- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாஸ்து பகவானின் அருளை பெற செய்ய வேண்டிய வழிபாடு

வாஸ்து பகவானின் அருளை பெற செய்ய வேண்டிய வழிபாடு

- Advertisement -

பலரும் சொந்த வீடு கட்டிக் குடியேற வேண்டும் என்பதை கனவாகவே வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட கனவை நினைவாக்குவதற்கு கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்து கட்டிய வீடாக வாங்கலாம் அல்லது முதலில் இடத்தை வாங்கி வைத்து பிறகு வீடு கட்டியும் குடியேறலாம். ஆனால் இது அனைவருக்கும் நடைபெறாது. பலருக்கும் இதில் பலவிதமான தடைகள் உண்டாகும். அந்த தடைகளை நீக்கி விரைவிலேயே சொந்த வீடு கட்டுவதற்கு வாஸ்து நாள் அன்று செங்கலை வைத்து செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வாஸ்து பகவானின் அருளை பெற

வாஸ்து பகவான் கண்விழித்து இருக்கக் கூடிய நேரத்திலோ அல்லது நாளிலோ நாம் வாஸ்து பகவானை நினைத்து எளிமையான முறையில் வழிபாடு செய்வதன் மூலம் வாஸ்து பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். நம் வீட்டில் வாஸ்து பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்களும் விலகும். சொந்த வீடு அமையாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு விரைவிலேயே சொந்த வீடு அமையும். வாஸ்து தோஷம் நீங்குவதற்கு ஒரு வழிபாடு இருப்பது போலவே சொந்த வீடு அமைவதற்காக வாஸ்து பகவானை வழிபாடு செய்யும் முறையும் இருக்கிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரம் ஆன காலை 4 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்யலாம் அல்லது பகல் 10:30 மணியிலிருந்து 12 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு நாம் புதிதாக ஒரு செங்கலை வாங்க வேண்டும். வாங்கிய இந்த செங்கலை மஞ்சள் கலந்த நீரில் சுத்தம் செய்து வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த புதிய செங்கலுக்கு முழுவதும் மஞ்சளை தடவி அதற்கு நான்கு மூலையிலும் குங்குமத்தை வைத்து நடுவிலும் குங்குமத்தை வைக்க வேண்டும். அந்த குங்குமத்திற்கு மேல் புனுகை தடவிக் கொள்ளுங்கள். புனுகிற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அடுத்ததாக புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை இரண்டாக நறுக்கி ஒரு பாதியில் மஞ்சளையும் மற்றொரு பாதியில் குங்குமத்தையும் வைத்து செங்கலின் இரண்டு புறத்திலும் அதாவது தீபத்திற்கு இரண்டு புறத்திலும் வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக பொறி அல்லது நெல்லை கையில் வைத்துக்கொண்டு முதலில் குலதெய்வத்தை மனதார நினைத்து “ஓம் குலதெய்வமே நம” என்று 27 முறை கூறி பொறியை கல்லில் தூவி அர்ச்சனை செய்ய வேண்டும். அடுத்ததாக “ஓம் வாஸ்து தேவனே நமோ நம” என்னும் மந்திரத்தையும் 27 முறை கூறி பொறியால் செங்கலுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிறகு தேங்காய் உடைத்து முழுமனதோடு வழிபாடு செய்து உங்களுடைய வேண்டுதலை முன்வைக்க வேண்டும். வாஸ்து நாள் அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்வதும் மிகவும் சிறப்புக்குரியது. வாராகி அம்மன் பூமி தேவியாக திகழக்கூடியவர். அதனால் வாஸ்து நாள் அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்து வாராகி அம்மனிடம் நிலம் தொடர்பான வேண்டுதலை முன்வைக்க விரைவிலேயே நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே:சொந்த வீடு அமைய வாஸ்து நாள் அன்று செய்ய வேண்டிய வழிபாடு

சொந்த வீடு கட்டும் கனவு நினைவாவதற்கு எந்த அளவிற்கு நம்முடைய முயற்சியும் உழைப்பும் வேண்டுமோ அந்த அளவிற்கு கடவுளின் அருளும் வேண்டும். வாஸ்து நாள் அன்று இந்த முறையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது சொந்த வீடு கட்டுவதற்குரிய முயற்சிகள் வெற்றி அடையும் விரைவிலேயே சொந்த வீடு குடியேறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்