வாஸ்து தோஷங்கள் நீங்க பஞ்சபூதங்களுக்கு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களை ஆட்டிப்படைக்கும் வாஸ்து தோஷம் நீங்கி நல்ல காலம் துவங்கும்

vasthu
- Advertisement -

வாஸ்து என்பது சிறிய வார்த்தை என்றாலும் இது செய்யும் செயல்கள் மிகப்பெரிய அளவில் இருக்கின்றன. வாஸ்து பிரச்சனை இருக்கும் ஒரு வீட்டில் நிம்மதி என்பது துளிகூட இருக்காது. இந்த வாஸ்து தோஷம் அரசனையும் ஆண்டியாக்க கூடியது. சுபநிகழ்ச்சிகளை நடக்காமல் தடைசெய்வது, ஒரு படி ஏறினால் மூன்று படி சறுக்கும் நிலைமை கொடுப்பது, தொழிலில் லாபம் கிடைக்காமல் இருப்பது இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு வீட்டின் அமைப்பு சரியாக இருந்தால் மட்டுமே அந்த குடும்பத்திற்கான சுபிக்ஷங்கள் கிடைக்கின்றன. இவ்வாறு வீட்டில் உள்ளவர்களின் மகிழ்ச்சியை பொருத்துதான் குடும்பம் இருக்கிறது. எனவே குடும்பம் செழிக்க தடையாக இருக்கும் இந்த வாஸ்து பிரச்சினையை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

home

வாஸ்து என்பது ஒரு கட்டிடத்தின் உயிரோட்டத்தை குறிப்பிட்டு சொல்லப்படும் சொல்லாகும். கட்டிடத்திற்கு உயிர் உள்ளதா? என்று கேட்டால் புதியதாக கட்டப்படும் ஒரு கட்டிடத்திற்கு ஜாதகம் எழுதி, ஆயுள் குறித்த காலங்களும் உண்டு. இன்றளவிலும் சில இடங்களில் இதனை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அவ்வாறு கட்டிடத்திற்கும் உயிர் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

ஒரு கட்டிடத்தில் பஞ்ச பூதங்களின் சேர்க்கை அனைத்தும் ஒன்றாக அமைந்து, சரியாக இருந்தது என்றால் அந்த வீட்டில் அனைத்தும் சரியாகவே இருக்கும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு இருந்தாலும் அந்த வீட்டில் அனைத்தும் பிரச்சனையாகவே மாறிவிடும். பஞ்ச பூதங்கள் என்றால் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு போன்றவைகளாகும்.

panjabootham

இவ்வாறு பஞ்ச பூதங்களும் சரியாக அமைந்து ஒரு கட்டிடத்தின் அமைப்பாக உருவெடுப்பது தான் வாஸ்து எனப்படுகிறது. வாஸ்து என்பவர் வாஸ்து புருஷன் என்று ஒரு தெய்வமாக பார்க்கப்படுகிறார். ஆனால் உண்மையில் அவர் ஒரு பூதம் ஆவார். சிவ பெருமானின் வியர்வை துளியில் இருந்து பூமியில் விழுந்த ஒரு துளி தான் இந்த வாஸ்து பூதம். பூமியில் புதியதாக கட்டிடங்கள் கட்டப்படும் பொழுது இந்த வாஸ்து விற்கு பூஜை செய்து அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் சிவபெருமானால் பணிக்கப்பட்ட விதியாகும்.

- Advertisement -

எனவே ஒரு வீட்டில் பஞ்சபூதங்களினால் உண்டாகும் பிரச்சனையை சரிசெய்ய இந்த பஞ்சபூதங்களின் தலையாய கடவுளான சிவபெருமானை சரணாகதி அடைய வேண்டும். அவ்வாறு சிவபெருமான் இருக்கக்கூடிய பஞ்சபூத கோவில்களான காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருஆனைக்காவல், திருக்காளஹஸ்தி, சிதம்பரம் இந்த கோவில்களுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டு வருவதன் மூலம் வாசு தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.

meditation

அடுத்ததாக ஒரு வீட்டில் குடியிருக்கும் குடும்பத்தினரில் எவரொருவர் வயதில் மூத்தவரொ அவர் வீட்டின் ஈசானிய மூலையில் அமர்ந்து கொண்டு கண்களை மூடி காஸ்மிக் முத்திரையை வைத்து தியானம் செய்ய வேண்டும். இந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் விலகி நேர்மறை சக்திகள் குடிகொள்ள வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டினுள் காஸ்மிக் எனர்ஜி பரவி வாஸ்து தோஷம் நீங்கிவிடும். அடுத்ததாக வெள்ளிக்கிழமை தோறும் அம்பாளுக்கு விரதம் இருந்து தொடர்ந்து பூஜைகள் செய்து வருவதன் மூலம் வாஸ்து தோஷத்தில் இருந்து தப்பிக்க முடியும். இவை அனைத்தையும் விட வீட்டின் வாசலில் ஒரு விநாயகர் சிலையை வைத்து விட்டால் எந்த ஒரு வாஸ்து தோஷமாக இருந்தாலும் அவை நிவர்த்தியாகிவிடும்.

- Advertisement -