள்ளவர்கள் மேலே சொன்ன குறிப்புகளை பின்பற்றி வரும்போது வாழ்வில் நல்ல மாற்றங்கள் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.