- Advertisement -

வறுமை நீங்க பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் வறுமையே இல்லாமல் செல்வ செழிப்புடன் நல்ல நிலைமையில் வாழ வேண்டும் எனில் லட்சுமி தாயாரின் அனுகிரகம் தேவை என்று நமக்குத் தெரியும் ஆனாலும் சுக்கிர பகவானின் அனுகிரகம் இல்லாது போனாலும் வறுமையும் துன்பங்களும் நம்மை தொடரும் என்பதையும் மறுக்க முடியாது.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் அவர்கள் எல்லா விதமான சீரும் சிறப்பு பெற்று நல்ல முறையில் வாழ்வார்கள். அதே அவர் ஜாதகத்தில் வலுவிழந்து விட்டால் அவர்கள் படக்கூடிய துன்பங்களை நம்மால் நினைத்தும் பார்க்க முடியாத அளவில் இருக்கும்.

- Advertisement -

அப்படிப்பட்ட நிலையில் சுக்கிரனை நாம் எந்த முறையில் வணங்க வேண்டும் என்பதையும் சுக்கிரனின் அருளாசியை பெற தாயாரை எப்படி வணங்க வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

சுக்கிரன் அருள் பெற செய்ய வேண்டியது

வாழ்க்கையில் செல்வ செழிப்பு மட்டுமல்லாது வேலை, திருமணம், செல்வம், ஆற்றல், அழகு, காதல் உள்ளிட்ட அனைவற்றிக்கும் காரணமாக விளங்க கூடியவர் இந்த சுக்கிர பகவான் தான். ஆகையால் அவருடைய அனுகிரகம் நமக்கு நிச்சயமாக தேவை. சுக்கிரனை வழிபட உகந்த நாளும் வெள்ளிக்கிழமை தான்.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தொடர்ந்து வழிபட்டு வரும் போது இந்த வறுமை நிலை துன்பம் அனைத்தும் நீங்கி வாழலாம் என்பது ஐதீகம். சுக்கிரனுக்கு மிகவும் உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் பெண்கள் விரதம் இருந்து மகாலட்சுமி தாயாரை வணங்க வேண்டும். வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயார் பூஜை விளக்கு பூஜை போன்றவற்றை செய்த வீட்டில் சுபிட்சம் அதிகரிக்கும்.

ஜாதகத்தில் சுக்கிர பகவான் பலமற்று இருக்கிறார் என தெரிந்தால் கண்டிப்பாக முறையில் மகாலட்சுமி தாயாரை தான் வணங்க வேண்டும். அப்படி வணங்கும் வேளையில் தாயாருக்கு பாயாசத்தை நெய்வேத்தியமாக வைத்து வணங்க வேண்டும் இதை தவறாமல் கடைப்பிடித்து வரும் போது பணவரவு நிச்சயம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

பொதுவாகவே வெள்ளிக்கிழமை அணைத்து தெய்வங்களுக்கும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அந்நாளில் பால், சர்க்கரை, அரிசி, இனிப்புகளை தானமாக கொடுக்கும் போது சுக்கிர பகவானின் அருளை பெறுவதுடன் மற்ற தெய்வங்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். அதுமட்டுமின்றி வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடை அணிந்து சுக்கிர பகவானின் மந்திரத்தை சொல்லி அவரை வழிபட்ட இன்னல்கள் நீங்கி இன்பமாக வாழலாம்.

அதே போல் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்யும்பொழுது அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சத்தில் போட்டு ஆறு டைமண்ட் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த ஆறு கற்கண்டு இவையெல்லாம் சுக்கிரனுக்குரிவை. நெய் தீபம் மகாலட்சுமி தாயாருக்கு உகந்தது. இவை இரண்டும் ஒரு சேர செய்யும் பொழுது நிச்சயம் பலன் அதிகம் உண்டு.

இதையும் படிக்கலாமே: கடனடைய ஆஞ்சநேயர் பரிகாரம்

வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானையும் சுக்கிரனுக்கு அதி தேவதையான மகாலட்சுமி தாயாரையும் இந்த முறையில் வணங்கி வரும் போது வறுமை என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கையில் ஒரு நாளும் துன்புறுத்தாமல் செல்வ செழிப்புடன் நீங்கள் வாழக்கூடிய யோகம் அமையும். இந்த பதிவில் உள்ள தகவலில் உங்கள் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இந்த வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

சற்று முன்