அடிக்கடி வாடகை வீட்டை மாற்ற வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படுகிறதா? குலதெய்வ கோவிலுக்கு இந்த பொருளை மட்டும் தானம் கொடுத்தால் வசிப்பதற்கு நிரந்தரமான நிலையான ஒரு இடம் கிடைக்கும்.

house
- Advertisement -

வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள், நிலம் வாங்கி அதில் வீடு கட்டத் தொடங்கி, அந்த வீடு முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் பாதியிலேயே நிக்குது என்பவர்கள், வாடகை வீட்டை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது, ஒரு வருடம் கூட ஒரு வாடகை வீட்டில் நிலையாக இருக்க முடியவில்லை என்பவர்கள் எல்லாம் இந்த பரிகாரத்தை செய்யலாம். இப்படி மேல் சொன்ன எல்லா பிரச்சனைக்கும் சேர்ந்தபடியான ஒரு சில பரிகாரங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களால் முடிந்த பரிகாரங்களை செய்யுங்கள்.

முதலில் நீங்கள் வீடு கட்டுவதாக இருந்தால், வீடு கட்ட தொடங்கும் பூமி பூஜை போடக்கூடிய நாளை சரியான நாளாக பார்க்க வேண்டும். சில வாஸ்து நாட்கள் நமக்கு ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வாஸ்து நாளாக பார்த்து பூமி பூஜை போடுவது சிறப்பு. பூமி பூஜை போட்டாகிவிட்டது. சொந்த வீடு கட்டுவதற்கு நாம் நிறைய பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அதாவது கம்பி, செங்கல், மணல், போன்ற பொருட்கள். இந்த வரிசையில் முதலில் நீங்கள் வாங்க வேண்டிய பொருள் மணல். மணலை வாங்கி உங்களுடைய நிலத்தின் தென்மேற்கு மூலையில் முதலில் கொட்டி விடுங்கள். அதன் பின்பு மற்ற பொருட்களை எல்லாம் வாங்க தொடங்கலாம்.

- Advertisement -

இதே போல வீடு கட்டுவதற்கு ஒரு முதலீட்டை நீங்கள் வைத்திருப்பீர்கள் அல்லவா. அந்த முதலீட்டில் இருந்து முதல் பணத்தை எடுத்து விரலி மஞ்சள் வாங்கி குலதெய்வ கோவிலுக்கு தானமாக கொடுத்துவிட்டு பின்பு வீடு கட்டும் வேலையை தொடங்கலாம். உங்கள் வீடு கட்டுமான பணி விரைவாக நடந்து சீக்கிரம் வீடு கட்டி முடிக்கப்படும்.

சூழ்நிலை காரணமாக ரொம்ப நாட்களாக கட்டிய வீடு பாதியிலேயே நிற்கிறது அதை கட்டி முடிக்க நல்ல நேரமே வரவில்லை. கட்டிய வீட்டிற்கு குடிபோக முடியவில்லை என்பவர்கள் உங்களால் முடிந்த மணலை வாங்கி தானம் கொடுக்க வேண்டும். யாருக்கு தானம் கொடுப்பது. குலதெய்வ கோவிலில் ஏதாவது பணி நடந்திருந்தால் அந்த கோவிலுக்கு மணல் தானம் கொடுக்கலாம். பள்ளிக்கூடம் கட்ட, ஆசிரமங்கள் கட்ட இப்படி அடுத்தவர்களுக்கு உதவி கரம் நீட்டும் வகையில் உங்களால் முடிந்த மணலை வாங்கி தானமாக கொடுங்கள். மணல் இன்றைக்கு விற்கும் வலையில் மணல் தானம் செய்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இருப்பினும் உங்களால் முடிந்த மணலை வாங்கிக் கொடுத்துப் பாருங்களேன். உங்கள் கஷ்டத்திற்கு நிச்சயமாக விடிவு காலம் பிறக்கும்.

- Advertisement -

வாடகை வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி வீடு மாற்ற வேண்டிய சூழ்நிலை. என்ன செய்வது. குலதெய்வ கோவிலுக்கு நீங்களும் விரலி மஞ்சள் வாங்கி தானமாக கொடுங்கள். உங்களால் முடிந்த மணலை வாங்கி வீடு கட்டுபவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். அதாவது ரொம்பவும் கஷ்டப்படுபவர்கள், ஓடு வீடு, ஓலை வீடு எல்லாம் கட்டுவார்கள். இப்படிப்பட்டவர்களை தேடி கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம் தான்.

உங்கள் வீட்டின் அருகில் கிராமப்புறங்களில் யாராவது இப்படி இருந்தால் அவர்கள் வீடு கட்டுவதற்கு தேவையான உதவியை நீங்கள் செய்யும் போது உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனை குறையும். இந்த தானம் சீக்கிரமே உங்களை ஒரு சொந்த வீட்டில் அமர வைக்கும். (சில பேருக்கு வீடு மழைக்காலத்தில் ஒழுகும். பழைய கூரையை பிரித்து விட்டு புது கூரை கூட போட முடியாத நிலைமை இருக்கும் தெரியுமா. அப்படிப்பட்டவர்களாக பார்த்து அவர்களுக்கு உதவி செய்யலாம்.) முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -