வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்து எப்பொழுதும் மன அமைதியும், வளமான வாழ்க்கையும் கிடைக்க இந்த மரம் மற்றும் செடியை வீட்டின் எந்த திசையில் வளர்க்க வேண்டும் தெரியுமா?

vasthu
- Advertisement -

இயற்கையைப் பார்த்து ரசிப்பது எப்பொழுதும் மனதிற்கு இதமான சூழலை கொடுக்கிறது. இதற்காக நாம் வெளியில் சென்றுதான் இயற்கையை ரசிக்க வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் கிடையாது. வீட்டிலேயே நாம் வளர்க்கக்கூடிய செடிகளைப் பார்த்தாலே ஒருவித புத்துணர்ச்சி மனதிற்குள் தோன்றிவிடும். இயற்கை நமக்கு வரமாக கொடுத்த செடிகளும், மரங்களும் மனித வாழ்க்கையில் பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. இவ்வாறான செடிகளை வளர்ப்பதற்காக வீட்டில் தோட்டம் அமைக்கும் பொழுது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். நமது வாழ்க்கை எந்தவித சிக்கலுமின்றி வளமுடன் இருக்க சில வாஸ்து சாஸ்திரங்களை பின்பற்றி முறையாக தோட்டம் அமைக்க வேண்டும். அவ்வாறு வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் எந்தவிதமான செடிகளை எந்தெந்த திசைகளில் வைத்து வளர்க்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்தப் பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு ஆரோக்கியமான செடி உடல் அளவிலும் மனதளவிலும் நமக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கிறது என்று நம்முடைய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. மரம் மற்றும் செடிகளின் தோற்றத்திற்கு பெற்றதாகவும், அதன் குண நலன்களுக்கு ஏற்றதாகவும் அவற்றின் இருப்பிடம் அமைய வேண்டும். வீட்டில் இருக்க வேண்டிய புனிதமான செடி மற்றும் மரங்கள் பற்றியும் வீட்டின் அமைப்பு பற்றியும் பல வழிகாட்டுதல்கள் வாஸ்துவில் இடம்பெற்றுள்ளன. வாஸ்து என்பது அறிவியல் என்பதால் ஒவ்வொரு வாஸ்துவிற்கும் தனித்தனியான விஞ்ஞான விளக்கம் இருக்கும். இதனை விளக்கமாக தெரிந்து கொண்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டு தோட்டம் அமைக்க ஏற்ற திசைகள்:
தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் செடிகளும், மரங்களும் வைத்து வளர்ப்பதினால் வீட்டில் எப்போதும் ஆரோக்கியமான சூழல் நிலவி கொண்டிருக்கும்.

வீட்டின் தென்மேற்கு பகுதியில் உயரமாக வளரும் மரங்களை வைத்து வளர்ப்பதினால் அவை எவ்வாறு உயர உயர வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே போல நமது குடும்பத்தின் சூழ்நிலையும் வளமாக உயர்ந்து கொண்டே செல்லும்.

- Advertisement -

ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் செடி மற்றும் மரங்கள் வைப்பதை கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். வாஸ்துவின் படி அது சிறப்பான அம்சத்தை கொடுப்பதில்லை.

வீட்டில் வளர்க்க வேண்டிய செடி மற்றும் மரங்கள்:
பூச்செடிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை தாராளமாக உங்கள் வீட்டில் வளர்க்கலாம். அவற்றிலிருந்து வரும் வாசனை எப்பொழுதும் உங்கள் வீட்டை மங்களகரமாக வைத்திருக்கும்.

- Advertisement -

அதுபோல மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய துளசி செடி, மணி பிளான்ட், மாமரம், பலா மரம், நெல்லிக்காய் மரம், வேப்பமரம், மாதுளை மரம், தென்னை மரம், பாக்குமரம், கொன்றை மரம் மற்றும் நார்த்தங்காய் மரம் போன்றவற்றை வீட்டில் வைத்து வளர்க்கலாம். இவற்றை வளர்ப்பதினால் எப்பொழுதும் உங்கள் வீடு தெய்வ கடாட்சம் நிறைந்ததாக இருக்கும்.

அதுபோல் மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி, வெற்றிலை, கற்றாழை, நித்தியகல்யாணி போன்ற செடிகளையும் தாராளமாக வீட்டில் வைத்து வளர்க்கலாம். இவற்றில் மருத்துவ பலன்கள் பல உள்ளன.

செடி மற்றும் மரங்களை வீட்டில் வைத்து வளர்ப்பதன் மூலம் சுவாசிப்பதற்கு சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவற்றில் இருக்கும் மருத்துவ குணங்கள் காற்றுடன் கலந்து வருவதனால் இயற்கையாகவே உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இவற்றிலிருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல் உங்கள் வீட்டிற்குள் வரும் எதிர்மறை ஆற்றலை அழித்து எப்பொழுதும் வீட்டிற்குள் நல்ல சூழ்நிலையை நிலவச் செய்கிறது.

- Advertisement -