வருமானம் பெருக, கண் திருஷ்டி அகல வியாபார ஸ்தலத்தில் செய்ய வேண்டிய சிறப்புப் குப்தா பரிகாரம்

kuberan
- Advertisement -

வியாபாரம் என்றாலே அதில் பலவித போட்டிகள் இருக்கும். ஒரு சிலர் மற்றவரின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். ஒருவர் மற்றொருவர் மீது பலவிதமான வதந்திகளை பரப்பி விடுவார்கள். தேவையற்ற பழிகளைக் அவர்கள் மீது செலுத்துவார்கள். மற்றவர் மீது இருக்கும் பொறாமையின் காரணமாக இப்படி எல்லாம் செய்து அவர்களின் வியாபாரத்தை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எப்படியாவது தான் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம், ஆனால் மற்றவரை அழித்து தான் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருத்தல் கூடாது. ஆனால் இப்படிப்பட்ட எண்ணங்கள் நம்மை சுற்றி இருப்பதனால் தான் கண் திருஷ்டியினால் வியாபாரத்தில் பல தடங்கல்கள் உண்டாகிறது. எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லாபம் கைக்கு வராமல் தட்டி போகிறது. எனவே இவ்வாறான கண் திருஷ்டிகளை நம்மிடம் இருந்து அகற்றுவது நமது வியாபாரத்திற்கு மிகவும் நன்மையாகும். அதற்கு செய்ய வேண்டிய ஒரு சிறப்பு பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

shop-owner

பணத்திற்கு உரிய கடவுளாக குபேரனை பார்க்கிறோம். மற்ற கடவுள்களின் செல்வதற்கெல்லாம் பாதுகாப்பாக இருப்பவர் குபேரர் ஆவார். இவர் அனைத்து விதமான சிலைகளிலும், படங்களிலும் தனது சிரித்த முகத்துடனே இருக்கிறார். இவர் விதியை பார்த்து சிரிப்பதே இதன் அர்த்தமாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

பலரது வீடுகளிலும் குபேர கடவுளை வைத்து வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை குபேரர்க்கான பூஜை செய்யப்படுகிறது. இவ்வாறு அவரைத் தொடர்ந்து வழிபடுவதன் மூலம் நமது செல்வ வளத்தை பெருக்க முடியும் என்பது அனைவரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

kubera

அதேபோல் வியாபார ஸ்தலத்தில் கண் திருஷ்டிக்காக குபேர பரிகாரம் செய்வதன் மூலம் அந்த கண் திருஷ்டியை அடியுடன் அகற்ற முடியும். வியாபாரத்தில் வருமானத்தையும் பெருக்க முடியும். அதற்காக சிரித்த முகத்துடன் இருக்கும் குபேர மனதில் வாங்கிக் கொள்ள வேண்டும் அந்த குபேர மணியன் இருபுறங்களிலும் குபேரரின் முகம் பதிந்திருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மணி உங்கள் வீடுகளின் அருகில் கிடைக்கவில்லை என்றால் ஆன்லைன் மூலம் பதிவிட்டும் வாங்கிக் கொள்ளலாம். பிறகு இதனை கருப்பு அல்லாத வேறு எந்த நிறத்தில் இருக்கும் கயிறுகளை பயன்படுத்தியும் கட்டிக்கொள்ளலாம். அதற்கு முதலில் மூன்று மீட்டர் கயிறை மூன்று துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

kuberan

பிறகு மூன்று பித்தளை சாவிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு கயிறிலும் முதலில் இந்த குபேர மணியை கோர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த மணிக்கு அடுத்து சாவியைக் கோர்த்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று கயிறிலும் இதே முறையில் கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் இவற்றிற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும்.

key

பின்னர் இவற்றை உங்கள் வியாபார ஸ்தலத்தின் வாசலில் இடது புறம் ஒன்று ,வலது புறமொன்று மற்றும் நடுவில் ஒன்றாக தொங்கவிட வேண்டும். இவை காற்றில் அசைவது போல் தொங்கவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் எதிரிகளின் தீய பார்வை உங்களை பாதிக்காமல் இவை தடுத்துவிடும். எந்த வித எதிரிகளாக இருந்தாலும் அவர்களின் தீய எண்ணம் வாசலைத் தாண்டி உங்கள் அருகில் வராமல் இருக்கும்.

- Advertisement -