வேஸ்லின் பயனுள்ள வீட்டு குறிப்பு

vasaline
- Advertisement -

நிறைய பேர் வீட்டில் இந்த வேஸ்லின் டப்பா சும்மாவே இருக்கும். பனிக்காலத்தில் உதடு மற்றும் சருமத்தில் இருக்கும் வெடிப்பை சரி செய்ய இந்த வேஸ்லினை வாங்குவோம். ஆனால் முழுமையாக பயன்படுத்தி இருக்க மாட்டோம். ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல் ஒரு ஓரத்தில் இது இருக்கும். சில நாட்கள் கழித்து இது தேவையில்லை என்று சில பேர் தூக்கி குப்பையில் போட்டுடுவாங்க. ஆனா அப்படி செய்யாதீங்க. இந்த வேஸ்லின் டப்பா பின்னாடி நிறைய பயனுள்ள வீட்டு குறிப்பு இருக்கு. அது என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவோமா.

குறிப்பு 1:
வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் கத்திரிக்கோல்களை அப்படியே வைத்திருப்போம். ஆனால் அது ஒரு சில நாட்களில் பயன்படுத்தாமல் இருந்தால் துருப்பிடிக்கும். பயன்படுத்தாத கத்திரிக்கோல், கத்தியின் மேலே இந்த வேஸ்லினை தடவி வையுங்கள். எத்தனை நாள் ஆனாலும் அந்த கத்திரிக்கோல் கத்தி துருப்பிடிக்காமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
புதிய செருப்பு வாங்கி போட்டால், உடனே அது காலை கடிக்கும். அந்த செருப்பு பட்டைக்கு அடிப்பக்கத்தில் கொஞ்சமாக வேஸ்லினை தடவினால் செருப்பு கடிக்காமல் இருக்கும். வேஸ்லினுக்கு பதில் மெழுகுவர்த்தியை எடுத்து அந்த செருப்பு பட்டைக்கு அடி பக்கத்தில் தேய்த்து விட்டு போயிட்டாலும் செருப்பு கடிக்காது.

குறிப்பு 3:
பெண்கள், நிறைய ஜிகு ஜிகு ஜிகினா போட்ட வளையல்களை வாங்கி அணிந்து கொள்வார்கள். ஆனால் அந்த ஜிகினா நம் மேல், நம் ஆடையின் மேல் விழும். நம் மேல் முழுவதும் ஜிகினா உதிர்ந்து, சில சங்கடங்களை கொடுக்கும். இப்படி ஜிகினா வளையலை வாங்கியதும் அதன் மேல் பக்கத்தில் கொஞ்சமாக வேஸ்லினை தடவி விட்டால் ஜிகினா கொட்டாமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
மரத்தால் செய்யப்பட்ட உங்கள் வீட்டு கதவை தூசு போக துடைத்து எடுத்து விடுங்கள். பிறகு இந்த வேஸ்லினை அந்த மரக்கதவில் தடவி விட்டால் உங்கள் மரக்கதவு பழைய கதவாகவாக இருந்தாலும், புதுசு போல ஜொலி ஜொலிக்கும்.

குறிப்பு 5:
சமயத்துல ஷூக்கு போடுற பாலிஷ் தீர்ந்து போய்விடும். கருப்பு ஷூவை பாலிஷ் போட்டு பார்க்கும்போது அழகுதான். ஷூ பாலிஷ் தீர்ந்துவிட்டால் கொஞ்சம் ஷூக்கு மேலே இந்த வேஸ்லினை தொட்டு நன்றாக தடவி விடுங்கள். பாலிஷ் போடாமலேயே உங்கள் ஷூ பலப்பாக மாறும்.

குறிப்பு 6:
உங்ககிட்ட பழைய லெதர் பேக் இருக்குதா. வாங்கிய புதுசில் ஜொலித்த லெதர் பேக், இப்போ டல் அடிக்குதா. ஒரு சின்ன கிண்ணத்தில் ரோஸ் வாட்டர் 1/2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1/2 ஸ்பூன், கிளிசரின் 1/2 ஸ்பூன் ஊற்றி இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து இதை ஒரு துணியில் தொட்டு லெதர் பேக்கை துடைத்து எடுத்தால் லெதர் பேக் அப்படியே புதுசு போல மின்னும்.

குறிப்பு 7:
வாழைப்பழ காம்பின் மேலே கொஞ்சமாக தேங்காய் எண்ணெயை தடவி வைத்தால், வாழைப்பழம் சீக்கிரத்தில் பழுத்துப் போகாமல் இருக்கும்.

- Advertisement -