காலையில் எழுந்து வீட்டு வாசல் கதவை திறக்கும் போது கட்டாயமாக இந்த 2 பொருட்களை நீங்கள் பார்க்கவே கூடாது.

nila-vasal1

காலையில் எழுந்து வீட்டில் இருக்கும் பெண்கள், வீட்டு வாசலின் கதவை திறக்கும் போது கட்டாயமாக இந்த இரண்டு பொருட்களும் உங்களுடைய கண்களில் படக்கூடாது. அது எந்த இரண்டு பொருட்கள் என்பதைப் பற்றித் தான் இந்தப்பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வீடுகளில் நாம் செய்யக்கூடிய இந்த சின்ன சின்ன தவறுகள் கூட, நமக்கு வாழ்க்கையில் பெரிய கஷ்டங்களை கொண்டு வந்து சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. மகாலட்சுமி ஆகப்பட்டவள், நம் வீட்டிற்குள் நுழைய காத்துக் கொண்டிருந்தாலும், அதை தடுத்து நிறுத்தும் சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

broom-thudaippam1

நிறைய பேர் வீடுகளில் வாசல் கூட்டும் துடைப்பதையும் செருப்பையும் வீட்டு வாசலிலேயே போட்டு வைப்பார்கள். இது தவறான ஒரு விஷயம். நம் வீட்டிற்குள் நுழைபவர்களுடைய மனிதர்களின் கண்களுக்குக் கூட இந்த இரண்டு பொருட்களும் தென்படும் படி இருக்க கூடாது. காரணம் இந்த பொருட்கள் வீட்டு வாசல் படியில், நுழையும்போதே வெளியில் தெரியும்படி, இப்படி இருந்தால் வீட்டிற்கு வருபவர்களை அவமானப்படுத்தியதற்கு சமமாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது வீட்டில் வருபவர்களை, வராமல் தடுத்து நிறுத்தக்கூடிய சாதனமாக இந்த இரண்டு பொருட்களும் நிலை வாசலில் இருப்பதாகத் தான் அர்த்தம்.

இதேபோல்தான் காலை நேரத்தில் வீட்டு வாசலைத் திறக்கும் போது, நம் வீட்டுக்குள் நுழைவதற்கு மகாலட்சுமி தேவி காத்திருப்பார்களாம். வீட்டு வாசல் கதவை நான் திறக்கும் போதே அவர்கள் உள்ளே நுழைய பார்ப்பார்கள். அந்த சமயம் வாசலில் போட்டு வைத்திருக்கும் செருப்பையும் துடைப்பத்தையும் பார்த்துவிட்டு ‘இவர்கள் வீட்டுக்குள் நாம் நுழைவதில், இவர்களுக்கு விருப்பம் இல்லையோ என்று நினைத்துக் கொண்டு வாசல் படியில் இருந்து அப்படியே திரும்பி வெளியே சென்று விடுவார்கள்’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.

cheppal

கதவைத் திறக்கும்போது முதன்முதலாக வீட்டில் இருப்பவர்கள் செருப்பையும் துடைப்பத்தையும் பார்ப்பது என்பது அவ்வளவு நல்ல சகுனமாக சொல்லப்படவில்லை. நாள் முழுவதும் அந்த செருப்பு உங்கள் நிலை வாசல் படியில் இருந்தால் கூட, இரவு நேரத்தில் மட்டுமாவது அதை எடுத்து ஒரு ஓரமாக வைத்து விடுங்கள்.

பெண்கள் வாசல் கதவை திறக்கும் போது வாசலை கூட்டுவதற்கு கையில் துடைப்பத்துடன் குப்பை கூடையுடன், நிலைவாசல் கதவை திறக்கக் கூடாது. நிலை வாசல் கதவை திறந்து வைத்துவிட்டு அதன் பின்பு சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை கொண்டு போவது மிகவும் நல்லது. வாசல் கதவை திறக்கும்போது மகாலட்சுமியை வீட்டுக்குள் வரவேற்கும் வகையில், மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு, மகாலட்சுமியின் பெயரை மனதில் உச்சரித்துக் கொண்டே கதவை திறப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும்.

உங்களுடைய வீட்டில் இந்த இரண்டு பொருட்களை வைப்பதற்கு வேறு இடமே இல்லை. வாசலில்தான் வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் கூட அதை நிலை வாசல் படிக்கு நேராக வைக்காமல், எல்லோர் கண்களுக்குத் தெரியும் படி வைக்காமல் கொஞ்சம் மறைத்து வைப்பது வீட்டிற்கு சுபிட்சத்தை தேடித்தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.