வீட்டின் முன் வாசலில் எந்த பொருட்கள் எல்லாம் இருப்பது உண்மையில் திருஷ்டி தோஷத்தை போக்கும்?

thirusti-ganapathi

வீட்டின் வாசலில் திருஷ்டிக்காக பல பொருட்களை நாம் கட்டி வைப்பது உண்டு. அப்போது தான் வீட்டை தாண்டி உள்ளே எந்த ஒரு துஷ்ட சக்திகளும், தீய சக்திகளும், எதிர்மறை ஆற்றல்களும் வராமல் இருக்கும் என்பது நம்முடைய நம்பிக்கை. அந்த வகையில் எல்லா பொருட்களுக்கும் திருஷ்டியை போக்கும் சக்திகள் இல்லை. குறிப்பிட்ட சில பொருட்களுக்கு திருஷ்டியை போக்கும் சக்தி உண்டு! அவ்வகையான பொருட்கள் என்ன? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

elumichai lemon

திருஷ்டியை நீக்கும் மாபெரும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு. கண் திருஷ்டிக்கு எலுமிச்சையை மிஞ்சிய பொருள் எதுவுமே இல்லை. எலுமிச்சை அனைத்தையும் ஈர்க்கும். அதனால் தான் அதனை ஆன்மீக காரியங்களுக்கும், தாந்திரீக காரியங்களுக்கும் கூட பயன்படுத்துகிறார்கள். நல்ல சக்திகளையும், தீய சக்திகளையும் கிரகிக்கும் ஆற்றல் எலுமிச்சை பழத்திற்கு உண்டு. ஆகவே எலுமிச்சையை வாசலில் கட்டி தொங்க விட்டால் போதும்! எந்த ஒரு கண் திருஷ்டிகளும் உங்களை அணுகாது. இதனுடன் திருஷ்டி போக்க கரித்துண்டு, பச்சை மிளகாய்கள், இரும்புத்துண்டு ஆகியவற்றை சேர்த்து கட்டுவது வழக்கம்.

திருஷ்டியை போக்கும் சிறந்த பொருள் ‘படிகாரம்’! படிகார கல்லை வீட்டின் வாசலில் கட்டுவது நல்ல பலன் தரும். படிகார கல் தண்ணீரை சுத்தம் செய்வது மட்டுமல்ல! நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளையும் அழித்து சுத்தம் செய்துவிடும். அத்தகைய பேராற்றல் கொண்ட படிகாரத்தை கருப்பு நூல் கொண்டு கட்டி தலைவாசலில் தொங்க விட்டு விடலாம். குதிரை லாடம் செல்வத்தை இருக்கும் என்பது நியதி. குதிரையின் லாடம் பலரும் வீட்டு வாசலில் மாட்டி வைப்பது உண்டு. இவை திருஷ்டியை போக்கி, நல்ல ஆற்றல்களை பெருகச் செய்து, செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும். அது போல குதிரையின் படத்தையும் வாங்கி மாட்டி வைக்கலாம்.

elephant-eye

யானை உடைய கண்கள் திருஷ்டியை போக்கும் என்பார்கள். யானை சாட்சாத் பிள்ளையாரின் அம்சமாக பார்க்கப்படுவதால் பிள்ளையாரே நம் வீட்டை காவல் காப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. எனவே உங்களுடைய வீட்டின் முன்வாசலில் யானையுடைய கண்கள் இருக்கும் படத்தை மாட்டி வைத்தால் திருஷ்டிகள் நீங்கும். மேலும் யானையின் உருவத்தை சிலைகளாக வாங்கியும் வீட்டு வாசல் முன் வைக்கலாம். இவைகள் அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

- Advertisement -

திரி சூலம், வேல், ஸ்வஸ்திக், ஓம் என்னும் ஆன்மீக சின்னங்கள் வீட்டின் வாசலில் பதிப்பதும், வரைந்து வைத்திருப்பதும் அல்லது கதவில் அப்படியான உருவங்கள் அமைத்து இருப்பதும் அதிர்ஷ்டம் தரும். எந்த ஒரு துஷ்ட சக்திகளையும் வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும் சின்னங்களுக்கு அவ்வாற்றல் அதிகமாகவே இருக்கும்.

thirisoolam

கட்டாயம் செல்வத்தை கொடுக்கக்கூடிய குபேரனுடைய படம், மகாலட்சுமியின் படம் மற்ற தெய்வீக படங்கள் எதுவும் பிரதான வாசலில் வைக்கத் தேவையில்லை. இவைகள் நம் வீட்டில் இருக்கும் செல்வத்தை வெளியில் அனுப்புவதற்கு சமமாகும். வீட்டின் கதவை தாண்டி உள்ளே வந்த பிறகு இவைகள் அமைந்து இருக்கலாம். ஆனால் வெளியில் செல்வது போல அமையக்கூடாது. இப்படி அமைப்பது செல்வ வளத்தை குறைய செய்யும்.

coconut

சிகப்பு துணியில் தேங்காய் வைத்து அதில் சில சில்லரை காசுகளை போட்டு முடிந்து கட்டி வைப்பது பில்லி, சூனியம், ஏவல் போன்ற கெட்ட விஷயங்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். இவர்கள் உண்மையிலேயே நம்மையும் நம் வீட்டையும் திருஷ்டி தோஷங்களிலிருந்து பாதுகாத்து தரும் என்பதில் சந்தேகமில்லை. இவற்றை பல காலம் வரை அப்படியே வைத்திருப்பது முறையானது அல்ல! 48 நாட்களுக்கு மேல் எந்த ஒரு திருஷ்டி பரிகாரங்களும் பலன் அளிப்பது இல்லை. ஆகவே அவற்றை அவ்வப்போது நீக்கி புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.