நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டப்பட்டு அந்த கஷ்டத்தை சமாளித்து வெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றுதான் போராடிக் கொண்டு இருக்கிறோம். இந்த கஷ்டம் என்பது பணக்கஷ்டமாக இருக்கலாம், மன கஷ்டமாக இருக்கலாம், உடல் ரீதியான கஷ்டமாக இருக்கலாம், தொழில் ரீதியான கஷ்டமாக இருக்கலாம், வேலை ரீதியான கஷ்டமாக இருக்கலாம், படிப்பு ரீதியான கஷ்டமாக இருக்கலாம். எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டத்தை நீக்கி அதில் சிறந்து விளங்குவதற்குரிய வாய்ப்பை பெற வேண்டும் என்றால் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரை எந்த முறையில் வழிபாடு செய்ய சகல விதமான கஷ்டங்களும் நீங்கி வாழ்க்கையில் வெற்றிகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வறுமை நீக்க மகாலட்சுமி பூஜை
மகாலட்சுமி தாயாரின் வழிபாடு என்பது செல்வ செழிப்பை தரக்கூடிய வழிபாடு என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். மகாலட்சுமி தாயார் செல்வத்தை அருள்பவள் தான். அந்த செல்வங்களில் பலவிதமான செல்வங்கள் இருக்கின்றன. இந்த செல்வங்களில் நம்முடைய தேவைக்கு ஏற்ற செல்வம் எது என்பதை உணர்ந்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் பொழுது அந்த செல்வ நமக்கு கிடைக்கப்பெற்று நாம் சிறப்புடன் வாழ முடியும். அப்படிப்பட்ட ஒரு வழிப்பாட்டை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த வழிபாட்டை மகாலட்சுமி தாயாருக்குரிய வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி தொடர்ச்சியாக 48 நாட்கள் செய்ய வேண்டும். ஆண்களும் இந்த வழிபாட்டை செய்யலாம். பெண்கள் செய்வதாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வரக்கூடிய தீட்டு காலத்தில் இந்த வழிபாட்டை செய்யாமல் தீட்டு காலத்தை தவிர்த்து விட்டு மீதம் இருக்கக்கூடிய நாட்களில் 48 நாட்கள் செய்யலாம். வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம் அல்லது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்கு செய்யலாம் அல்லது மாலை நேரத்தில் 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளோ அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள இந்த வழிபாட்டை செய்யலாம்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு மகாலட்சுமி தாயாரின் திருவுருவப்படமோ சிலையோ இருந்தால் போதும். எந்த வெள்ளிக்கிழமை பூஜை ஆரம்பிக்க போகிறோமோ அதற்கு முதல் நாளில் மகாலட்சுமி தாயாரின் படத்தையோ சிலையையோ சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பூஜை ஆரம்பிக்கும் பொழுது முதலில் மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை நிறத்திலான ஏதாவது ஒரு பூவை பயன்படுத்தி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதேபோல் மகாலட்சுமி தாயார் கற்கண்டு, ஏலக்காய் கற்கண்டு போட்ட பால், பால் பாயாசம், பால் சாதம், வெள்ளை சர்க்கரை சேர்க்கப்பட்ட சர்க்கரை பொங்கல் போன்ற ஏதாவது ஒரு வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய உணவுப் பொருளை தயார் செய்து வைக்க வேண்டும். இயன்றவர்கள் வெள்ளை மொச்சை பயன்படுத்தி இனிப்பு வெள்ளை மொச்சையாக வைக்கலாம்.
இவ்வாறு வைத்துவிட்டு வாசனை மிகுந்த வெள்ளை நிற மலர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் இவற்றை தனியாகவோ அல்லது கலந்தோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து மகாலட்சுமி தாயாரின் அஷ்டோத்திரத்தை கூறி ஒவ்வொரு மலர்களாக மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த மகாலட்சுமி தாயாரின் அஷ்டோத்திரம் தங்களுக்கு தெரியவில்லை என்னும் பட்சத்தில் கைபேசியில் ஒலிக்கச் செய்த அர்ச்சனை செய்யலாம். வாசனையை மிகுந்த வெள்ளை மலர்கள் கிடைக்கவில்லை என்பவர்கள் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம்.
இந்த மகாலட்சுமி அஷ்டோத்திரம் என்பது அனைத்து வகையான செல்வங்களையும் பெறச் செய்யும் என்று மகா தேவரே பார்வதி தேவிக்கு உபதேசத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. நம்முடைய ராசி ரீதியாகவோ நட்சத்திர ரீதியாகவோ ஏதாவது பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தையும் நீக்க கூடிய வல்லமை படைத்ததாகவும் இந்த அஷ்டோத்திரம் திகழ்கிறது. அர்ச்சனை செய்த பிறகு கற்பூர தீப தூப ஆராத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் புதன்கிழமை கரிநாள் பரிகாரம்
தொடர்ச்சியாக 48 நாட்கள் யார் ஒருவர் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அஷ்டோத்திரம் ஒலிக்கிறதோ அவர்கள் வீட்டில் மகாலட்சுமி தாயார் எழுந்தருளி ஐஸ்வர்யத்தை வழங்குவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.