உங்களுக்கு முக வசீகரம் ஏற்பட, காரிய வெற்றி உண்டாக இம்மந்திரம் துதியுங்கள்

Sivan-2

எல்லா மனிதர்களின் முகங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. தினமும் நாம் ஆயிரக்கணக்கான மனித முகங்களை காண்கிறோம் ஆனால் ஒரு சிலரின் முகம் மட்டும் நமது நினைவில் இருப்பதோடு, அந்த முகம் கொண்ட நபர் மீது நம்மை அறியாமல் ஒரு ஈர்ப்பு வருகிறது. இத்தகைய ஈர்ப்பு நமக்கு ஏற்படுவதற்கு அந்த நபரின் முக வசீகரம் காரணம் ஆகும். இத்தகைய வசீகரத்தை நமக்கு தரும் “சிவ மந்திரம்” இதோ.

sivan

சிவ மந்திரம்

கிலி நமசிவய

சிவனின் அருளை பெற்று தரும் சக்திமிக்க சித்தர்களால் இயற்றப்பட்ட மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் அதிகாலையில் குளித்து முடித்ததும், கிழக்கு திசை பார்த்தவாறு 108 முறை உச்சரிப்பது சிறந்த நன்மைகளை தரும். 1,00,000 எண்ணிக்கை வரை இந்த மந்திரத்தை உரு ஜெபிக்க மந்திர சித்தி ஏற்பட்டு உங்களுக்கு பிறரை வசீகரிக்கும் சக்தி உண்டாகும். இதனால் நீங்கள் செல்லும் இடங்களில் உங்களுக்கு வேண்டிய காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சிவனின் அருட்கடாச்சம் உங்களுக்கு இருக்கும்.

sivan lingam

மற்ற மதங்கள் இறைவனுக்கு பயப்பட வேண்டும் என்கிற பய உணர்வை மட்டுமே தனது மக்களுக்கு தருகின்றன. ஆனால் மனிதனும் இறைவனின் ஆற்றலை பெறலாம் என்கிற உண்மையை கண்டறிந்தவர்கள் தமிழ் சித்தர்கள். இந்த ஆன்மீக பூமியான தமிழகத்தில் வாழும் சிவனை வழிபடும் அனைத்து மக்களும் வாழ்வில் மேன்மை பெற பல அற்புத மந்திரங்களை சித்தர் பெருமக்கள் வெளிப்படுத்தினர். மேற்கூறிய மந்திரமும் அத்தகைய அற்புதமான மந்திரம் ஆகும். அதை திட சித்ததோடு துதிப்பதால் நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
அரசு வேலை கிடைக்க மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaseegara mantram in Tamil. It is also called as Shiva mantra in Tamil or Siva sthuthi in Tamil or Kariya vetri manthiram in Tamil or Siva manthirangal in Tamil.