வீட்டு வாசலில் வைக்கக் கூடாத இந்த 3 பொருட்களை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தலைவாசலில் இதெல்லாம் செஞ்சா காசு, பணம் தாங்கவே தாங்காது!

door-kula-dheivam-lakshmi
- Advertisement -

நம் வீட்டு வாசல் என்பது மிகவும் முக்கியமான ஒரு இடமாக கருதப்படுகிறது. வாஸ்து ரீதியாக தலைவாசல் அமைப்பவர்கள் அதற்கென தனியாக பூஜைகள் செய்வது வழக்கம். தலைவாசல் பூஜை செய்யாமல் வாசலை அமைக்க மாட்டார்கள். அத்தகைய தலை வாசலில் இந்த தவறை நாம் செய்யும் பொழுது, இந்த 3 பொருட்களை நாம் தெரியாமல், இப்படி வைக்கும் பொழுது குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் எழுகிறது. அப்படியான பொருட்களை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

முதலில் தலைவாசலில் எப்பொழுதும் குப்பை, கூளங்கள், மண் போன்றவை இல்லாமல் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். தலைவாசலில் குலதெய்வம் குடியிருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. நம் குலம் காக்கும் குலதெய்வம் வாசம் நிறைந்துள்ள இந்த தலைவாசலில் எப்பொழுதும் மஞ்சள், குங்குமம் வைத்து இருக்க வேண்டும். வாசலில் மஞ்சள், குங்குமம் வைப்பது குலதெய்வத்திற்கு மரியாதை செலுத்தவும், வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் மகாலட்சுமியை வரவேற்கும் பொருட்டும் மேற்கொள்ளப்படுகிறது.

- Advertisement -

வாசலில் மஞ்சள், குங்குமம் வைக்காவிட்டாலும் நீங்கள் ஒரு ஈரத் துணியை கொண்டு எப்பொழுதும் தலைவாசலை வாரம் ஒருமுறையேனும் லேசாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒட்டடைகள் நுழைந்தால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் வரும் என்கிற ஒரு நம்பிக்கையும் உண்டு. எனவே தலைவாசலில் ஒட்டடை போன்றவற்றை ஒருபோதும் சேர அனுமதிக்காதீர்கள். அவ்வப்போது சுத்தம் செய்து துடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தலைவாசலில் தீபம் ஏற்றுபவர்கள் வெறும் தரையில் வைத்து தீபத்தை ஏற்றக்கூடாது. ஒரு சிறு ஸ்டான்ட் ஆவது வைத்து ஏற்ற வேண்டும். தலை வாசலுக்கு நேர் எதிரே இந்த 3 பொருட்கள் கட்டாயம் வைக்க கூடாது. முதலாவதாக நாம் அணியும் காலணிகள் எப்பொழுதும் தலை வாசலில் விட்டு விட்டு வருவது வழக்கமாக பல வீடுகளில் இன்றும் இருக்கும். வாசலுக்கு பக்கத்தில் ஓரமாக காலணிகளை அழகாக அடுக்கி வைப்பது முறையாகும். அதை விடுத்து அவசரத்தில் காலை உதறி செருப்பை விடுவது எப்பொழுதும் தரித்திரத்தை உண்டு பண்ணும் செயலாகும். வாசலுக்கு நேரே செருப்பை விடுவது கூடாது.

- Advertisement -

அது போல தலைவாசலுக்கு நேரே குப்பைத் தொட்டியை வைக்கவே கூடாது. குப்பைத்தொட்டி வாசலில் வைத்தால் வர வேண்டிய மகாலட்சுமி அப்படியே வந்த வழியே திரும்பி சென்று விடுவாள். இதனால் உங்களுடைய இல்லத்தில் பண கஷ்டம், வறுமை போன்றவை ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உண்டு. எனவே வாசலில் குப்பைத் தொட்டியை வைப்பவர்கள் கண்டிப்பாக அதை வேறு ஒரு இடத்திற்கு மாற்றுவது மிகவும் நல்லது. அது போல வாசலில் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டியில் இரவு நேரத்தில் குப்பையை அள்ளிக் கொட்ட கூடாது. காலையில் எழுந்து குப்பையில் போடுவது முறையாகும். இல்லையென்றால் வீட்டில் இருக்கும் மஹாலக்ஷ்மி வெளியில் சென்று விடுவார் என்று சொல்லப்படுவது உண்டு.

அதே போல தலைவாசலில் துடைப்பத்தையும் வைக்கக்கூடாது. துடைப்பம் தலைவாசலில் இருந்தால் அதிகாலையில் வரும் தேவர்கள், பித்ருக்கள் போன்றவர்கள் திரும்பி சென்று விடுவார்கள். எனவே துடைப்பத்தை மறைவாக வைக்க வேண்டுமே தவிர, தலைவாசலில் கண்டிப்பாக தெரிந்தும், தெரியாமலும் வைத்துவிடக் கூடாது. எனவே மகாலட்சுமியின் வரவை தடை செய்யக்கூடிய இந்த 3 பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து, தலை வாசலில் இருந்து சற்று தள்ளி இருக்குமாறு அமைத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -