தொடர் தோல்வியை தடுத்துநிறுத்த இந்த மந்திரத்தை 41 நாட்கள்  உச்சரித்து பாருங்கள்.

oom-manthiram

எவ்வளவுதான் முயற்சி செய்து ஒரு செயலை ஆரம்பித்தாலும், அந்த செயலானது சிலருக்கு தோல்வியில் போய் முடியும். அது வேலை செய்யும் இடத்திலாக இருந்தாலும், சொந்தத் தொழில் செய்யும் இடத்திலாக இருந்தாலும், படிக்கும் மாணவர்களாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் பெண்மணிகளாக இருந்தாலும், தொடர் தோல்வி என்பது ஒருவரை வாழ்க்கையில் பின்னோக்கி தள்ளிவிடும். முயற்சியே செய்யாமல் தோல்வி அடைவது என்பது வேறு. கடினமான முயற்சியை போட்டு தோல்வி அடைவது என்பது வேறு. தொடர் கடின முயற்சியின் மூலம், தொடர் தோல்வியை சந்திக்கும் ஒரு நபரின் மனநிலையானது விரத்தி அடைந்திருக்கும். எந்த ரூபத்திலாவது வெற்றி நம் கண்களுக்குப் புலப்படாத என்ற ஏக்கம் அவர்களிடம் தெரியும். அப்படிப்பட்டவர்களாக இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். இப்படி செய்தால் நல்ல வெற்றியை நிச்சயமாக அடைய முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள் மட்டும் செயல்படுத்தி பாருங்கள். தொடர் தோல்வி நிச்சயம் வெற்றி அடையும்.

swastik symbol benefits tamil

தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து, தீபம் ஏற்றி வைத்த பின்பு உங்களின் அன்றாட வேலையை தொடங்குவதற்கு முன்பு, நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

நினைத்த காரியத்தை தடையின்றி நிறைவேற்றும் வசிய மந்திரம்:

“ஏகம் சௌஜன்யம் சௌகர்யம் சௌபாக்கியம் அனேகம்”

ஏகம- உச்சந்தலை
சௌஜன்யம்-நெற்றி
சௌகர்யம்-தொண்டைக்குழி
சௌபாக்கியம்-நடு மார்பு குழி
அநேகம்-தொப்புள் குழி

- Advertisement -

swastik palan

இப்படி இந்த மந்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையை உச்சரிக்கும் போதும், உங்களது வலது கையில் இருக்கும் ஐந்து விரல்களின் நுனியையும் அந்தந்த இடத்தைத் தொட வேண்டும். இந்த முறையில் இந்த மந்திரத்தை உச்சரிக்க நீங்கள் அமரும் திசை கிழக்கு பக்கமாக இருக்கவேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் செயல்படுத்தி பார்க்கலாம். நிச்சயமாக தொடர் தோல்வியை சந்தித்த உங்களது முயற்சிகள் வெற்றியை தொடும்.

எப்படிப்பட்ட மந்திர தந்திர முறையை பிரயோகம் செய்தாலும், அதோடு சேர்த்து அந்த இறைவனையும் மனதார வேண்டிக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைய ஆஞ்சநேயரை மனதார நினைத்து செந்தூரத்தை கையில் தொட்டு ‘ஓம் ஆஞ்சநேயாய நம’ என்ற மந்திரத்தை 11 முறை சொல்லி செந்தூரத்தை கீழிருந்து மேல் பக்கமாக, திலகமாக வைத்துக் கொள்வது எப்படிப்பட்ட தடையையும் நீக்கி வெற்றிப் பாதையில் செல்ல துணையாக நிற்கும்.

இதையும் படிக்கலாமே
ஏழுமலையானின் ஏழுமலைகளுக்கான மந்திரம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vasiya mantra in Tamil. Vasiya manthiram in Tamil. Vasiyam manthiram eppadi. Vasiyam seivathu eppadi tips Tamil.