- Advertisement -

வாஸ்து நாள் மந்திரம்

- Advertisement -

பொதுவாக வாஸ்து செய்வதற்கும், வாஸ்து நாட்களுக்கும் என்ன செய்ய வேண்டும்? என்பது பலருக்கு தெரியாது. நம் வீட்டில் இருக்கும் சிறு சிறு வாஸ்து குறைகளை நீக்கவும், அதனால் வரக்கூடிய பிரச்சினைகளை தடுக்கவும் இந்த வாஸ்து நாட்களில் வாஸ்து பகவான் மந்திரத்தை உச்சரிக்கலாம். பூமி தொடர்பான பிரச்சனைகள் தீரவும், வாஸ்து நாட்களில் இந்த மந்திரத்தை சொல்லலாம். வாஸ்து நாளில் சொல்லக்கூடிய மந்திரம் பற்றிய வாஸ்து சார்ந்த தகவல்களை தொடர்ந்து இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

நாளை காலை 9:58 மணி முதல் 10:34 மணி வரையிலான நல்ல வாஸ்து நாளில், வாஸ்து ரீதியான பிரச்சனைகளை சரி செய்வதற்கு உகந்ததாகும். வீட்டை வாஸ்து படி மாற்றி அமைப்பது, புதிய வீடு கட்டுபவர்கள் வாஸ்து பார்ப்பது, வாஸ்து நிபுணர்களை அணுகுவது போன்ற விஷயங்களை இந்த நாளில் செய்யலாம். இதெல்லாம் சாதாரணமாக எல்லோரும் வாஸ்து நாட்களில் செய்யக்கூடியது.

- Advertisement -

வாஸ்து நாளில் புதிதாக வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களும், வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும் அல்லது நிலம் வாங்க வேண்டும், இருக்கின்ற வீட்டை ஆல்ட்ரேஷன் செய்ய வேண்டும், புதிய வீடு மாற்ற வேண்டும் அல்லது நிலத்தகராறு தீர வேண்டும் என்று இப்படியான பூமி சார்ந்த பிரச்சனைகளை நீங்கள் எதிர் கொண்டு வந்தால், வாஸ்து நாளில் இந்த மந்திரத்தை உச்சரிக்க, உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வாஸ்து பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் வாஸுதேவாய வித்மஹே!
வாஸு புத்திராய தீமஹி!
தன்னோ வாஸ்து ப்ரசோதயாத்!!!

- Advertisement -

இந்த மந்திரத்தை வாஸ்து நாட்களில் வீட்டை நன்கு துடைத்து சுத்தம் செய்துவிட்டு 108 முறை ஜெபிக்க வேண்டும். வாஸ்துவில் முதல் பிரச்சனையாக சொல்லப்படுவது, வீட்டில் இருக்கக்கூடிய தூசுகள், குப்பைகள் அகற்றாமல் இருப்பது தான். வீட்டை முதலில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒட்டடைகள் படிந்திருப்பது, மூலை முடுக்குகளில் எல்லாம் குப்பைகளை சேர விடுவது போன்ற விஷயங்களை செய்பவர்கள் இடத்தில் வாஸ்து பகவான் குறைகளை வைத்து விடுகிறார். நான்கு திசையின் மூலைகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
செவ்வாய்க்கிழமை வளர்பிறை அஷ்டமி திதி பரிகாரம்

வாஸ்து சாஸ்திரம் எந்த வீடு சுத்தமாக, பவித்ரமுடன் இருக்கிறதோ, அந்த வீட்டில் எத்தகைய கோளாறுகள் இருந்தாலும், அதுவே நிவர்த்தி ஆகும் என்று சொல்லுகிறது. மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது வீட்டை ஒட்டடை எல்லாம் அடித்து சுத்தமாக வைத்திருங்கள். வீட்டை சுற்றிலும் பசுமையான மரம், செடிகளை வளர்த்து வாருங்கள். இதுவே பெரும்பாலான வாஸ்து தோஷங்களை நீக்கிவிடும். வாஸ்து நாட்களில் மேற்கூறிய வாஸ்து பகவானுடைய காயத்ரி மந்திரத்தை 108 முறை சுத்தம் செய்த பின்பு, பூஜை அறையில் வாஸ்து பகவானை நினைத்து, மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அன்றைய நாள் பூஜை அறையிலும், வாசலிலும் வண்ணக் கோலங்கள் போட்டு வையுங்கள். இது வாஸ்து பகவானை மகிழ்ச்சி படுத்தும். வாஸ்து பகவானின் இந்த மந்திரத்தை தொடர்ந்து வாஸ்து நாட்களில் சொல்லி வர, பூமி சார்ந்த பிரச்சனைகள் தீரும். வீட்டில் உடைந்த சாமி படங்களை வைத்திருக்காதீர்கள். அதன் கண்ணாடி, பிரேம் போன்றவற்றை எடுத்துவிட்டு, உள்ளே இருக்கும் படத்தை மட்டும் ஓடும் நீரில் விட்டு விடுங்கள். இதனால் வாஸ்து தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

சற்று முன்