வீட்டில் இருக்கும் தீராத பண கஷ்டத்திற்கு வாஸ்து தோஷம் ஒரு பிரச்சனையாக உள்ளதா? எவ்வளவு பெரிய வாஸ்து பிரச்சனையையும் சரி செய்யும் ஒரு டம்ளர் தண்ணீர்.

- Advertisement -

நிறைய பேர் வாடகை வீட்டில் குடி இருக்கிறார்கள். நிறைய பேர் சொந்த வீட்டில் குடியிருக்கிறார்கள். குடியிருக்க கூடிய வீட்டில் வாஸ்து பிரச்சனையால் பணக்கஷ்டம் இருக்கும். என்ன செய்வது. சிலர் அந்த வாஸ்து பிரச்சினையை கண்டுபிடித்து உடனடியாக சரி செய்து விடுவார்கள். சில பேரால் பிரச்சனையை கண்டுபிடிக்க தான் முடியும். ஆனால் அதை சரி செய்யக்கூடிய வாய்ப்பு அமையாது. சரி செய்ய முடியாத வாஸ்து தோஷம் உங்களுடைய வீட்டில் குடும்பத்தில் பண பிரச்சனை, மன கஷ்டம், சுப காரியத்தடை, சண்டை சச்சரவு போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து கொடுத்து விடும். அந்த வாஸ்து தோஷத்தில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டிய ஒரு சில ஜோதிட பரிகாரங்களை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த எளிய பரிகாரங்களை தொடர்ந்து பின்பற்றி வந்தாலே வாசுதோஷத்தால் ஏற்படும் கஷ்டத்தில் இருந்து குடும்பம் காப்பாற்றப்படும்.

முதல் விஷயம் இறைவழிபாடு. வீட்டில் இருக்கக் கூடிய வாஸ்து தோஷத்தால் குடும்பத்திற்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது என்று தினமும் குலதெய்வத்திடமும் அந்த ஈசனிடமும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு பரிகாரத்தை மேற்கொள்ளலாம். வீட்டின் தென்மேற்கு மூலையில் ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, கல்லுப்பு போட்டு நன்றாக கரைத்து விட வேண்டும். இந்த டம்ளர் தண்ணீரை திறந்தபடி தென்மேற்கில் வைத்து விட்டால் வீட்டில் இருக்கக்கூடிய பண பிரச்சனைக்கு விடிவுகாலம் பிறக்கும்.

- Advertisement -

இதே போல ஒரு கண்ணாடி டம்ளரில் நல்ல தண்ணீரை ஊற்றி, சிறிதளவு கருப்பு எள் போட்டு அந்த தண்ணீரை வீட்டிற்கு வெளிப்பக்கத்தில் எங்காவது வைக்க வேண்டும். நிலை வாசலுக்கு நேராக மட்டும் வைக்கக்கூடாது. உங்கள் வீட்டுத் தோட்டம், பால்கனி, கொள்ளை பக்கம், என்று இந்த பிரபஞ்சத்தை பார்த்தவாறு இந்த தண்ணீரை வைத்தால் குடும்பத்தில் நல்லது நடக்கும். எள்ளு என்பது சனி பகவானை குறிப்பது. அந்த தண்ணீர் சந்திர பகவானை குறிப்பது. இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றிணைந்து பிரபஞ்சத்தை பார்த்தவாறு இருக்கும்போது, வீட்டில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு விடிவு காலம் பிறக்கும்.

அதேபோல ஒரு வீட்டில் வரவேற்பு அறையில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். அப்படி என்றால் வரவேற்புரை அசுத்தமாக வைத்திருக்காதீர்கள். அதில் வீட்டில் இருப்பவர்களுக்கு மன குழப்பத்தை கொடுத்து விடும். குறிப்பாக பெண்களுக்கு. வீட்டு வரவேற்பறையை தினந்தோறும் காலை எழுந்தவுடன் கூட்டி சுத்தம் செய்து விடுங்கள். மாலை ஒரு முறையும் கூட்டி சுத்தம் செய்து விடுங்கள். வரவேற்பறையில் வைத்திருக்கக்கூடிய பொருட்களை வாரம் ஒரு முறையாவது தூசி இல்லாமல் துடைத்து சுத்தபத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வரவேற்பு அறையில் ஏதேனும் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தி, துர் சக்தி அல்லது கண் திருஷ்டி விழுந்து, அந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தாலும் குடும்பத்தில் குழப்பம் வரும். அப்போது அந்த இடத்தை சரி செய்ய, அதாவது வரவேற்பு அறையில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை முழுமையாக சுத்தம் செய்ய எருக்கன் பூவை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இந்த எருக்கன் பூ எதிர்மறை ஆற்றலை எல்லாம் தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். உங்களுக்கு மீன் வளர்ப்பது பிடிக்கும் என்றால் சின்ன தொட்டியில் சிவப்பு வண்ண மீன்களை வளர்த்தாலும், வரவேற்பு அறையில் எந்த தோஷமும் இருக்காது. வீட்டில் சந்தோஷம் வரும்.

மேலே சொன்ன பரிகாரங்களில் உங்களால் ஏதாவது ஒன்றை செய்ய முடியும் என்றாலும் செய்யுங்கள். தவறு கிடையாது. எல்லா பரிகாரங்களுமே செய்ய முடியும் என்றாலும் செய்யலாம். அதிலும் எந்த தவறும் கிடையாது. ஆனால் இப்படி டம்ளரில் வைக்கப்படக்கூடிய தண்ணீரை வாரத்திற்கு ஒரு முறை கால் படாத இடத்தில் வீட்டிற்கு வெளியே கொண்டு போய் ஊற்றி விட வேண்டும். எதிர்மறை ஆற்றல் அந்த தண்ணீரோடு உங்கள் வீட்டை விட்டு விலகும். நிச்சயமாக ஒரு சில நாட்களில் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷத்திற்கு முழுமையாக விடிவு காலம் பிறக்கவில்லை என்றாலும், உங்களுடைய பிரச்சனைகள் படிப்படியாக குறைவதை கண்கூடாக காண்பீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பயன்பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -