வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக நிறைய பேர் வருவார்கள். வறுமை, கஷ்டம், நோய், பகை, கண் திருஷ்டி, சண்டை சச்சரவு வாக்குவாதம், என்று இவைகளை எல்லாம் நாம் கூப்பிட்டே இருக்க மாட்டோம். ஆனால் இவைகள் ஒட்டுமொத்தமாக வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொண்டு, ஒரு ஆட்டத்தை போடும். ஆனால், மகாலட்சுமியை வேண்டி விரும்பி அழைப்போம். ஆனால் அவர்கள் மட்டும் நம் வீட்டிற்குள் வரவே மாட்டார்கள்.
அப்படியே வந்தாலும் நிலையாக தங்கி ஒரு நன்மையை செய்ய மாட்டார்கள். லட்சுமி வருவதும் போவதுமாகவே இருக்கிறார்கள். இந்த மகாலட்சுமியை நிரந்தரமாக நம் வீட்டிற்குள் கட்டிப் போட ஏதேனும் வழி இருக்கா. நிச்சயம் இருக்குங்க. வீட்டில் அழியா விருந்தாளிகளாக வந்து அமர்ந்திருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் வெளியேற்றிவிட்டு, இந்த மகாலட்சுமியை கொண்டுவந்து வீட்டில் நிரந்தரமாக அமர வைக்க, நிலை வாசலில் இந்த ஒரு இலையை மட்டும் கட்டி தொங்க விடுங்கள் போதும். நிச்சயமாக நல்லது நடக்கும். பணக்கஷ்டம் தீரும். நீங்களும் செல்வந்தர்களாக மாறுவீர்கள்.
அப்படி என்ன ஒரு அதிசய பொருள். தேவலோகத்தில் இருந்து இதை கொண்டு வர வேண்டுமா? அப்படியெல்லாம் கிடையாது. உங்கள் வீட்டு வாசலில் இந்த செடி இருக்கும். அப்படி இல்லையென்றால் பக்கத்து வீட்டு வாசலில் இந்த செடி இருக்கும். அது என்ன இலை. மருதாணி இலை தான். நாம எல்லோருக்குமே தெரியும். மருதாணி இலையில் மகாலட்சுமி வாசம் செய்கிறார்கள் என்று. அந்த மருதாணி இலையை எப்படி நிலை வாசலில் கட்டி தொங்க விட்டால் மகாலட்சுமி வீட்டில் இருந்து வெளியே போக மாட்டாங்க தெரியுமா உங்களுக்கு.
ஒரு கொத்து மருதாணி இலைகளை எடுத்து ஒரு நூலில் கட்டிக் கொள்ளுங்கள். வேப்பங்கொத்து கட்டுவோம் அல்லவா. அதே போல மருதாணி இலைகளையும் லேசாக காம்புகளோடு உடைத்து நூல் போட்டு கட்டி கொத்தாக தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இந்த மருதாணி கொத்தை வீட்டின் பெரியவர்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் இருக்கும் அனைவரது தலையையும் இந்த மருதாணி இலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளவும். நிலை வாசலில் இந்த மருதாணி இலையை மேல்பக்கத்திலிருந்து கீழ்ப்பக்கம் பார்த்தபடி கட்டி தொங்கவிட வேண்டும். வேப்ப இலையை எப்படி கட்டி தொங்க விடுவோம் அதே மெத்தட் தான் மருதாணி இலைக்கு பயன்படுத்தப் போறீங்க.
தயார் செய்த இந்த மருதாணி இலையை நிலை வாசலில் நடுப்பகுதியிலோ அல்லது வலது பக்கத்தில், இடது பக்கத்திலோ ஏதோ ஒரு பக்கத்தில் கட்டி தொங்க விட்டால்போதும் உங்கள் வீட்டிற்குள் இருக்கும் மகாலட்சுமி அணாவசியமாக நிலை வாசலை தாண்டி வெளியே போக மாட்டீங்க. வீட்டிற்குள் வருமை நுழையவே நுழையாது.
இதையும் படிக்கலாமே: சமையலறை கல் உப்பு பரிகாரம்
தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது ஒரு ஊதுவத்தியை மட்டும் அந்த நிலைவாசலுக்கு காண்பிக்கும் போது, இந்த மருதாணி இலைக்கும் காமிக்க வேண்டும். இதுதான் பரிகாரம். மாதத்தில் ஒரு நாள் இந்த இலை காய்ந்து சருகாகி கீழே கொட்டிவிடும். மீண்டும் இதை புதுப்பித்துக் கொள்ளுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். நிலை வாசலில் மேலே சொன்ன முறைப்படி மருதாணியிலேயே வைத்து பாருங்கள். மகாலட்சுமி மறுப்பேச்சு பேசாமல் உங்கள் வீட்டில் தங்கி விடுவாள்.