பிள்ளைகள் நன்றாக படிக்க வசந்த பஞ்சமி வழிபாடு

vasantha panjami
- Advertisement -

நாளைய தினத்தை ஒரு அற்புதமான நாள் என்றே சொல்லலாம். பஞ்சமி திதி வாராகி அன்னையின் பரிபூரண அருளை பெற்று தரக் கூடியது. அத்துடன் இணைந்து நாளைய திதியை வசந்த பஞ்சமி என்றும் அழைப்பார்கள். இந்த திதியானது சரஸ்வதி தாயாருக்கு மிகவும் உகந்தது. சரஸ்வதி தேவியர் என்றாலே அவர் படிப்பிற்கு அதிபதியான தெய்வம்.

ஒரே நாளில் நம்முடைய குழந்தைகள் படிப்பிலும், ஞானத்திலும் சிறந்து விளங்கி நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேற இது போன்றதொரு அற்புதமான நாள் கிடைப்பது அரிது. ஆகையால் நாளைய தினத்தை தவற விடாமல் குழந்தைகள் நன்றாக படித்து முன்னேற சில விஷயங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குழந்தைகள் நன்றாக படிக்க வசந்த பஞ்சமி வழிபாடு

முதலில் நாளைய தினத்தில் குழந்தைகளை காலையில்  பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து விட சொல்லுங்கள். அவர்கள் குளித்து முடித்து வருவதற்குள்ளாக நீங்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு பிள்ளைகள் குளித்தவுடன் நேராக வந்து இந்த தீப தரிசனத்தை பார்க்க சொல்லுங்கள். இது அவர்களுடைய கல்வி ஞானத்தை அதிகரிக்க கூடிய ஒரு தாந்த்ரீக வழியாக பார்க்கப்படுகிறது.

அடுத்து நாளைய தினத்தில் சரஸ்வதி தாயார் புகைப்படம் வீட்டில் இருந்தால் அவருக்கு வெள்ளை நிறத்திலான பூக்களை சூடி அலங்காரம் செய்து விடுங்கள். அதே போல் வெள்ளை நிறத்திலான நெய்வேத்தியங்கள், பால் சாதம், பாயாசம் போன்றவற்றை செய்து தாயாருக்கு படைத்து வணங்குங்கள். அப்படி வணங்கும் வேளையில் உங்கள் குழந்தைகளின் நோட்டு புத்தகங்களை பூஜையறையில் வைத்து அதற்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து ஓம் சரஸ்வதியை நமஹ என்ற இந்த நாமத்தை சொல்லுங்கள். உங்கள் குழந்தைகளையும் சொல்ல சொல்லுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து நோட்டு புத்தகங்களுக்கு மறுபடியும் தீபாரதனை காட்டி எடுத்து பயன்படுத்துங்கள். இந்த வழிபாட்டை காலை 7.30 மணி வரை செய்யுங்கள் அல்லது 9.30 மணி முதல் 11:30 மணி வரை செய்யுங்கள். இதை செய்ய முடியாதவர்கள் மாலை 5 மணிக்கு மேல் 6:30 மணிக்குள்ளாக செய்து விடுங்கள். அதற்கு மேல் பஞ்சமி திதி முடிந்து விடுகிறது. இந்த வழிபாடு செய்து முடித்த பிறகு உங்கள் குழந்தைகளை கட்டாயமாக சிறிது நேரம் அமர்ந்து படிக்க சொல்லுங்கள். இது மிகவும் முக்கியம்

இன்றைய நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு ஏதேனும் ஏழை குழந்தைகளுக்கு படிக்க தேவையான பொருட்களை வாங்கி கொடுங்கள். அதே போல் படிக்கும் குழந்தைகளுக்கு நெய்யில் செய்த இனிப்பை தானமாக வழங்கலாம். இந்த வழிபாடும் தானமும் நிச்சயம் உங்களின் குழந்தைகளின் கல்வி மேம்பட உறுதுணையாக இருக்கும்.

- Advertisement -

இதே நாளில் நம்முடைய செல்வ வளத்தை மேம்படுத்திக் கொள்ளவும் சில தாந்த்ரீகங்களை பின்பற்றலாம். அதற்கு நாளை மஞ்சள் நிறத்திலான ஆடையை அணிவது நல்லது. ஒரு வேளை நீங்கள் வேறு நிறத்தில் ஆடை அணிந்தாலும் அதில் சிறிது மஞ்சள் குழைத்து பூசிக் கொள்ளுங்கள். அதே போல் நாளைய தினம் பூஜைக்கு வெள்ளை நிற பூக்களை பயன்படுத்துங்கள். நாளைய தினத்தில் உங்கள் பிள்ளைகளின் படிக்கும் புத்தகத்திலோ நோட்டிலோ மஞ்சள் பொட்டை வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: மாசி மாதம் தாலி சரடு மாற்றும் முறை

நாளைய தினத்தில் இதையெல்லாம் செய்யும் போது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துடன் உங்கள் வாழ்க்கையின் செல்வ வளமும் அதிகரிக்கும். இந்த பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் இதை நம்பிக்கை உடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -