இத மட்டும் செஞ்சு பாருங்க வீட்டில் பண பிரச்சினையே இருக்காது

gold-lakshmi

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் ஆடம்பரமாய் வாழ ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் அது எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. அன்றாடம் தூக்கம் மறந்து, உணவை மறந்து ஓடிக்கொண்டிருப்பது இந்த பணத்திற்காக தானே? எவ்வளவுதான் சம்பாதித்தாலும் இருப்புக்கு ஏற்றவாறு செலவும் வந்து கொண்டே இருக்கிறதா? பணம் உங்கள் கையில் தங்க வில்லையா? எனில் வாஸ்து பரிகாரம் செய்ய வேண்டி இருக்கலாம். இதையெல்லாம் கடைப்பிடித்து பாருங்கள் நிச்சயம் உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்கும். வீட்டில் சிறு சிறு மாற்றங்களைச் செய்தாலே லட்சுமிதேவியின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.

lakshmi kubera

வீட்டில் உள்ள எல்லா அறைகளை காட்டிலும் படுக்கை அறை தான் மிகவும் முக்கியமான அறை. படுக்கை அறையில்தான் நாம் பீரோவை வைக்கிறோம். மகாலட்சுமி வாசம் செய்யும் இடத்தில்தான் அதிர்ஷ்டமும் செல்வமும் குடிகொண்டிருக்கும். அப்படிப்பட்ட அந்த அறையில் சுவர்கள் சிதிலம் அடைந்திருந்தாலும், விரிசல் விழுந்து இருந்தாலும் அதை உடனுக்குடன் சரி செய்து விடுவதுதான் நல்லது. இல்லை எனில் அதன் மூலம் துரதிருஷ்டம் பரவும் நிலை ஏற்படலாம். எனவே அப்படிப்பட்ட சுவர்களை அவ்வபோது சரிசெய்து கொள்ளுங்கள். சுவர்களில் அடிக்கப்பட்டிருக்கும் வர்ணப்பூச்சுகள் ஆங்காங்கே உதிர்ந்து இருந்தாலும் அதனை பண்படுத்திக் கொள்ளுங்கள்.

நகை பணம் முதலியவற்றை சேமித்து வைக்கும் லாக்கர் அல்லது பீரோ வடதிசையை பார்க்கும்படி இருக்கிறதா? என்பதை கவனியுங்கள். அதுபோல பூஜை அறை வடகிழக்கு திசையை பார்க்கும்படி அமைந்திருக்கிறதா? என்பதையும் சரி பார்த்து அதனை உடனே சரி செய்து விடுங்கள். பூஜைஅறையில் போடப்பட்டிருக்கும் விளக்கானது வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில்தான் இருக்க வேண்டும்.

பஞ்சபூதங்களில் முதன்மையானது நீர்தான். வீட்டில் உள்ள குழாய்களில் இருந்து தண்ணீர் வீணாவதை சரி செய்யுங்கள். நீரின்றி அமையாது உலகு என்ற வார்த்தைக்கு ஏற்ப நீரின் அவசியத்தை உணர்ந்து கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். தண்ணீர் வீணாவதை போல் கையில் இருக்கும் செல்வமும் வீணாகிக் கொண்டேதான் இருக்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் இருப்பிடம் சமுத்திரம் ஆதலால் சமுத்திரத்தில் இருந்து கிடைக்கும் கிளிஞ்சல்கள் உங்கள் பூஜை அறையில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டமும் செல்வமும் பெருகுமாம். அதுபோல் மஹாலக்ஷ்மியின் யந்திரம் பதித்த தகட்டினை பூஜை அறையில் வைத்து இருந்தாலும் உங்களது செல்வ வளம் குன்றாமல் இருக்கும்.

- Advertisement -

இயற்கை சக்திகளில் இருந்து கிடைக்கும் மரத்தாலான பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அது சரியான முறையில் இருக்கிறதா என்று சரி பாருங்கள் ஏனெனில் வீட்டில் உள்ள மரப் பொருட்கள் உடைந்திருந்தாலோ, அல்லது சேதம் அடைந்திருந்தாலும் அதனை உடனே மாற்றி விடுங்கள். அதனால் எதிர்வினை ஆற்றல் நிகழும் வாய்ப்புகள் அதிகம். உடைந்த கண்ணாடியை எப்படி வீட்டில் வைத்திருக்க கூடாதோ அதேபோல மரப்பொருட்கள் சரியாக இருக்க வேண்டும்.

mahalakshmi

பச்சைக் கற்பூரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். கோயில்களில் தரும் தீர்த்தங்களில் இந்த பச்சை கற்பூரத்தை தான் கலந்து நமக்கு அளிக்கிறார்கள். அதனால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடலும், உள்ளமும் தூய்மையாவதாக நம்பப்படுகிறது. அத்தகைய பச்சை கற்பூரத்தை கடைகளில் வாங்கி வீட்டின் பூஜை அறையில் எப்போதும் வைத்திருப்பதன் மூலம் பல நன்மைகளை அடையலாம்.

இதையும் படிக்கலாமே
இது போன்ற மேலும் பல ஆன்மிக தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.