- Advertisement -

வறுமை நீங்க மந்திரம்

- Advertisement -

எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும், உழைத்த பணம் யாரோ ஒருவருக்கு சென்றடைந்து விடுவதை பார்க்கும் பொழுதே மனம் வெம்பும். நாம் உழைத்த பணம் நமக்கானதாக இருக்க, நம் வாழ்வில் பொருளாதாரம் சிறப்பாக இருக்க, தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைய செய்ய வேண்டிய வழிபாடு முறை என்ன? சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த சுவாரஸ்யமான தகவலைத் தான் இப்பதிவில் காண இருக்கிறோம்.

தொழில் சிறக்க, வியாபாரம் விருத்தியாக, உத்தியோகம் உயர்வடைய, வீட்டில் பொருளாதார சூழ்நிலை சிறப்பாக இருக்க லட்சுமிதேவி வழிபாடு செய்வது அவசியமாகும். மகாலட்சுமி கடைக்கண் பார்வை இருந்தால் போதும், கடைக்கோடியில் இருப்பவரும் உலகை ஆளலாம். ஜகத்தினை காக்கும் ஜெகன் மாதாவாக இருக்கும் மகாலட்சுமி தேவியை வெள்ளிக்கிழமையில் இங்கனம் வழிபாடு செய்து வாருங்கள்.

- Advertisement -

வெள்ளிக் கிழமையில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து சுத்தபத்தமாக வீட்டையெல்லாம் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தி சாயும் முன்னர் ஐந்தரை மணியில் இருந்து ஆறு மணிக்குள்ளாக இந்த வழிபாட்டினை செய்ய வேண்டும். மகாலட்சுமிக்கு மல்லிகை என்றால் மிகவும் விருப்பமான ஒரு பூவாகும். மல்லிகை மலரால் மாலை கோர்த்து படத்திற்கு போடுங்கள். தரையில் ஸ்வஸ்திக் சின்னத்தை பச்சரிசி மாவினால் வரைந்து, அதில் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை எழுதுங்கள்.

வறுமை நீங்க மந்திரம் :

ஓம் ஸ்ரீ அக்ஷயம்!!!

- Advertisement -

மாவினால் அக்ஷய மந்திரத்தை எழுதி விட்டு அதன் மீது
ஒரு தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை வைத்து பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அரிசியின் மீது நீங்கள் உழைத்து சம்பாதித்த ரூபாய் நோட்டுகளை வையுங்கள். அதன் மீது சில்லரை நாணயங்களையும் வைக்க வேண்டும். 1 ரூபாய், 5 நாணயங்களை அதிகம் வையுங்கள். பின்னர் மீதம் இருக்கும் இடத்தில் சிறுசிறு கிண்ணங்களில் துவரம் பருப்பு, கல் உப்பு, மஞ்சள் கிழங்கு, சர்க்கரை அல்லது கோதுமை ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வையுங்கள்.

பின்னர் தாம்பூலத்தின் இருபுறமும் குத்துவிளக்கு அல்லது அகல்விளக்கு வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி வெள்ளை பஞ்சு திரியினால் தீபம் ஏற்றி மனதார “ஓம் ஸ்ரீ அக்ஷயம்” என்னும் இந்த மந்திரத்தை 108 முறை தவறாது உச்சரித்து வர வேண்டும். பூஜையின் பொழுது கலசத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். பஞ்ச பாத்திரத்தில் அல்லது கலசத்தில் தண்ணீர் வைத்து அதில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை நொறுக்கி போடுங்கள். நான்கைந்து துளசி இலைகளை வையுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கேரளா கலத்தப்பம் ரெசிபி

மந்திர உச்சாடனம் செய்து முடித்த பின்பு தூப, தீப, ஆரத்தி காண்பித்து மகாலட்சுமியை மனதார வறுமை நீங்க பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய குடும்ப கஷ்டத்தை மொத்தமாக புலம்பி தள்ளாமல், “மகாலட்சுமி தாயே வறுமை நீங்கி, செல்வம் கொழிக்க அனுக்கிரகம் புரிவாயாக…” என்று எளிமையாக வேண்டிக் கொண்டு இனிமையான முகத்துடன் சந்தோஷமான மனநிலையுடன் பிரார்த்திக்க வேண்டும். பின்னர் அக்கம் பக்கம் இருக்கும் சிறு குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்களை தானம் செய்யுங்கள். கடையில் வாங்கி மற்றவர்களுக்கு கொடுத்தாலும் சரி அல்லது வீட்டிலேயே இனிப்பு பிரசாதங்கள் தயார் செய்து படைத்து, தானம் கொடுத்தாலும் சரி தான். இது போல தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மகாலட்சுமியை வழிபட்டு வருபவர்களுக்கு வறுமை இல்லாத வாழ்வும், துன்பமில்லாத இனிமையான வாழ்வும் அமையும் என்பது நம்பிக்கை.

சற்று முன்