தினமும் காலையில் நிலை வாசல் கதவைத் திறக்கும் போது, இந்த ஒரு வார்த்தையை சொன்னால் போதும். மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் சந்தோஷமாக தினம்தினம் குடியேறுவாள்.

door-vasal-lakshmi
- Advertisement -

மகாலட்சுமி என்பவள் ஒரே இடத்தில் நிலையாக எப்போதும் தங்குபவள் கிடையாது. அவள் இஷ்டப்பட்ட இடத்தில் தங்கி கொள்வாள். இஷ்டப் படாத இடத்தில் தங்க மாட்டாள். அதாவது பணம் என்பது ஒரு இடத்தில் தங்கக் கூடிய விஷயமல்ல. அது யார் கையில் எப்போது எப்படி செல்லும் என்பதே நமக்குத் தெரியாது. இன்று நம் கையில் இருக்கக்கூடிய பணம், நாளை இன்னொருவருக்கு சொந்தமாகிவிடும். அந்தப் பணத்தைத்தானே மகாலட்சுமியின் ஸ்வரூபமாக நாம் பார்க்கின்றோம். இன்று நம் வீட்டில் இருக்கக்கூடிய மகாலட்சுமி நாளை வேறு வீட்டிற்கு சென்று விடுவாள். தினம்தோறும் மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் வரவேற்க வேண்டும் என்றால் நிலை வாசல் கதவை திறக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான ஒரு தகவலை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalakshmi1

முதலில் மகாலட்சுமி எங்கு வாசம் செய்வாள் என்று நாம் தெரிந்து கொள்ளுங்கள். அமைதியான இடத்தில், இனிமையான சொற்கள் பேசக்கூடிய இடத்தில், சந்தோசம் இருக்கும் இடத்தில், நல்ல வாசம் வீச கூறிய இடத்தில், சுத்தமாக இருக்கக்கூடிய இடத்தில், நிச்சயமாக மகாலட்சுமியின் வாசம் இருக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே கிடையாது.

- Advertisement -

தினமும் காலையில் எழும் போது இனிமையான சொற்களை பேச வேண்டும். சண்டை சச்சரவோடு பொழுது விடிய கூடாது. சண்டை போட்டுக்கொண்டே வந்து நிலை வாசல் கதவை திறக்கக்கூடாது. நிறைய பேர் வீடுகளில் கண் விழிக்கும் போதே கச்சேரி தொடங்கிவிடும். மனைவியோ கணவனோ ஏதாவது ஒரு பிரச்சினையை பற்றி பாட்டு பாடிக்கொண்டே, அதாவது புலம்பிக்கொண்டே வந்து நிலை வாசல் கதவு திறப்பார்கள் இப்படி செய்யவே கூடாது.

சந்தோஷமான மனநிலையில் எழுந்து குளியலறைக்கு சென்று காலைக் கடன்களை முடித்துவிட்டு, முகம் கை கால்களை சுத்தமாக அலம்பி கொண்டு கலைந்த தலைமுடியை திருத்திக் கொண்டு, நெற்றியில் பொட்டு இட்டுக்கொண்டு கூடுமானவரை வீட்டில் இருக்கும் பெண்கள்தான் நிலைவாசல் கதவை திறக்க வேண்டும்.

- Advertisement -

நிலைவாசல் கதவை திறக்கும்போது ‘வர லக்ஷ்மி தேவியே வருக வருக! மகாலட்சுமி தேவியை வீட்டிற்குள் மகிழ்ச்சியோடு வருகை தர வேண்டும்’ என்று மகாலட்சுமியின் பெயரை உச்சரித்து அதன் பின்பு வாசல் கதவை திறக்க வேண்டும். பெண்கள் வாசல் கதவைத் திறக்கும் போது கையில் துடைப்பம் குப்பைக் கூடை இப்படிப்பட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு முதலில் வாசல் கதவை திறக்க கூடாது.

cash

உங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமி வாசம் செய்வதற்காக நுழைய காத்துக் கொண்டிருப்பாள். அவளை நீங்கள் வரவேற்கும் போது கையில் குப்பையுடனும் துடைப்பத்துடன் வரவேற்றால், அவள் சந்தோஷமாக வீட்டிற்குள் நுழைய மாட்டாள். மேலே சொன்ன மந்திரத்தை உச்சரித்து விட்டு கதவை திறந்து வைத்துவிட்டு அதன் பின்பு உங்களுடைய வேலையை தொடங்கலாம். மேலே சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் சின்ன சின்ன விஷயங்கள் தான். கூடுமானவரை இந்த விஷயங்களை கடைபிடித்தாலே வீட்டில் நிம்மதி இருக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். வீண் விரையம் குறையும். மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் தினம்தினம் சந்தோஷமாக வருகை தருவார்கள். பணவரவு அதிகரிக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -